|
|
|
|
மனிதர்களின் முதல் முகவரியே அவர்களின் முகம் தான் என்பதால் அனைவரும் அதை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சூப் வைத்து குடித்து வாருங்கள். உங்கள் மேனி எழிலாகும்.
அவ்வப்போது, முகத்தில் பாதாம் பருப்பு விழுது, தேன், பால், ஆகியவற்றை
ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவ
வேண்டும். முகம் இளமையாக இருக்கும்.
வேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், பால் மற்றும்
கடலை மாவை கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்நீரால்
முகத்தை கழுவி வர பருக்கள் மறையும்.
(Thanks to Source from Lankasri ) |
|