இறைவணக்கப் பாடல்கள், இறைஸ்தோத்திரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips


ஓம் நமசிவய 
இறைவணக்கப் பாடல்கள் க்கான பட முடிவுஇறைவணக்கப் பாடல்கள் க்கான பட முடிவு
நம் வீடுகளில் காலையிலும் மாலையிலும் இறைவணக்கப் பாடல்கள், இறைஸ்தோத்திரங்கள், மந்த்ரங்கள், கவசங்கள், போற்றிகள் போன்றவற்றை ஒலிக்க செய்கின்றோம் .

காரணம் என்ன ?

இறைவனாரின் பாடல்கள் ஒலிக்கும்போது நம்மையும் அறியாமல் நாம் அந்த பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே நமது பணிகளை செய்வோம்.

அப்படிசெய்தால் நிச்சயமாக காரியங்கள் நன்மையைத் தரும் என்பது நமது நம்பிக்கை. அது உண்மையும் ஆகும்.

அப்படி ஒலிக்கும் மந்த்ரங்கள் நம் வீட்டின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் சென்று அங்குள்ள தீய சக்திகளை அழித்து நமக்கு நல்ல நிலையை கொடுக்கும்.

கண்திருஷ்டி , செய்வினை போன்றவற்றிற்கு கூட இவ்வாறு மந்த்ரங்களை சொல்லிக்கொண்டே தூபம் போடுவது வழக்கம்.

அதனால் சொல்லில் அடங்காத பல நன்மைகளை நாம் பெறுவதுண்டு.

ஆனால் தற்போது அவ்வாறு பலவிதமான இறைபக்தி பாடல்களோ மந்த்ரங்களோ கவசங்களோ, போற்றிப்பாடல்களோ, சகஸ்ரநாமங்களோ ஒலித்தாலும் பலன்கள் ஏதுமில்லை, பிரச்சினைகளே அதிகமாகின்றன.

தாரித்திரியம் மேலோங்கி வாழ்வின் சுப நிலைகள் மாற்றம் கண்டு வாழ்வில் பிடிப்பின்றி ஏனோதானோவென்று வாழ்கின்றோம்.

எதற்கெடுத்தாலும் சண்டைகள், பிடிவாதங்கள், பொறுமையற்ற மனோ நிலை, யாரைப்பார்த்தாலும் பிடிக்காத மனோ நிலை, எதிலும் பற்றில்லாத மனோபாவம் ,
நாமா இப்படி என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் அளவிற்கு மாற்றம் நம்மிடம்.

ஏனிந்த மாற்றம் ? எப்படி நடந்தது இந்த மோசமான நிகழ்வு ? எப்படி இந்தமாதிரியான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டோம் ?
கொஞ்சம் ஆராய்வோம் ,.

நாம் நமது வீட்டில் இறைவனாரின் பக்திபாடல்களை ஒலிக்கசெய்வது காலையில் கொஞ்ச நேரம் மாலையில் கொஞ்சநேரம் மட்டுமே .

அந்த வேளையில் பரவும் மந்த்ரங்கள் நம் வீட்டின் ஒவ்வொரு பாகத்திலும் சென்று அங்குள்ள தீயவைகளை அழிக்கும் என நம்பி செய்தோம்.

ஆனால்

அதன்பிறகு நாம் நமது வீட்டில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி அருகே அமர்ந்து நாடகங்களை , சினிமாக்களை காணத் துவங்குகின்றோம்.

தொலைக்காட்சி நாடகங்களில் வரும் ஒருவரை அழிக்கவோ, ஒருவரை அசிங்கப்படுத்தவோ, ஒரு குடும்பத்தை சீர்குலைக்கவோ சொல்லப்படும் வசனங்கள், அழுகை , புலம்பல் ,உன்னை விடமாட்டேன், உன் குடும்பத்தை சந்தோஷமாக இருக்க விடமாட்டேன் என்பது போன்ற வசனங்கள், மரண ஓலங்கள் 

நம் வீட்டை சுற்றிலும் பரவுகின்றன.
அதுவும் மந்தரம் போலத்தான்.

சினிமாக்களில் வருகின்ற குடும்பத்தை சீரழிய செய்யும் வசனங்கள் , ஒருவரை அடித்து துன்புறுத்த ஏற்பாடு செய்யும் வசனங்கள் , அடித்து துன்புறுத்தல் , மரண ஓலம், தீமையை தரும் மந்த்ரங்கள் சினிமாவில் ஒலிப்பது ,

உன் குடும்பத்தை அப்படி செய்வேன் இப்படி செய்வேன் அடியோடு ஒழிப்பேன் போன்ற வசனங்கள் ,

அசிங்கமான ஆபாசமான வசனங்கள் இவை யாவும் உங்கள் வீட்டை சூழ்ந்து கொள்கின்றன.

மந்தர நேரங்களை விட இவையே அதிகநேரம் நம் வீட்டில் இருக்கின்றன.

இவை நல்லவைகளை அழிக்கின்றன. நல்ல எண்ணங்களை அழிக்கின்றன.

உயர் குணங்களை அழிக்கின்றன.
தெய்வ சாந்நித்தியத்தை கெடுக்கின்றன.
உறவுகளை மதிக்காத தன்மையை வளர்க்கின்றன. சிறிய குற்றங்களையும் பெரிதாக்கி உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி பிரிக்கின்றன.

நம்மை அறியாமலே நம் இந்த மோசமான மாயவலைப்பின்னலை உருவாக்கி, இவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டோம்.

அதிலிருந்து மீள வழியின்றி மேலும் மேலும் அதிலேயே புதைந்து போகின்றோம் எனத் தெரியாமலே புதைந்து கொண்டோம்.

இப்போது எவ்வளவோ சாமியை கும்பிட்டும் எந்த பலனும் இல்லையே என புலம்புகின்றோம்.

நன்மையை விட தீமையை அதிகம் சேர்த்தால் எப்படி நன்மை கிடைக்கும்.

ஒரு நாளைக்கு காலையில் ஒரு மணிநேரம் மாலையில் ஒரு மணிநேரம் இறைவணக்கப்பாடல்கள் அவ்வளவுதான்
அதிக நேரம் சினிமா அல்லது நாடகம். எது அதிகமோ அதுதானே பலன் தரும்.

நம் வாழ்வை, நம்மோடு இருந்து, நம்மையே சீரழிக்கும் நிலையை ஏற்படுத்திக்கொண்டது நாமே தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு ஓய்விற்காக ஏற்படுத்திக்கொண்ட இந்த மாய மயக்கம் இன்று மனித வாழ்வையே புரட்டிபோட்ட அவலத்தை காண சகிக்கவில்லை.

சினிமாவும் நாடகங்களும் புதிதல்ல .
அதற்கென ஒரு இடம் இருந்தது
அங்கே சென்று பார்ப்போம்.

வாரத்தில் ஒருநாள் , மாதத்தில் ஒரு நாள் என
நாம் அதற்கான நேரம் ஒதுக்கி செல்வோம் பார்ப்போம்
பலர் போகவே மாட்டார்கள்.

இன்று அப்படி அல்ல வீட்டுக்குள்ளேயே வந்து விட்டது.
பார் பார் என அழைக்கின்றது , சிறியவர் முதல் முதியோர்வரை அனைவரையும் காண சொல்கின்றது.

நாமும் அதனை கண் கொட்டாமல் பார்க்கின்றோம் நாம் அழிவை நோக்கி போகின்றோம் என அறியாமலே.

அந்த வார்த்தைகளும் வசனங்களும் நம் வீட்டை சுற்றியே இருக்கின்றன மந்தரம்போல.
கொஞ்சம் கொஞ்சமாக நம்மை,

நம் வீட்டை,
நம் உறவுகளை ,
நம் ஒற்றுமையை ,
நம் ஆனந்தத்தை, நம் தெய்வத்தன்மையை ஒழித்து

நம்மை வீட்டிற்குள்ளேயே, நம்மை அனாதையாக்கி, வாழ்வில் வெறுப்பை தந்து

புனிதமான குடும்ப ஒற்றுமையை அறவே அழித்து விட்டது.
ஆனந்தத்தை எதிர்பார்க்கும் நாம்,

அழுகையை அதிகம் காட்டும், காட்ட வைக்கும் நாடகங்களில் பார்த்து பார்த்து அதனை நம் வீட்டிற்கு இறக்குமதி ஆக்கிக் கொண்டோம்.

இந்த மிக மோசமான சூழலில் இருந்து உங்களை காக்கவும்,
உங்கள் குடும்பத்தினை மேன்மை பெறச் செய்யவும்,

நிம்மதி தழைக்கவும்,
ஆனந்த மாமழை பொழியவும்,
இன்ப தேனூற்று பெருகவும்,
உறவுகளின் அருமையை உணரவும்,
உங்கள் பிள்ளைகள் உங்களை மதிக்கவும் ,
அவர்கள் மதிப்பான வாழ்வை பெறவும்

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என இனி நான் புதிதாக ஏதும் சொல்லத் தேவை இருக்காது என நினைக்கின்றேன்

உங்கள் வாழ்வினை சீராக்குவது உங்களிடம்தான் இருக்கின்றது.

வளமாக்குவதா அல்லது மேலும் சீரழிப்பதா சிந்தித்து முடிவெடுங்கள்.

நாடக நாயகன் , நாயகி என்ன ஆவாளோ என பதறி தவிக்காமல்

உங்கள் வாழ்வை பற்றி யோசியுங்கள்.
நல்ல முடிவெடுங்கள்.
மாற்றம் காணுங்கள் ,
இல்லாவிடில் நீங்கள் சறுக்குவதை தடுக்க யாராலும் முடியாது.
ஏனெனில் உங்கள் விதியை நீங்களே தீர்மானிக்கின்றீர்கள்.
நீங்கள் வளமாக,
நலமாக,
சுகமாக,
நிம்மதியாக வாழவும்,
சுற்றம் சூழ வாழ்வும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
உங்கள் நன்மையை என்றும் நாடும்...
ஓம் நமசிவய.
 
நன்றி இணையம்