அனுமன் குரங்காக சிவபெருமானே அவதாரம் எடுத்தது ஏன்? என்று தெரியுமா...
ஒருநாள் சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார்.
அதைக் கேட்ட பார்வதி தேவி...சிவபெருமானை பார்த்து...சுவாமி கடவுளாக இருக்கும் தாங்களே இன்னொரு கடவுளின் பெயரை உச்சரித்து வருகின்றீர்களே!
சிவன், அதற்குப் பதில் அளித்தார். தேவி "ராம"
என்ற சொல் இரண்டு விஷயங்களைக் குறிக்கின்றது. ஒன்று 'ராம' என்பது பிரம்மம். இரண்டாவது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கின்றது என்றார். மேலும், ராமர் தனக்கு பிடித்த அவதாரமாகவும், பூலோகத்தில் அவதரித்து ராமருக்குத் தொண்டு செய்ய போவதாகவும் கூறினார்.
இதைக் கேட்டு, பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிட்டது. சிவபெருமானை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்திருக்க மாட்டேன் என்றாள்.
அதற்கு ஈசன் தேவி கவலை வேண்டாம் பூலோகத்துக்கு அனுப்பப்போவது என்னுடைய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் இங்கு தான் இருப்பேன் என்றார்.
பார்வதி தேவி சமாதானமாகி, அவர் எடுக்கப்போகும் அவதாரத்தைப் பற்றி கேட்டார்.
பலத்த விவாதத்துக்குப் பின் சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
சிவன் எதற்காக குரங்கு அவதாரம் எடுத்தார்?
மனிதனாக அவதாரம் எடுத்தால் தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும். எஜமானை விட சேவகன் எப்போதும் ஒரு படி கீழ்நிலையில் இருப்பதே சரி. இந்நிலையில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. அதற்கு விசேஷமான தேவைகள் இருக்காது.
உடனே பார்வதி தேவி தானும் இறைவனுடன் வருவதாகக் கூறினாள். சிவபெருமான் அதற்கு சம்மதம் கொடுத்து தான் எடுக்கப்போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். அதற்கு ஒப்புக்கொண்டாள் பார்வதி தேவி.
எனவே, சிவபெருமான் குரங்காகவும், அதன் வாலாகப் பார்வதி தேவியும் அவதாரம் எடுத்ததால் தான் அனுமன் அழகாகவும் பலசாலியாகவும் இருக்கின்றார்.
ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் அனுமன் குரங்காக அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
நல்ல பன்புகள் நிறைந்து இருந்தால் அந்த சிவனே சேவகம் செய்ய வர கூட தயங்க மாட்டார் ஆகையால் அவனின் திரு பாதங்களை சரனாகதி ஆகிடுவோம்....
''கற்க
கசடறக் கற்றவை கற்றபின் நிற்க
அதற்குத் தக”
அதற்குத் தக”
என்கிறது திருக்குறள். படித்த நல்ல விஷயங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். பணம் தேடுவதோடு நல்லறிவை தேடவும் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் போன்ற நல்ல நூல்களைத் தேடிச் சென்று படிக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்புடன், தெய்வ பக்தி அவசியம். அதிகாலையில் எழுந்து பல் துலக்கி, நீராடி நெற்றியில் திருநீறு பூசி, இறைவனின் திருநாமத்தைச் சொன்ன பின்னர் தான் நீராகாரம் பருக வேண்டும்” இந்த நல்ல பழக்கத்தை உடனே கடைபிடிக்க முயல்வோம்.
தொடரட்டும் நல்ல பழக்கம்!
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவாய நமஹ ஓம் ஆதி சிவ சிவாய நமஹ ....
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் 9843096462
ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
ஆத்தூர் சேலம் (மாவட்டம்) 636102 மு.கிருஷ்ண மோகன் 8526223399 ..... 9843096462 ...
ஆத்தூர் சேலம் (மாவட்டம்) 636102 மு.கிருஷ்ண மோகன் 8526223399 ..... 9843096462 ...