*#திருநள்ளாறு_சென்றாலும்_திருவாரூரை #விடாதே!'*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் | Temple, History, Beautiful placesதிருநள்ளாறு கோவில் | Thirunallar temple pooja details in Tamil

 

*#திருநள்ளாறு_சென்றாலும்_திருவாரூரை #விடாதே!'*

எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்கி வென்றவர் தசரத மகாராஜா. அந்தக் கதையை இங்கு பார்ப்போம்.

தசரத மகாராஜாவிற்கு சனி தசை ஆரம்பிக்கின்ற வேளை. அப்போது மன்னரின் குலகுருவான வசிஷ்டர் அவரிடம், "உங்களின் குலதெய்வம் சிவபெருமான் உள்ள திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபட்டால் உங்களை சனி நெருங்கமாட்டார்' என்றார். அவ்வாறே தசரத மகாராஜாவும், திருவாரூர் வந்து கமலாலயத் திருக்குளத்தில் நீராடினார்; ஆரூர் சிவபெருமானை வழிபட்டார்

நளன் நீராடிய திருநள்ளாறு பிரம்ம தீர்த்தம்!! - thirunallar brahma theertham  - Samayam Tamilதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை | Tamil  news Thirunallar Temple Nala Theertham Closed

அப்போது சனிபகவான், தசரத மகாராஜாவைப் பற்ற வந்தார். சிவபெருமானை வணங்கியதால் ஏற்பட்ட துணிவினால் சனி பகவானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் தசரதர். தன்னுடைய வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைக் கண்ட சனி பகவானும் தசரதனிடம், "என்ன வரம் கேட்டாலும் தருகிறேன். கேள்!' என்றார்.

உடனே தசரதர், "சனீஸ்வரனே! நீ உனது கடமையைச் செவ்வனே செய்கின்றாய். உலக உயிர்களுக்கு, சுக துக்கங்களின் வேறுபாட்டை உணர்த்தும் வகையிலே நீ செயல்படுகின்றாய். ஆனாலும் நீ அவர்களைப் பற்றுகின்ற காலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்

Thiruvarur Thyagaraja Temple

அண்ட சராசரங்களையும் படைத்து, காத்து, இறுதியில் சம்ஹாரமும் செய்யும் முழுமுதற் கடவுள் திருவாரூரிலே வீற்றிருக்கும் சிவபெருமான். அவரை "தஞ்சம்' என்று சரணடைந்த பின்னாலே என்னை நீ துன்புறுத்த விரும்பினாய். அதனால்தான் உன்னோடு நான் போரிட்டேன்; சிவனருளால் வென்றேன்.

Thiruvarur Thiyagaraja Temple History, Info, Timings and Contact Details -

எனவே, திருவாரூர் வந்து, கமலாலயத்தில் நீராடி, தியாகேசப் பெருமானையும் உன்னையும் எவர் ஒருவர் வணங்கினாலும் அவர்களுக்கு நீ நல்லதே செய்ய வேண்டும்; தீங்கு செய்யக்கூடாது' என்று கேட்டார். சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருவோரை தன்னுடைய கண்ட சனி, பாத சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி, மங்கு சனி என்று எந்தக் காலமானாலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார்

Tiruvarur Thyagarajar Temple - Exploring My Life

அதனால்தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச் சக்ரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்; "தன்னை இனியும் நவக்கிரகங்கள் துன்பப்படுத்தக்கூடாது' என வேண்டிக் கொண்டார். இதையொட்டிதான், "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!' என்னும் பழமொழி சொல்லப்பட்டு வருகின்றது

தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்

க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய

நமோ நீலமயூகாய நீலோத்பவ நிபாயச

நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய

நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக

நம : பெளருஷகாத்ராய ஸ்தூலரோக்ணே தே நம :

நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய தே நம :

நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கராளிநே

நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்க்ஷ்ட்ர நமோஸ்து தே

நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம :

நமஸ்தே ஸர்வபக்ஸாய வலீமுக நமோஸ்து தே

ஸூர்யபுத்ர நமோஸ்தேஸ்து பாஸ்கர பயதாயிநே

அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே

நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ராய நமோ நம :

தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய

ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹராஸி தத்க்ஷணாத்

தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா :

த்வயாவலோகிதா : ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே

ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய : ஸப்த தாரகா :

ராஜ்யப்ரஷ்டா : பதந்தீஹ தவ த்ர்ய்ஷ்ட்யாவலோகிதா :

த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத :

ப்டஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித :

"சனிக் கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அது மட்டுமின்றி கோசாரம், ஜன்ம லக்னம், தசைகள், புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால் ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன். அனைத்து உலக

இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன்!" என்றும் உறுதி அளித்தார் சனி பகவான்.

 


Thanks & Copy from Web