கிரிவலம் செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:41 AM | Best Blogger Tips
கிரிவலம் செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு க்கான பட முடிவு
கிரிவலம் செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!!
திருவண்ணாமலை கிரிவலம்...!

திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக் கூட வேண்டாம். நினைத்தாலே முக்தி தரும் என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் கோவில்.

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலம் :

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசான்யலிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
தொடர்புடைய படம்
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும். ஏனென்றால், மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது நமசிவாய, சிவாயநம அல்லது தேவாரம், திருவாசகம் உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது.

கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும். அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்து கொண்டோ செல்லக்கூடாது.

அஷ்டலிங்கங்கள் :

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், பெருத்த செல்வமும் கிடைக்கும்.

இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இது கிரிவலம் செல்லும் வழியில் இடதுபுறத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கத்தை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

நான்காவதாக உள்ள லிங்கம் நிருதிலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கினால் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சனைகளின்றி வாழலாம்.

ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருணலிங்கம். சமூகத்தில் முன்னேற்றமடையவும், கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஆறாவதாக உள்ள லிங்கம் வாயுலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கி வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

ஏழாவது லிங்கம் குபேரலிங்கம். பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கடைசி லிங்கம் ஈசானியலிங்கம். இந்த லிங்கத்தை வழிபட்டால் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

பலன்கள் :

அருணாச்சலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும்.

வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும்.

மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப்பெறும்.
Image may contain: 1 person, sunglasses and outdoor
 நன்றி இணையம்