கூந்தல் பிரச்சனை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:28 | Best Blogger Tips
கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு விரைவிலேயே வலுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே. இதற்காக ஸ்பாக்களுக்குச் சென்று சிகிச்சையை மேற்கொள்வதை விட, வீட்டிலேயே இதற்கான சிகிக்சை எடுத்து கொள்ளலாம். கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும். அது என்ன ஹேர் மாஸ்க் என்பதை சற்று படித்து, செய்து பாருங்களேன்...

வாழைப்பழம் மற்றும் தயிர் மாஸ்க்:
===========================

கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இந்த பழம் மிகவும் சிறந்த விலைக் குறைவான விட்டில் செய்யப்படும் ஹேர் மாஸ்க். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.

கொய்யா மற்றும் எலுமிச்சை மாஸ்க்:
============================

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.

பப்பாளி மற்றும் பால்:
================

பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை சாறு:
============================

இந்த ஹேர் மாஸ்க் ஸ்கால்பில் ஏற்படும் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, அரிப்பு, அதிக எண்ணெய் பசையான ஸ்கால்ப், இதனால் கூந்தல் உதிர்தல் போன்றவற்றிற்கு சிறந்தது. ஆகவே சிறிது ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, அவற்றை நன்கு மசித்து, பால், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து, கூந்தல் மற்றும் தலைக்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரால் அலச வேண்டும்.


பீச் மற்றும் தயிர் மாஸ்க்:
===================

வறண்ட மற்றும் அரிப்பான ஸ்கால்ப்பிற்கு இந்த வகையான ஹேர் மாஸ்க் சிறந்தது. அதற்கு பீச் பழங்களை நன்கு மசித்து, சிறிது தயிரை விட்டு, வேண்டுமென்றால் இதனுடன் மற்ற பழங்களான ஆரஞ்சு, பப்பாளி போன்றவைகளை சேர்த்து, கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

மேற்கூறியவையெல்லாம் சில வகையான வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இதனை 10 நிமிடம் செய்யலாம். அதிலும் இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது.