மகிழ்ச்சியான, உறுதியான, அமைதியான உள்ளம் தான் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் பிறக்கும்.
மகிழ்ச்சி என்பது ஒரு கலை. அதைக் கற்றுத்தான் அறிந்து கொள்ள முடியும் என்பவை அறிஞர்களின் கருத்து. எனவே மகிழ்ச்சிக்கலையைக் கற்றவர் மிகச் சிறந்த அருட்கொடையைப் பெற்றவர் ஆகி விடுவார். அவரது வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும்.
மகிழ்ச்சியை எவ்வாறு கற்பது? எதையும் தாங்கும் இதயமும், மன வலிமையும்தான் மகிழ்ச்சியின் ஆணி வேர். எனவே, உங்களது வாழ்க்கையில் எந்தப் புயல் வீசினாலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டாலும் நீங்கள் அசைந்துவிடாதீர்கள்!அவற்றைக் கண்டு நடுங்கிவிடாதீர்கள்! ஒரு மனிதனின் உறுதிமிக்க, தூய்மையான இதயத்தைப் பொறுத்து அவனது மனம் பிரகாசமடையும் மகிழ்வுறும்.
பயந்த சுபாவம், நடுங்கும் உள்ளம், பலவீனமான இதயம் இவைதாம் கவலையையும், துக்கத்தையும் நம் அருகே அழைத்து வருகின்றன. எனவே, பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் காயங்கள், வலிகள், துயரங்கள் எல்லாமே எளிதாகிவிடும். உங்களிடமிருந்து காணாமல் போய்விடும்.✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
Thanks *பெ.சுகுமார்*