இந்து கோயில் இந்து மதம் அடையாளம் இருந்தால் தமிழக அரசின் அறநிலையத்துறை எடுத்து கொண்டுவிடும் .
அதனால் தான் பீடம் என்றோ தியான மண்டபம் என்றோ , ஈஷா மையம் என்றோ ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிக கவனமாக பெயர் சூட்டி கொள்கின்றனர்.
அப்படி செய்ய வில்லையென்றால் சுவாகா தான்
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்கள் , தான் ஒரு ஹிந்து சாமியார் என்றோ , ஈஷா ஒரு ஹிந்து மத அமைப்பு என்றோ சொல்லிக்கொள்வதில்லை ...
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்கள் , தான் ஒரு ஹிந்து சாமியார் என்றோ , ஈஷா ஒரு ஹிந்து மத அமைப்பு என்றோ சொல்லிக்கொள்வதில்லை ...
ஆகவே அவருக்கு நாம் ஆதரவளிக்கவேண்டியதில்லை என்பது சில நண்பர்கள் கருத்து...
சரி...இன்றே தான் ஒரு ஹிந்து சாமியார் என்றும் , ஈஷா ஒரு ஹிந்துமைப்பு என்றும் ஜக்கி அறிவித்துவிடுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம்...என்ன நடக்கும்?
ஒரே வாரத்தில் ஈஷா அமைப்பை ஹிந்துசமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்...
காரணம் ஹிந்து மத அமைப்புகள் அனைத்துமே அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவைதான்,...
ஹிந்து அறநிலையத்துறை என்று பொதுவாக அறியப்படும் HR&CE இன்
முழு விரிவாக்கத்தை [ Hindu Religious and Charities
Endowment ] தெரிந்துகொண்டால் , அதன் அதிகாரம் புலப்படும்...
ஜக்கி வாசுதேவ் அவர்கள் உடனடியாக ஓரம்கட்டப்படுவார்...
விசேஷ நாட்களில் மட்டும் [ போனால் போகிறதென்று ] மரியாதை வழங்கப்படும்...
ஈஷாவில் திரும்பிய பக்கமெல்லாம் பிரம்மாண்டமான உண்டியல்கள் வைக்கப்படும்....
120
அடி ஆதியோகி சிவன் முகத்தை மறைத்து 130 அடி உயர சுவர் எழுப்பப்படும்...
சிறிய திட்டிவாசல் அமைத்து , அதன்வழியாக மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்....
ரூபாய் 20 , 50. 100 என
கட்டணம் நிர்ணயிக்கப்படும் ..சிறப்பு தரிசனம் 500 ரூபாய்...
தியானலிங்கத்துக்கு பூஜை செய்ய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் ...
அவர்களுக்கு உலகிலேயே அதிக சம்பளமாக மாதம் ரூ 900 வழங்கப்படும்..
அதுவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்....
அர்ச்சகர் தன் தட்டில் விழும் காணிக்கையில் செயல் அலுவலருக்கும் ஒரு பங்கு கொடுக்கவேண்டும்...
தியான லிங்கத்தின் முன்பாக பிரசாத ஸ்டால் நிறுவப்படும்..
அங்கு லட்டு , புளியோதரை , பீட்சா , பர்கர் எல்லாம் விற்கப்படும்...
ஈஷாவை சுற்றி கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்படும்...
அதில் மாற்று மதத்தினருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்...
அங்கு மாட்டுக்கறி , பிரியாணி இப்படி சகலமும் விற்கப்படும்..
ஒரு டாஸ்மாக் கடையும் திறக்கப்படும் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை...
அறநிலையத்துறை இணை ஆணையருக்கென்று தியானலிங்கத்தை ஒட்டி பிரமாண்டமான அலுவலகம் கட்டப்படும்...
அங்கு ஒரு கழிப்பறையும் கட்டப்பட்டு தண்ணீர் இல்லாமல் நாறிக்கொண்டிருக்கும்...
ஜே.ஈ சாருக்கு புத்தம்புது இன்னோவா கிரிஸ்டா தொடங்கி அலுவலக பியூனின் மனைவிக்கு ஹேர்கிளிப் வரை , ஈஷா வருமானத்தில் மஞ்சள் குளிக்கப்படும்...
ஈஷா சொத்துக்கள் அனைத்தும் அரசியல்வாதிகளாலும் , அதிகாரிகளாலும் ஆக்கிரமிக்கப்படும்...
பெரும்பாலான நிலங்கள் காருண்யாவுக்கு தாரை வார்க்கப்படும் ..
அதை எதிர்த்து யாரேனும் வழக்குத்தொடர்ந்தால் , அந்த வழக்கு நூறாண்டுகளுக்கு இழுக்கப்படும்...
ஈஷாவில் வரும் வருமானம் அனைத்தும் ஈஷா பெயரில் ஆரம்பிக்கப்படும் வங்கிக்கணக்கில் கட்டப்படும்...
ஆனால் அதில் இருந்து ஒரு பைசா கூட ஈஷாவுக்காக செலவிடப்பட மாட்டாது...
செலவுகள் அனைத்தையும் அங்கு வரும் பொதுமக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்..
திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக சொத்துக்கள் உள்ள [ 1400 கோடி
] நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 17வருடங்கள் ஆகின்றன...
இன்னும் திருப்பணி துவங்கப்படவில்லை..
பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் திருப்பணி செய்யத்தயாராக இருந்தும் அனுமதி வழங்க அரசுக்கு நேரமில்லை..
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் எவனாவது தி,க காரன் ஈஷா நடைமுறைகளை கன்னாபின்னாவென்று மாற்றியமைக்கவேண்டுமென்று வழக்குத்தொடுப்பான்...
அந்த வழக்கு மரந்தாமன் , சந்துரு போன்ற ஹிந்துவிரோத நீதிபதிகள் இருக்கும் பெஞ்சுக்கு மாற்றப்பட்டு மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான தீர்ப்புகள் வழங்கப்படும்..
அந்த உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படும்...
எப்படி வசதி நண்பர்களே? இன்றே அறிவிக்கச்சொல்லிவிடுவோமா?
நன்றி இணையம்