தமிழ் தாய் வாழ்த்து !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:20 | Best Blogger Tips
Photo: ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 100 கோடியில் சிலை வைப்பதை விட !
ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 100 கோடியில் சிலை வைப்பதை விட !
 
Via FB Palladam Siva Gurunathan