நமது உணவு செரிக்கின்ற உறுப்புகளிலேயே பெரியது இரைப்பை. இந்த இரைப்பை,
குடல் இவற்றில் பல்வேறு காரணங்களால் புண்கள் ஏற்படும். இரைப்பையில் ஏற்பட்ட
புண் இரைப்பைப்புண் எனவும், குடல் பகுதியில் ஏற்பட்ட புண், குடல் புண் என
வும் பெயர் பெறும். இந்தப் புண்கள் ஏன் ஏற்படுகின்றன?
1. எளிதில் சீரணமாகாத உணவுப் பொருட் களை அளவுக்கு அதிகமாக உண்பதால்.
2. குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள் ளாமல் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால்.
3. அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள் வது, பட்டினி இருப்பது முதலியவற்றால்.
4. மிகச் சூடான பானங்களைப் பருகுவதால் சூடான உணவுப் பொருட்களை உண்பதால்… காரசாரமான மசாலா கலந்த உணவுகளை உண்பதால்…
5. சத்தான உணவு உண்ணாதவர்கள், புரதச் சத்து, கொழுப்புச்சத்து காய்கறிகள்,
முதலியவற்றை அதிக அள வில் உணவில் சேர்க்காதவர்களுக்கும் குடலில் கிருமி
உடையவர்களுக்கும் வயிற்றில் புண் ஏற்படலாம்.
6. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால்…
7. சில வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக மருத்துவரின் ஆலோசனையின்றி, உண்பதால்.
8. காயங்கள், தொற்றுக்கள் முதலியவை களினால்…
9. கல், மண், உமி, தூசு, மற்ற கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பதால்.
கிராமங்களிலே ‘‘ஒரு சாண் வயிற்றுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாய்’’
என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். ஆனால், தற்போது கோடி கோடியாய்
சம்பாதிப்பவர்கள் ஒரு சாண் வயிற்றைப் பற்றி கவலைப்படவும் நேரம்
இருப்பதில்லை. இதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்குத்தான் வாழ்க்கை
நடத்துகிறார்கள்?
மற்றொன்று, யாரும் நேரத்தில் உணவு உண்ப தில்லை,
நேரங்கெட்ட நேரத்தில் உண்கிறார்கள். இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும்
இரவுக்கடைகளில் உணவு உண்பவர்களை நாம் பார்க்கிறோம். நாம் உடலிலுள்ள எல்லா
உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் வயிற்றுக்கு? ஓயாத தொல்லைதான்.
ஆகவே அதற்கு ஓயாத தொல்லை கொடுக்கும்போது வயிறும் நமக்கு ஓயாத தொல்லை
கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது புண்மூலம்!
மற்றும் சிலர் வயிற்றைக்
குப்பைக் கூடை என நினைத்து ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அந்தோபாவம் அந்த வயிறு!! இவைகளைத் தவிர கந்தக அமிலம் முதலிய அமில வகைகள்,
சுண்ணாம்பு போன்ற காரவகைகள் வயிற்றை ஒட்டிய பகுதிகளில் கட்டிகள் ஏற்படுதல்,
இவற்றால் தீவிரமான திடீர் புண்கள் தோன்றும்.
இரைப்பைப்புண்
இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி உண்டாகும். ஆகவே இவர்கள்
வலியிலிருந்து விடுபட தாங்களே முயற்சித்து வாந்தி எடுப்பார்கள். ஆகவே
சாப்பிடாமல் இருப்பதால்… சாப்பிட்ட உணவை வாந்தி எடுக்க வைப்பதால்
இவர்களுக்கு உடலில் சத்து சேராமல் உடல் மெலிந்து போவார்கள். இதன் காரணமாக
உடலில் ரத்த சோகையும் பலகீனமும் ஏற்பட்டு தொடர்ந்து பல நோய்களுக்கு
வழிவகுக்கும்.
சிறுகுடலில் புண் இருந்தால் மேல் வயிற்றில் வலி
இருக்கும். இரைப்பையில் உணவில்லாமல் காலியாக இருக்கும்போது வலி அதிகமாக
இருக்கும். சாப்பிட்டவுடன் வலி குறைந்துவிடும். மேலும், குடல் புண்
உள்ளவர்களுக்கு குமட்டல், வாந்தி, புளிப்பு, நீரூறல், நெஞ்சு எரிச்சல் ஆகிய
அறி குறி குணங்கள் இருக்கும்.
நமது உணவு செரிக்கின்ற உறுப்புகளிலேயே பெரியது இரைப்பை. இந்த இரைப்பை, குடல் இவற்றில் பல்வேறு காரணங்களால் புண்கள் ஏற்படும். இரைப்பையில் ஏற்பட்ட புண் இரைப்பைப்புண் எனவும், குடல் பகுதியில் ஏற்பட்ட புண், குடல் புண் என வும் பெயர் பெறும். இந்தப் புண்கள் ஏன் ஏற்படுகின்றன?
1. எளிதில் சீரணமாகாத உணவுப் பொருட் களை அளவுக்கு அதிகமாக உண்பதால்.
2. குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள் ளாமல் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால்.
3. அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள் வது, பட்டினி இருப்பது முதலியவற்றால்.
4. மிகச் சூடான பானங்களைப் பருகுவதால் சூடான உணவுப் பொருட்களை உண்பதால்… காரசாரமான மசாலா கலந்த உணவுகளை உண்பதால்…
5. சத்தான உணவு உண்ணாதவர்கள், புரதச் சத்து, கொழுப்புச்சத்து காய்கறிகள், முதலியவற்றை அதிக அள வில் உணவில் சேர்க்காதவர்களுக்கும் குடலில் கிருமி உடையவர்களுக்கும் வயிற்றில் புண் ஏற்படலாம்.
6. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால்…
7. சில வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக மருத்துவரின் ஆலோசனையின்றி, உண்பதால்.
8. காயங்கள், தொற்றுக்கள் முதலியவை களினால்…
9. கல், மண், உமி, தூசு, மற்ற கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பதால்.
கிராமங்களிலே ‘‘ஒரு சாண் வயிற்றுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாய்’’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். ஆனால், தற்போது கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் ஒரு சாண் வயிற்றைப் பற்றி கவலைப்படவும் நேரம் இருப்பதில்லை. இதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்குத்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்?
மற்றொன்று, யாரும் நேரத்தில் உணவு உண்ப தில்லை, நேரங்கெட்ட நேரத்தில் உண்கிறார்கள். இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இரவுக்கடைகளில் உணவு உண்பவர்களை நாம் பார்க்கிறோம். நாம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் வயிற்றுக்கு? ஓயாத தொல்லைதான். ஆகவே அதற்கு ஓயாத தொல்லை கொடுக்கும்போது வயிறும் நமக்கு ஓயாத தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது புண்மூலம்!
மற்றும் சிலர் வயிற்றைக் குப்பைக் கூடை என நினைத்து ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்தோபாவம் அந்த வயிறு!! இவைகளைத் தவிர கந்தக அமிலம் முதலிய அமில வகைகள், சுண்ணாம்பு போன்ற காரவகைகள் வயிற்றை ஒட்டிய பகுதிகளில் கட்டிகள் ஏற்படுதல், இவற்றால் தீவிரமான திடீர் புண்கள் தோன்றும்.
இரைப்பைப்புண் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி உண்டாகும். ஆகவே இவர்கள் வலியிலிருந்து விடுபட தாங்களே முயற்சித்து வாந்தி எடுப்பார்கள். ஆகவே சாப்பிடாமல் இருப்பதால்… சாப்பிட்ட உணவை வாந்தி எடுக்க வைப்பதால் இவர்களுக்கு உடலில் சத்து சேராமல் உடல் மெலிந்து போவார்கள். இதன் காரணமாக உடலில் ரத்த சோகையும் பலகீனமும் ஏற்பட்டு தொடர்ந்து பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
சிறுகுடலில் புண் இருந்தால் மேல் வயிற்றில் வலி இருக்கும். இரைப்பையில் உணவில்லாமல் காலியாக இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். சாப்பிட்டவுடன் வலி குறைந்துவிடும். மேலும், குடல் புண் உள்ளவர்களுக்கு குமட்டல், வாந்தி, புளிப்பு, நீரூறல், நெஞ்சு எரிச்சல் ஆகிய அறி குறி குணங்கள் இருக்கும்.