அட்வைஸ்லாம் இல்ல......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

 


இது அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்... நான் பண்ணிட்டு இருக்குறதை சொல்றேன்..

 

புது வருஷம் பொறந்திருக்கு... இந்த வருஷத்தை நல்லபடியா handle பண்றதுக்கும், வாழ்க்கையில கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்குறதுக்கும், இதை try பண்ணி பாருங்க..

 

1) நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ... Don't dwell on the past.   

 

எப்போவுமே உங்களை நீங்களே occupied'ஆ வெச்சுக்கோங்க. ஏதாவது productive'ஆ பண்ணிட்டே இருங்க, இல்ல உங்களோட ஆசை / கனவை நோக்கி உங்களை தயார்படுத்திட்டே இருங்க.   

 

சும்மா இருந்தாலே, நம்ம மைண்ட் என்னத்தையாவது தேவையில்லாம யோசிச்சு தொலைக்கும்... Idle mind is Devil's workshop'ன்னு சும்மா சொல்லல

 

நீங்க தவறவிட்ட வாய்ப்பையும், பழைய சாதனைகளையும் அசை போட்டுட்டு இருக்காம 'அடுத்து என்ன'ன்னு யோசிச்சு அடிச்சு நவுத்துங்க..

 


முக்கியமான விஷயம்... எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை விட மோசமான போதை வேற எதுவுமே இல்ல

 

~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

2) எவ்ளோ பெரிய பிரச்சினையா இருந்தாலும்.. அதை பத்தியே எந்நேரமும் யோசிச்சுட்டு இருக்காதீங்க. ஏன்னா, அது உங்களுக்கு எக்கச்சக்கமான stress'ஐ மன அழுத்தத்தைதான் கொடுக்கும். வேற எந்த வேலையையுமே பண்ண முடியாது. 

 

உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியப்போகுதுன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?  

 

அப்படி இல்லையா... உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியவே போறதில்லன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி யும் எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?

 

பிரச்சினைக்கு solution இருக்கோ இல்லையா, நீங்க கவலைப்பட்டீங்கன்னா உங்க stress மட்டும் அப்படியேதான் இருக்கும்... நீங்களும் அப்படியே சுணங்கி போயிடுவீங்க

 


~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

3) வாழ்க்கையில உங்களை முன்னேற விடாம, கட்டத்துக்கு போகவிடாம பண்ணக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் - #கடன்

 

தயவுசெஞ்சு தேவையில்லாம கடன் வாங்கி தலை மேல போட்டுக்காதீங்க... வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குனாலும், இல்ல சொந்தமா வீடே வாங்குனாலும்... அதோட விலை எவ்வளவோ, அதுல பாதி இல்லாட்டியும் மூணுல 1 பங்கு அமௌண்ட்டாவது சேர்த்து வெச்சுட்டு, மீதி பணத்துக்கு loan எடுங்க.. இல்ல, EMI போடுங்க.

மொத்தமா loan எடுக்குறது.. அப்படி இல்லாட்டி, 15 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு 60 ஆயிரத்துக்கு EMI'ல போன் வாங்குறது, இதெல்லாம் பண்ணீங்கன்னா... வாழ்க்கை முழுக்க கடன்லேயே தான் இருக்கணும்...

 

இதெல்லாம் ஏன் இவ்ளோ விரிவா சொல்றேன்னா... இந்த கருமத்தெல்லாம் பண்ணிட்டு, நான் செம்மய்யா அவஸ்தைப்பட்டிருக்கேன் 🚶️🚶

 

முக்கியமா, கிரெடிட் கார்டு எல்லாம் வெச்சிருந்தீங்கன்னா... தயவு செஞ்சு, ஒவ்வொரு மாசக்கடைசியிலயும் அது 10,000 ரூபாய்க்கு மேல போகாம பார்த்துக்கோங்க. எல்லா பேங்க் காரனும் போன் பண்ணி அவனா வந்து கிரெடிட் கார்டு தர்றான்னு, எல்லாத்தையும் வாங்கி போட்டு எல்லா cardம் full'ஆ வெச்சிருந்தீங்கன்னு வெச்சுக்கோங்க... close, அதோட சோலி முடிஞ்சுது   

 

~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

4) இதுதான் ரொம்ப முக்கியமான பாய்ண்ட்.. Take care of yourself   

 

உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லாம இருக்கலாம், நல்ல பெற்றோர்களோ துணைவியோ அமையாம இருந்திருக்கலாம்... இல்ல, எல்லாமே நல்லா கூட இருக்கலாம். ஆனா, எது எப்படியோ... உங்களை நீங்கதான் நல்லா பார்த்துக்கணும் 💝

 

உங்களை சுத்தி பாசிட்டிவ்வான ஆட்களை வெச்சுக்க முடியாட்டியும், அப்படிப்பட்ட ஆட்கள் உங்க circle'ல இருந்தா அவங்க கூட அதிக நேரம் செலவிடுங்க.

அதே போல... உங்களுக்கு நெருக்கமானவங்க பட்டியல்ல சொந்தக்காரன், நண்பன்ங்கிற பேர்ல தேவை வரும்போது மட்டும் உங்களை கூப்பிடுற ஒரு குரூப் இருக்கும். அதை முதல்ல cut பண்ணிவிடுங்க. அக்கா, தம்பி, காலேஜ் ஃபிரண்டுன்னு அது எவ்ளோ close ஆன ஆளா இருந்தாலும் பரவாயில்ல.. அதுங்கள்லாம் நீங்க தூக்கிட்டு சுமக்குற தேவையில்லாத பாரம்.. அவங்களை எல்லாம் தூரத்துலயே வெச்சுருங்க...

 

உங்களை உண்மையிலேயே நேசிக்குற, அக்கறை காட்டுற ஆட்கள் கூட அதிகம் நேரம் செலவிடுங்க.. வாழ்க்கையில இன்னும் ரொம்ப தூரம் போக முடியும். நிம்மதியா இருக்க முடியும்... Mental Health ரொம்ப முக்கியம், பிகிலு..

 

இது எதுவும் அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 நன்றி இணையம்