‪#‎வழிபாடு! ‪#‎ஒரு ‪#‎எச்சரிக்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips
இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்கும் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,
என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே
காணோமே!
வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய்
மறைந்துபோனார்களா?
அட....
இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில்
எள்விழ இடமில்லை!
ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை
கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய்
தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா!
நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்!
ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….?அம்பாள் முன்போ......??
சுத்தம்! ஒரு , காக்கா கூட இல்லை!
என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்?
நீங்கள் வழிபடும் சிவ சக்தியை விட சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக
இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!
நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி,
தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும்
இது செய்யணும் என்று வற்புறுத்தி,
உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில
சோதிடர்கள், சில சிவாச்சாரியார்கள், பிரபல
ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக
வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!
சோதிடம் ஒரு அருங்கலை!
மறுக்கவில்லை!
உண்மை உண்மைஜோதிடர்களுக்கு புரியும்.
உதாரணமாக சனி, திருநள்ளாறில்
சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால்
அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக
பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் .
ஆனால் ,
திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை!
அது சனி பகவான் கோயில்,
திங்களூர்
சிவன்கோயில் இல்லை, அது சந்திரன்
கோயில்! 
வைத்தீசுவரன் கோவில்
சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய்
கோயில்! 
இப்படித்தான் இன்று அவை பிரபலம்
பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!
உண்மைதான்!
ஆனால் அவர்களே விதியின் வசத்தில் சிக்குண்ட போது ...
அவர்களை அவர்கள் மீட்டு கொள்ள இறைவன் தாழ் பனிந்தார்கள்..
தான் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டது போல் இங்கு நாடி வரும் அனைத்து மக்களையும் மீட்க வேண்டும் என இறைவனிடம் வரம் வாங்கியதாக புராணம் ..
அந்தந்த நவக்கிரக ஸ்தலங்களில் 
இறைவனை வழிபட்டு நமது குறைகளை கூறிய பிறகு .....
மறியாதை நிமித்தமாகவோ...
நன்றி கூறுவதற்காகவோ .... நவக்கிரங்களை வழிபடலாம்.
அதை விடுத்து,
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது,
நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும்
இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??
மூலமூர்த்தியை வழிபட்ட பின்
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.
மூலமூர்த்தியாகிய சிவபெருமானை
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால்
யாதொரு பலனும் இல்லை.
சிவ சிவ ....!!!!

 நன்றி இணையம்