துபாயில் அழகிய இந்துக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:05 | Best Blogger Tips




*ஐக்கிய அரபு நாடுகளில்* புகழ்பெற்ற நாடான *துபாயில்* அமைந்துள்ளது *அழகிய இந்துக்கோயில்* வளாகத்தில் *சிவபெருமான்* மற்றும் *கிருஷ்ணர் ஆலயங்கள்* அமைந்துள்ளன.அருள்மிகு *கிருஷ்ணர் திருக்கோயில் இந்துக்களின் வழிபாட்டு திருத்தலமாக மட்டுமின்றி,* துபாயின் *முக்கிய சுற்றுலாத்தலமாகவும்* திகழ்கிறது. துபாயில் உள்ள *புகழ்பெற்ற இந்துக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.* இக்கோயில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் *பர்துபாய் பகுதியில்* அமைந்துள்ளது. நீரோடைக்கு அருகே அமைந்துள்ள இக்கோயிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் *படகுகளின் மூலமே* வருகின்றனர். *அப்ரா என்று அழைக்கப்படும்* இந்த படகுகளின் மூலம் நீரோடையின் மறுகரையை அடைய சுமார் *20 நிமிடங்கள் ஆகின்றன.* இங்கிருந்து *10 நிமிட நடைபயணம்* மேற்கொண்டால் *கிருஷ்ணர் கோயிலை* அடையலாம்.



 *மிகப் பெரிய இக்கோயிலில்* அமைக்கப்பட்டுள்ள *ராதா-கிருஷ்ணர்* சிலைகள் *வடஇந்திய முறைப்படி* அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளின் முன்புறம் *மிகப்பெரிய வழிபாட்டு அறை* அமைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் அமர்ந்தே பக்தர்கள் *தியானம், பஜனை* போன்ற பக்தி நாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் *பூக்கள், இனிப்புக்கள்,* *வஸ்திரங்கள்* போன்ற கடவுளின் காணிக்கைகளை கோயில் அர்ச்சகரிடம் அளிக்கின்றனர். இக்கோயிலில் *ஓர் அமைதியான சூழ்நிலையை உணரமுடிகிறது.* பக்தர்களின் வசதிக்காக கோயில் கீழ்புறத்தில் ஒரு பெரிய அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் *சில குறிப்பிட்ட நாட்களிலும், குறிப்பிட்ட நேரங்களிலும் மட்டுமே திறக்கப்படுகிறது. பூக்கள், மாலைகள், துளசி, தேங்காய்* போன்ற பூஜைக்கான பொருட்கள் விற்பதற்காக *கோயிலைச் சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பக்தர்கள் அமர்வதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு கோயிலைச் சுற்றி விலாசமான இடங்களும்* உள்ளன.

 *சிவன் கோயில்:*


துபாய் இந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள *சிவன் கோயிலின் முக்கிய தெய்வம் சிவ பெருமான்.* இக்கோயிலின் *கருவறையில் மிகப் பெரிய சிவன் சிலையும்* அதற்கு *முன்னதாக சிவலிங்கமும்* அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக *பால்,தேங்காய், பழங்கள், பூக்கள் மற்றும் இனிப்புக்கள் ஆகிய பொருட்கள் நிவேதனக் காணிக்கையாக* *பக்தர்களால் அளிக்கப்படுகிறது.* இப்பொருட்கள் விற்கப்படும் கடைகளும் கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளன. இக்கோயிலில் எல்லா நேரமும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியே காணப்படுகிறது. *இக்கோயிலில் கணேசர், கிருஷ்ணர், லட்சுமி, துர்க்கை, சாய்பாபா போன்ற இந்து தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.* இக்கோயிலின் *மேல்தளத்தில் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாரும் அமைந்துள்ளது.* இக்கோயிலில் *இந்துக்களின் அனைத்து விதமான பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.* குறிப்பாக *சிவராத்திரி அன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்* மேற்கொள்கின்றனர். *ரொட்டி மற்றும் சமைத்த கறி ஆகியன பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.*


*பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக இக்கோயிலில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.*


 *பூஜை நேரம்:*

*காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை; மாலை 04:30 மணி முதல் இரவு 10 மணி வரை*
*Pooja Time*
*Morning Hours: 6:00 AM to 1:00 PM. Evening Hours – 4:30 PM to 10:00 PM.*
*போன்: +971 50 966 3825*
*Phone* *: +971 50 966 3825*
[14/01, 5:26 PM] ‪+91 95008 17528: *TEMPLE, DUBAI*
*முகவரி*
*சிவா மந்திர், கிருஷ்ணா* *மந்திர்துபாய்* *அருங்காட்சியகம் அருகில், பர் துபாய்62 ஏ தெரு பர்துபாய்துபாய், ஐக்கிய அமீரகம்*


*Address Location*


*Shiva Mandir & Krishna*


*MandirNear Dubai Museum, Bur Dubai62A*


*Street Bur DubaiDubai,


United Arab Emirates*


நன்றி இணையம்