என் தனிமை என சுயநலமாகவே .....! ...?????

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

 Portrait Of An Old Man Made From Black And White Pencils Background,  Pictures Of Pencil Drawings Background Image And Wallpaper for Free Download

 

❤️ தினமும் ஒரு இளைஞன்,அதிகாலை வேலையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல. ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும்.   பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

❤️ திடீரென ஒரு நாள் அந்த பெட்டியை காணவில்லை,காலிங் பெல்லை அழுத்தி பார்த்த போது ஒரு வயோதிகர். வயதோ எண்பது வயதிருக்கும் மெதுவாக  பெரியவர் வந்து கதவை திறந்தார்

❤️ இளைஞனும் அவரிடம், வாசலில் இருந்த பாக்ஸ்எங்கே ஐயாஎன்று கேட்டான் பெரியவரோ ! தம்பி நான் தான் அந்த பெட்டியை நேற்று எடுத்துவிட்டேன். நீ தினமும் என்னை அழைத்து பேப்பர் கையிலேயே கொடுத்து விடு.என்றார்.

❤️ இளைஞனோ !ஐயாஅதுஉங்களுக்கும்
நேரம் எடுத்து கொள்ளும், எனக்கும் நேரம் அதிகம் செலவாகும், காலையிலே பல இடங்களுக்கு சென்று பேப்பர் போடுவதால் அதில் எனக்கு நேரம் கூடுதலாக செலவாகும்,ஆகவே நீங்கள் மறுபடியும் அந்த பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்தால்
நன்றாக இருக்கும் என்றான்.

❤️ பெரியவரோ ! தம்பி ! பரவாயில்லை !
நீ என்னை அழைத்து கையில் பேப்பர் கொடுத்து விட்டு போ வேண்டுமென்றால் நான் கூடுதலாக 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் அதிகம் தருகின்றேன் என்றார்.

❤️ இளைஞனுக்குஒன்றும்புரியவில்லை !
அவரிடமே காரணத்தை கேட்டான்.

Pen illustration, black and white, face of elderly person with wrinkles,  extremely detailed, white background, whole head and torso (not cut from  background)

❤️ அதற்கு பெரியவர்,தம்பி சமீபத்தில் என்னுடைய மனைவி காலமாகி விட்டாள். நான் தனியாவே இருக்கின்றேன். எனது பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள்.  என் மனைவிநெடு நாட்களாக மரண படுக்கையில் நோயாகயாகவே இருந்து இறந்து போனாள்.

❤️ நான் வளர்த்த பிள்ளைகளெல்லாம் அவள் நோயாக இருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். என் மனைவியின் மரணத்திற்கு கூட யாரும் வரவில்லை.

❤️ நான் கஷ்டப் பட்டு வளர்த்த பிள்ளைகளுக்கும் நான் பாரமாகி விட்டேன்.

❤️ நீயாவது தினமும் வந்து என்னை அழைத்து பேப்பர் தந்தால் நான் இன்னமும் உயிரோடு தான்  இருக்கின்றேன் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் புரியும் .
Download Elderly People, Pensioner, Retired Person. Royalty-Free Vector  Graphic - Pixabay

❤️ ஆரம்ப காலங்களில் என் சந்தோஷம்
என் தனிமை என சுயநலமாகவே சிந்தித்து அக்கம் பக்கத்தினர் வலிய வந்து அவர்களாகவே அன்பாக பேசிய போதெல்லாம் ஏதாவது உதவி கேட்பார்கள் என நானாகவே நினைத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதை தொந்தரவாக நினைத்தும் காம்பவுண்ட் கேட் என போட்டு அவர்கள் வருவதை முற்றிலும் தடுத்து விட்டேன்,


யாரெல்லாம் எனது நெருங்கிய சொந்த உறவுகள் என நினைத்தேனோஅவர்கள் எல்லாருமே துக்கம் விசாரித்தோடு கடமைக்கு என வந்து போனார்கள்,
ஆனால் யாரெல்லாம் வரவேக்கூடாது
என நினைத்தேனோஅந்த அக்கம் பக்கத்தினர் தான் என் மனைவியின் இறுதி சடங்கில் இறுதி அடக்கம் வரையில் எந்த பலனும் எதிர்பாராமல் இருந்து உதவினர்,இப்போது நானும் வயோதிகர் என்பதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோடு பாசத்தோடு ! ஸ்னேகம் கூடிய வார்த்தைகளோ என்னிடம் பங்கு வைப்பதில்லை. காரணம், பணம் அந்தஸ்து உயர்ந்த நிலையில், வலிய வந்து அன்பாக உறவு கொண்டாடிய அந்த நல்ல உள்ளங்களை மதிக்கத் தெரியாமல் தடுத்த பாவியான என்னால் எந்த விதமான நன்மையும் வராது என்றும் தான் அவர்களும் என்னை தொடர்பு கொள்வதில்லை. .

❤️ ஒரு வேளை நீ பேப்பர் போட தினமும் என்னை அழைக்கும்போது, நான் வரவில்லை என்றால் நான் அன்று இறந்து விட்டேன் என தீர்மானித்து விடு !  
உடனே அக்கம் பக்கம் போலிஸை அழைத்து சொல்லி விடு !

❤️ அப்புறம் தம்பி என்னுடைய பிள்ளைகளின் வாட்சப் நம்பரும் தருகிறேன் ! ஒரு வேளை நான் இறக்கும் போது தயவு செய்து என்பிள்ளைகளுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் நான் மரணத்திதை சொல்லி விடு.

❤️ இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞனுக்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, சொல்லிக் கொண்டிருந்தபெரியவருக்கும் குரல் தழுதழுத்தது.
Premium Vector | Old spouses on a walk

❤️ இன்றைய நவீன உலகில் தனித்தீவாக உள்ள வீடுகளிலும் ஒவ்வொரு அப்பார்மெண்டிலும்
இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

❤️  சில முதியோர்கள் வாட்சப்பில் தினமும்  குட்மார்ணிங் என்றும் வணக்கம் என்றும் அனுப்பும் போதெல்லாம், இந்த பெரிசுக்கு வேற வேலையில்லை, இது ஒரு தொல்லை தான் என்று நினைத்து பலரை நானே பிளாக் செய்துள்ளேன்.

❤️ இப்போது தான் அதன் உள் அர்த்தமே புரிகின்றது. அவர்களெல்லாம் தனிமையில் வாடுகின்றவர்கள்,
அன்பிற்காக ஏங்குகின்றவர்கள்.

❤️ கேட் வாட்ச் மேன், நான்கு வீடுகள், நான்கு கார்கள் என இருக்கும், ஆனாலும் கூட பேச்சுத் துணைக்கு யாருமில்லை ! பேசாமல் தனிமையில் இருந்து,
அந்த துக்கத்திலேயே மரணத்தை தழுவியவர்கள் பலர்.
Premium Vector | Vector outline set with illustrations of old people walkingCreative drawing of a group of people inside a restaurant, restaurant  chairs and tables, a person sitting on a chair, hand drawing, sketch,  drawing characters with a pencil - Photo #60700 -

❤️ ஒரு வேளை அவர்கள்  நமஸ்காரம், குட்மார்ணிங் என்று மேஸேஜ் அனுப்புவதே,தான் உயிரோடு தான் உள்ளேன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த தான் அனுப்புகிறேன் என்றும் இப்போது நினைக்கின்றேன்.

❤️பச்சை இலைகள் ஒன்றை நினைத்து
கொள்ள வேண்டும், நாமும் பழுத்த இலைகள் ஆகி மரத்திலிருந்து  ஒரு நாள் உதிர்ந்து விடுவோம் என்று

 

Thanks & Copy from Web. .