அம்மாவாசையும் காகமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:23 PM | Best Blogger Tips
 
அம்மாவாசையும் காகமும்.

ஹாய் ஆறு அறிவு மனிதர்களே,நான் தான் ஐந்து அறிவு காகம் பேசுறேன்...

நாங்க கறுப்பா தான் இருக்கோம் ஆனா அதை பத்தி நாங்கள் கவலை பட்டது இல்லை.நாங்கள் அனைத்துண்ணிகள் தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு, போன்றவற்றையும் வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறோம் , இறந்த உடல்களையும் உண்ணுவோம்.

நாங்கள் மரங்களில் கூடு கட்டி வாழ்கிறோம் ஆனா நீங்க மரத்தை எல்லம் வெட்டி போட்டுட்டு மாடி வீடு கட்டறீங்க மழை வரலைன்னு பொலம்பரீங்க...

எங்களில் ஒருவர் இறந்தால் ஆயிரம் பேர் ஒன்று கூடுவோம்,கத்தி அழுவோம்,ஆனால் ரோட்டில் உங்களில் ஒருவர் அடிபட்டுக் கிடந்தால் கண்டும் கானாமல் போகறீர்கள் ,இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு கிடக்கிறார்கள் யாராவது அவர்களுக்காக குரல் கொடுத்தீர்களா...ஒற்றுமைய எங்கள பார்த்து கத்துக்குங்க.

நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா ,எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்:”நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.”

அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானேன்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

ஓ நாங்க உங்க முன்னோர்களா!!!சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க,உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டீங்களோ முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க,செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து படைக்கிறதுல என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும். 

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை.

VIA Ilayaraja Dentist
☯☯☯http://osmeb.blogspot.in/ ☯☯☯ ஹாய் ஆறு அறிவு மனிதர்களே,நான் தான் ஐந்து அறிவு காகம் பேசுறேன்...

நாங்க கறுப்பா தான் இருக்கோம் ஆனா அதை பத்தி நாங்கள் கவலை பட்டது இல்லை.நாங்கள் அனைத்துண்ணிகள் தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு, போன்றவற்றையும் வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறோம் , இறந்த உடல்களையும் உண்ணுவோம்.

நாங்கள் மரங்களில் கூடு கட்டி வாழ்கிறோம் ஆனா நீங்க மரத்தை எல்லம் வெட்டி போட்டுட்டு மாடி வீடு கட்டறீங்க மழை வரலைன்னு பொலம்பரீங்க...

எங்களில் ஒருவர் இறந்தால் ஆயிரம் பேர் ஒன்று கூடுவோம்,கத்தி அழுவோம்,ஆனால் ரோட்டில் உங்களில் ஒருவர் அடிபட்டுக் கிடந்தால் கண்டும் கானாமல் போகறீர்கள் ,இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு கிடக்கிறார்கள் யாராவது அவர்களுக்காக குரல் கொடுத்தீர்களா...ஒற்றுமைய எங்கள பார்த்து கத்துக்குங்க.

நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா ,எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்:”நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.”

அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானேன்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

 நாங்க உங்க முன்னோர்களா!!!சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க,உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டீங்களோ முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க,செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து படைக்கிறதுல என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும். 

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை.

VIA Ilayaraja Dentist & 
 ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்