குருபெயர்ச்சி
நாம் அறிந்து கொள்ள வேண்டிய
முக்கிய வேறுபாடு
நவகிரக குரு பகவானுக்கும்
குரு தெட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் அறிந்து கொள்வோம்
குருபெயர்ச்சி என்பது ஒன்பது நவக்கிரகங்களின் ஒன்றாக வீற்றிருக்கும் குரு பகவான் அவர்களுக்கு தான்..
அதற்கு மாறாக சிவன் கோவிலில் தென்னோக்கி தவம் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சுவாமிக்கு குரு பெயர்ச்சி அல்ல
தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு.
குரு பகவான் என்பவர் வேறு.
இருவரும் ஒருவரல்ல.
ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும்
குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.
இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.
தெட்சிணாமூர்த்தி சிவகுரு,
குரு தேவகுரு.
தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.
சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,
குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...
தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.
சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.
அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.
இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.
அதுவும் தவறு.
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.
எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
குரு பெயர்ச்சி தென்குடி திட்டை ஆலயத்தில் தான் ஒன்பது நவக்கிரகங்களின் ஒன்றான குரு பெயர்ச்சி வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது
ஆனால் ஆலங்குடியில் சிவனுக்கு தென்பகுதியில் தவ கோலத்தில் வீற்றிருக்கும் தெட்சிணாமூர்த்தி சுவாமிக்கு குரு பெயர்ச்சி அன்று அபிசேகம் ஆராதனை செய்து விழா எடுக்கும் நிலை தவறு?
நவக்கிரக குரு பகவான் அவர்களுக்கு தான் குரு பெயர்ச்சி ஆனால் எல்லோரும் சிவ சன்னதியில் தெற்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பெயர்ச்சி என்று அபிசேகம் ஆராதனை செய்து வருகிறார்கள்.
கோவில் அர்ச்சகர் முதல் பிரபல ஜோதிடர் வரை பொதுவாக பலரும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களின் ஒன்றான குருபகவானும் ஒன்று என்றே நம்பி வருகிறார்கள்.
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு நடத்தும்போது குரு பகவானுக்கு உரிய ஸ்தோஸ்திரங்க்ளும் சொல்லப்படுவது உண்டு.
ஆனால் உண்மையில் தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், அதுபோல தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, என்றும் சிவகுரு என்றும் அன்றும் கூறப்படுகிறது.‘
64 சிவவடிவங்களில் ஒருவராக தட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஞானத்தின் வடிவாக இருக்கும் அவரை வழிபட்டால் அறிவும், தெளிவும், ஞானமும் பிறக்கும் என்பது நம்பிக்கை. இவர் தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.
அதே நேரத்தில் குருபகவான்என்பது ஒன்பது கிரங்களில் ஒன்றான கிரக வடிவம் என்றும், அவர் ஒரு பிரகஸ்பதி, அதிகாரி என்றும், தேவகுருவாகவும் பாவிக்கப்படுகிறார்.
தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்.
குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.
சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்.
குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
ஆகவே, தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக மட்டுமே (சிவகுருவாக) வழிபடுங்கள்.
சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கொண்டை கடலை மாலை, சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு. ஆனால் ஒருசிலர் அதில் தவறு இல்லை என்றும், தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குரு என்று சொல்கிறார்கள்.
ஆன்மிகப்படி அது தவறு என்றே கூறப்படுகிறது. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.
ஆகவே தட்சிணாமூர்த்தியை அவரது சன்னதியிலும், குருபவானை அவர் அமர்ந்துள்ள நவக்கிரக சன்னதியிலும் வழிபட்டு வாழ்வை மெருகேற்றுங்கள்…
சிவ குருவான தட்சிணாமூர்த்தியை ஒருவர் வழிபடுவதன் மூலம் ஏராளாமான பலங்களையும் புண்ணியங்களையும் பெற்று வாழ்வில் சிறக்க முடியும்
இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் தான் ஆலங்குடியில் குருபெயர்ச்சி அன்று நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கு வழிபாடு செய்யாமல் தெற்கு நோக்கி வீற்றிருக்கும் தெட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு அபிசேக ஆராதனை செய்கிறார்கள்
இதெல்லாம் யாரும் கேட்பது இல்லை
குரு பரிகார தளத்திலேயே இந்த குளறுபடி நடக்கிறது
இதை பற்றிய விழிப்புணர்வை ஆலங்குடி ஆலயத்தில் ஆன்மீக பெரியோர்கள் செய்ய வேண்டும்.
அதனால் தென்குடி திட்டை ஆலயத்தில் தான் குரு பெயர்ச்சி வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா இன்று நடக்கிறது
நவக்கிரக பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.
குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்பது பழமொழி. பிரளய காலத்திலும், அழியாத பெருமை உடையது திட்டை திருத்தலம். இந்த கோவில் ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்க பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். தானே தோன்றிய சுயம்பு மூர்த்திக்கு வசிஷ்டர் வந்து தவம் செய்து உருவேற்றியதால் வசிஷ்டேஸ்வரர் எனப்பெயர் ஏற்பட்டது.
நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர் குருபகவான். ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குரு. எனவே, குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லா சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவருக்கு ஆண்டு தோறும் குருபெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும்,குரு பரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவது வழக்கம். எனவே அவருக்கு ஆண்டளப்பான் என்ற பெயரும் உண்டு.
நவக்கிரக பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பரிகார ஹோமங்கள் செய்வதும் அவற்றில் பங்கேற்பதும் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இதன் சிறப்பை உணர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திட்டைக்கு வந்து பரிகாரஹோமங்கள் செய்து செல்கின்றனர்.வேறு இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதை விட குருபகவான் சன்னதியில் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வது மிகுந்த நற்பலன்களை தரும். இந்த ஹோமங்களில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். குருபெயர்ச்சியை யொட்டி இன்று திட்டை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அரக்கர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
குருபெயர்ச்சி விழாவை யொட்டி
பாபநாசம் அருகில் இருக்கும் திட்டை குரு பகவான் கோவிலுக்கு தஞ்சையில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அவசியம் தென்குடி திட்டை ஆலயத்தில் சென்று அனைவரும் குரு பெயர்ச்சி வழிபாடு செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தில்
1) நவகிரகம்
2) திட்டை நவகிரக குருபகவான்
3) ஆலங்குடி குரு தெட்சிணாமூர்த்தி