சிவராத்திரியின் இரவின் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips

 Maha Shivratri 2024: மகா சிவராத்திரி அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்க..  சிவனின் அருளால் செல்வம் பெருகும்.. | Maha Shivratri 2024: Donate These  Things To Bring Good Fortune ...

 

சிவராத்திரியின் இரவின் ரகசியம்

-------------------------------------------------------------

"லூமினிபெரஸ் ஈதர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும்.

இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் நமக்கு அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

mahashivratri 2024 significance : மகா சிவராத்திரி 2024 நாளில் 300  ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும் நான்கு அபூர்வ யோகங்கள்

ஆன்மீகத்தில் ஸ்தூலம், சூட்சுமம் என்று உண்டு. இந்தப் பிரபஞ்சத்தில் சாதாரணக் கண்ணிற்குத் தெரியும் பொருட்கள் அனைத்தும் ஸ்தூலம் என்று அழைக்கப்படும். சூட்சுமம் என்பது சாதாரணக்கண்ணிற்கு தெரியாத ஓர் சக்தி என்றே கூறவேண்டும்.

அதில் இந்த ஈதர் சக்தியும்அடங்கும். சாதாரணமாக இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்து எந்த நேரமும் இந்த பிரபஞ்ச சக்தியானது பூமியில் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த ஈதர் சக்தியானது முக்கியமாக ஒளி மற்றும் ஒலி கடத்தும் வல்லமை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் அறிந்தே பல விஞ்ஞான படைப்புக்களை மக்களுக்கு அர்பணித்துள்ளனர்.

Mahashivratri Procedure,மகா சிவராத்திரி விரதம் : இரவில் கண் விழிப்பதும்,  சதுர்தசி திதியில் சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்? - maha shivratri vratham  : reason for night ...

உதாரணமாக எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைகாட்சி நிகழ்வுகளை நாம் நம் வீட்டிலலிருந்தே பார்க்கிறோமே, அந்த கடத்தலை செய்வது இந்த ஈதர் சக்தி தான். இந்த ஈதர் சக்தி அளப்பறிய ஆற்றல் கொண்டது. இது இந்த பால்வழிமண்டலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. இது ஜீவாத்மாக்களின் நன்மைக்காக பரப்பப்பட்ட சக்தியாகும்

Sakthi Vikatan - 05 March 2024 - நீங்காத செல்வம் அருளும்  அர்த்தநாரீஸ்வரருக்கு 4 கால பூஜைகள்! சங்கல்பியுங்கள்! சிவராத்திரி வழிபாடு |  pattukottai lord siva temple and ...

இந்த ஈதர் சக்தியானது மகாசிவராத்திரி இரவில் குறிப்பாக நடுநிசியில் அதிக அளவு பூமியில் விழுகிறது எனக்கண்ட நம் ஆன்றோர்கள் அன்றைய இரவு முழுவதும் மக்கள் விழித்திருந்து அந்த சக்தியை தம் உடலில் பெற்று ஆரோக்கியமான வாழ்வு பெற வழிவகுத்துள்ளனர்.

ஈதர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈதர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.Lucky Zodiacs Sawan Saturn Retrograde | சனி, சிவன் சேர்க்கை..அபூர்வ யோகம்,  எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்? | News in Tamil

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதை உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம்.

மேலும் ஈதர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈதர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.

ஈதர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING) , இரண்டு ஃபால் (FALL). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு.

மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈதர் ஸ்பிரிங் தன்மை கொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈதர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தி இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும். அதேசமயம் 180 டிகிரி கோணமாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈதர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈதரும் பின்தொடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈதர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி #சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் #புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் #கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் #ராக்கெட் வேகத்தில் வரும்.

மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈதர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.

இந்த "லூமினிபெரஸ் ஈதர்" ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன், கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17 ம் நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.

ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் (Self Blessing)

செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமை உள்ளது.

மகா சிவராத்திரியில் பகலில் இந்த சக்தி கிடைக்காது. பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈதர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள். அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். (Circadian Rhythm) 

அபூர்வ ஸ்லோகம் - Kungumam Tamil Weekly Magazine

மகா சிவராத்திரி ஏன் இந்தியா, இலங்கை போன்ற சைவ நெறியாளர்கள் வாழும் நாட்டில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?

நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

இந்த ஈதரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈதர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து மக்களுக்கும் நல்லது.Hindu Samayam news | Jesus News in tamil | Islam News in Tamil - Maalaimalar

இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் பலருக்கு புரியாது என்பதற்காக, அந்தக்காலத்து ஞானிகள், நம் முன்னோர்கள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் விழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.

#அனைவருக்கும்-#மகாசிவராத்திரி

#வாழ்த்துக்கள்

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

- திருமூலர்

எங்கும் நிறைந்துள்ளது சிவன் வடிவம்;

எங்கு நிறைந்துள்ளனர் சிவசக்தியர்;

எல்லா இடங்களும் சிதம்பரம்; எங்கு நோக்கினும் திரு நடனம்;

எங்கும் உள்ளான் சிவன்,

எல்லாம் அவன் அருள்;

நிகழ்பவை எல்லாம் அவன் அருள் விளையாட்டு!!

 

 நன்றி இணையம்