மூடப்பட்டது
டாஸ்மாக்
கடை
திருவாரூர் மாவட்டம்
மணக்கால்
கிராம
பஞ்சாயத்தின்
டாஸ்மாக்
கடை
மூடப்பட்டது.
மணக்கால்
கிராமத்தின்
தன்னார்வலர்
திரு.தென்னரசுவின்
தொடர்
முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. தனது கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தனது கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார், உண்ணாவிரதம் இருந்தார், ஊடகங்கள் மூலம் தொடர் கோரிக்கை வைத்தார்.
தொடர் முயற்சியில் இருந்த அவருக்கு, கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக் கோரிய ஒரு கிராம பஞ்சாயத்துத் தீர்மானத்தின் அடிப்படையில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியரையும் டாஸ்மாக் மேலாளரையும் சந்தித்துப்பேசினார். மக்களின் கோரிக்கையை முன்வைத்தார்.
மார்ச் மாத இறுதியில் கட்டாயம் மணக்கால் கிராமத்தில் உள்ள கடையை மூடிவிடுகிறோம் என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சொல்லி வந்த நிலையில், தற்போது இக்கடை மூடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுள் மணக்கால் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையும் ஒன்று. திரு.தென்னரசு அவர்களுக்கும், மணக்கால் கிராம மக்களுக்கும் நம் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி !