கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
Image result for கர்ணனின் பூர்வImage result for கர்ணனின் பூர்வ

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
Image result for கர்ணனின் பூர்வ
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.

ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க இயலவில்லை.

எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்யும் கொடுமைகள் அனைத்தும் தொடர்ந்தன.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழிக்க உதவுமாறு வேண்டினர்.

விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக (அதாவது நரனும் அவரே, நாராயணனும் அவரே) தனது சக்தியை இரண்டு விதத்தில் வடிவமைத்தார். இப்படியாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.

நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர்.

இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். ‘தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே! அவனுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையதுஎன்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத் தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு பணித்தார்.

சஹஸ்ர கவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி முடிந்தது.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.
ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.

கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல முடிந்தது.
இதே போலத் தான், நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.
நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் காரணம், பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது. நாமும் கூட அப்படித் தான் காரணம் இல்லாமல் இந்த உலகத்தில் பிறக்க வில்லை. அதனால் வந்த வேலை முடியாமல் உலகத்தை விட்டுச் செல்ல முயற்சிக்கக் கூடாது (அதவாது வாழ்க்கை வெறுக்கும் படியாக சில தருணங்கள் அமைந்தாலும் தற்கொலை என்னும் முடிவை எடுக்கவே கூடாது. அது இறைவனுக்கு எதிரானது. இறைவன் அதனை விரும்பமாட்டார். இறைவன் நம்மிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்புள்ள வேலையை நாம் தட்டிக் கழித்து விடுவதற்கு சமானம் இது)
அதனால் வந்த வேலையை வெற்றிகரமாக முடிப்போம். இறைவன் அழைக்கும் வரை காத்திருந்து பக்குவமான நேரத்தில் அவன் அழைக்கும் சமயம் அவன் திருவடி சென்றடைவோம்.

-ஓம் நமோ நாராயணாய-

 நன்றி....இணையம்