ஆடி அமாவாசை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:11 | Best Blogger Tips
ஆடி அமாவாசை;
--------------------------
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

வானவியல் கணிப்பின் படி சூரியனும்,சந்திரனும் ஒரே இராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதுர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாக்களாக வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசைக்கு முன்னோர்களை நினைக்கவும்,திதி கொடுக்கவும் மிகச்சிறந்த நாளாகும்.மேலும் இந்த தினத்தில்தான் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.இந்த நாளில் ஆற்றோரத்திலும்,புண்ணியதலங்களிலும்,கடலிலும் நீராடி பிதூர் தர்பணம் செய்வதால் நாம் செய்த பாவங்களும்,தோசங்களும் விலகுவதோடு மட்டுமல்லாமல் கர்ம வினைகளும் நீங்கும்.

தாய்,தந்தையர்கள் இறந்த தினத்தையோ,திதியோ மறந்தவர்களும்,சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்களும்,இந்த நாளில் பெற்றோர்களை நினைத்து விரதம் இருந்தால் சிறப்பான வாழ்வும்,முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடக்கும்.

நாளை ஆடி-21(06-08-2013)செவ்வாய்கிழமை “ஆடி அமாவாசை”ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

நாளை ஆடி-21(06-08-2013)செவ்வாய்கிழமை“ஆடி அமாவாசை”ஆகும்.