இன்று “மாசி மகம்”....✍🏼🌹
தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது.
ஏனென்றால், பௌர்ணமியுடன்
மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தான் நாம் ‘மாசி மகம்’ திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
மேலும் இந்நாளில் பல கோவில்களில் தீர்த்த உச்சவம் நடைபெறும்.
பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.40 மணி முதல் பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது.
எனவே, பிப்ரவரி 24ஆம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், ஆறு மற்றும் குளங்களுக்கு சென்று புனித நீராடலாம்.
சிவபெருமான் வருணனுக்கு
சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான்.
இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.
உமா தேவி , மாசி மாதம்
மக நட்சத்திரத்தில் தான் ,
தட்சனின் மகள் தாட்சாயணியாக
அவதரித்தார் , என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது ,
இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.
தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
மாசி மகம் 2024 உண்டு நதிகளில் புனித நீராடிய பலனை வீட்டிலேயே எப்படி பெறலாம்......
மாசி மகம் 2024 :
நட்சத்திரங்களில் மகம் நட்சத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இது பலவிதமான தோஷங்களையும், பாவங்களையும் நீக்கக் கூடிய சிறப்பான நட்சத்திரமாகும். அதிலும் மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணையும் நாள் மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளையே நாம் மாசி மகம் திருநாளாக கொண்டாடுகிறோம். மாசி மகம் என்பது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், முன்னோர்களை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். மாசி மகத்தன்று நதிகள், கடல், குளங்கள் ஆகியவற்றில் நீராடுவது புண்ணிய பலன்களை தரும். இந்த ஆண்டு மாசி மகத் திருநாள் பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது.
மாசி மகம் சிறப்புகள் :
மாசி மகம் சிறப்புகள் :
மாசி மகம் என்பது வருண பகவானுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் வருணனுக்கு அருள் செய்த தினமாகும். தான் நலன் பெற்றதை போல் இந்த நாளில் புனித நீராடு வழிபடுபவர்களின் பாவங்களும் தோஷங்களும் தீர வேண்டும் என வருண பகவான் வேண்டிக் கொண்டதாலேயே இந்த நாள் புனித நீராடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் கோவில்களில் தீர்த்த உற்சவம் இந்த நாளில் நடத்தப்படுவதும் வழக்கமானது. மற்ற இடங்களில் நீராடுவதை விட கும்பகோணம் மகாமகம் குளத்தில் மாசி மகத்தன்று நீராடுவது சிறப்பானதாகும். மற்ற இடங்களில் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்காக அனைவரும் கங்கையில் சென்று நீராடுகின்றனர். ஆனால் அந்த கங்கையே தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்ள மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம்.
மகாமகம் குளத்தில் நீராட காரணம் :
மகாமகம் குளத்தில் நீராட காரணம் :
கும்பகோணம் மகாமகம் குளத்தில் வருடந்தோறும் நடைபெறுவதை மாசிமக நீராடல் என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மகத்தை மகாமகம் என்றும் கொண்டாடுகிறோம். அதனால் கங்கையை விட புனிதமானது கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது. மாசி மகத்தன்று நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவங்களை போக்கி, புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக மகாமகம் குளத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். அன்றைய தினம் மகாமகம் குளத்தில் நீராடுபவர்களுக்கு இந்த 9 நதிகளும் அனைத்து நலன்களையும் வழங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனைவராலும் கும்பகோணம் சென்று மகாமகம் குளத்தில் மாசிமகத்தன்று நீராட முடியாது. இப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நவநதிகளில் நீராடிய பலன்களை பெற முடியும்.
வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெற :
வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெற :
கங்கை, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவேரி, சரஸ்வதி, துங்கபத்ரா, சரயு ஆகியவையே நவ நதிகளாக போற்றப்படுகின்றன. இந்த 9 நதிகளிலும் நீராடிய பலனை பெறு வேண்டும் என்றால் மாசி மகம் தினத்தன்று காலையில் எழுந்து பல் துலக்கி, முகம் கழுவி விட்டு, ஒரு செம்பில் முழுவதும் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக், எவர்சில்வர் தவிர பித்தளை, செம்பு, மண் என ஏதாவது ஒன்றால் ஆன செம்பில் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இதில் வாசனை திரவியப் பொடி இருந்தால் அதை சிறிது போடலாம். இல்லை என்றால் சிறிது மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை கலந்து, அதன் மீது இரண்டு பூக்களை போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.
புனித நதிகளை வழிபடும் முறை :
புனித நதிகளை வழிபடும் முறை :
“கங்கை, யமுனை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, சரஸ்வதி, சரயு ஆகிய நதிகளே எங்களால் நேரில் வந்து உங்களை தரிசித்து, நீராட முடியாது. அதனால் நீங்கள் எங்கள் வீட்டில் உள்ள இந்த செம்பு தண்ணீரில் எழுந்தருளி, புனித நீராடிய பலனை எங்களுக்கு அருளி, எங்களின் பாவங்கள், தோஷங்களை நீக்கி அருள வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த செம்பு தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரும் சிறிதளவு தங்களின் தலையில் தெளித்துக் கொண்டு குளிக்கலாம். அல்லது அந்த தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரையும் பகிர்ந்து தாங்கள் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். இப்படி செய்வதால் 9 புனித நதிகளில் நீராடிய பலனை வீட்டில் இருந்தே பெற முடியும்.
தெரிந்து கொள்ளுங்கள்....✍🏼🌹....✍🏼🌹....✍🏼🌹....✍🏼🌹
🙏🙏🙏 நன்றி இணையம்