*யாரை திருத்துவது?.*
*யாரை
குறை
கூறுவது..!*
*எனக்கு
அரசியல்
ஞானம்
குறைவு.*
*ஆனால்
மாண்புமிகு
பொதுஜனங்களை
பார்த்துக்
கொண்டுதான்
இருக்கிறேன்.*
1.நூற்றைம்பது
சவரன்
போட்டு
மகளுக்கு
திருமணம்
முடித்தவன்
வீட்டில்
கலைஞர்
TV ஓடுகிறது.
2.ஊருக்குள்
30 வீடுகள் வாடகைக்கு
விட்டவன்
பசுமை
வீடு
மானியத்தில்
வீடு
கட்டிக்கொண்டான்.
3.இரண்டு
மகன்கள்
அமெரிக்காவில்
சம்பாதிக்கிறார்கள்.
ஆனால்
அனாதைப்
பணம்
1000 பெறுகிறார்கள்.
4.காரில்
சென்று
இலவச
சேலை
பெறுகிறார்
ஒரு
பெண்.
5.IT
கம்பனியில்
லட்சத்தில்
சம்பளம்,
ஆனால்
ஜாதி
படி
ரேஷன்கார்டு
படி
தாலிக்கு
தங்கம்
பெறுகிறார்
இன்னொருவர்.
6.
5000 சதுர அடியில்
நீச்சல்
குளத்துடன்
வீடு.
ஆனால்
வீட்டுவரி
ரூ350
,அதாவது
20 வருடத்திற்கு முன்பு
இருந்த
பழையவீட்டின்
வரியே
தொடர்கிறது.
7. இது
போக
ரேசன்
பொருட்களை
வசதியானவர்கள்
வாங்கி,
ஏழைகளுக்கு
விற்பது,மானிய
சிலிண்டர்களை
கார்
வைத்திருப்போருக்கு
விற்பது.
8.பைனான்ஸ்+சீட்கள்
நடத்தி
கோடியில்
விளையாடும்
ஒருவர்
Income Tax என்றால்
என்ன..?
என்கிறார்.
9.ஷென்சஸ்
எடுக்கப்போனோம்.
மாத வருமானம்
4000,5000 என்றுதான்
அத்தனை
குடும்பமும்
கூசாமல்
பொய்
சொல்கிறது.
அப்பத்தான்
சலுகைகள்
கிடைக்குமாம்.
10.இதெல்லாமே
நமது
கண்
முன்னே
நம்
பகுதியில்
நடக்கும்
உதாரணங்கள்.
கடைசியாக
4 கட்சியிடமும் பணம் வாங்கிக்
கொண்டு
ஓட்டுப்
போடுகிறார்கள்.
*மாண்புமிகு
பொதுஜனங்கள்...*
1) முறையாக
வரி
செலுத்தும்,
சலுகைக்காக
பொய்
பேசாத
மக்கள்.
2) ஊழல்
இல்லாமல்
மக்களுக்கு
சேவை
செய்யும்
அரசியல்வாதிகள்.
3) லஞ்சம்
வாங்காது
கடமையை
செவ்வனே
செய்யும்
அரசு
ஊழியர்கள்.
*நாடு
உருப்பட
இந்த
மூவரும்
வேண்டும்...*
யார் முதலில்
திருந்துவது..?
எப்படி
திருத்துவது..?
சட்டத்தின்
வழியா..?
சர்வாதிகாரமா..?
கல்வியா..?
ஆன்மீகமா..?
எதைக்கொண்டு
எதைத்
திருத்துவது..?
எனக்கு
அரசியல்
ஞானம்
குறைவு.
எனவே நீங்கள்
விடை
சொல்லுங்கள்.
நாடும்
நாட்டு
மக்களும்
நல்லாவே
இருக்கட்டும்._நட்புறவுகளே_
*தீதும்
நன்றும்
பிறர்தர
வாரா..*