வேக வைத்து சாப்பிட வேண்டிய 12 உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:29 PM | Best Blogger Tips
வேக வைத்து சாப்பிட வேண்டிய 12 உணவுகள்!!!

உணவுகளில் சிலவற்றை வேக வைக்காமல் சாப்பிடலாம். ஆனால் அனைத்து உணவுகளையுமே அவ்வாறு சாப்பிட முடியாது. ஒரு சில உணவுகள எப்படி சாப்பிட வேண்டுமோ, அவ்வாறு தான் சாப்பிட வேண்டும். அதிலும் வேக வைத்த உணவுகள் மட்டும் தான் சுவையாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வேக வைத்தால் தான் நல்லது. மேலும் அதில் உள்ள சத்துக்களை எளிதாக பெறலாம். உதாரணமாக அரிசி, பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை வேக வைக்காமல் சாப்பிட முடியாது. மேலும் இவற்றையெல்லாம் நீரில் கொதிக்க வைத்து தான் சாப்பிட முடியும். இதனால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

காய்கறிகள் மட்டுமின்றி அசைவ உணவுகளான சிக்கன், முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றையும் நன்றாக வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது. மேலும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது தான் சிறந்த வழி. அதிலும் வேக வைப்பதில் எந்த உணவுகளை எந்த அளவு வேக வைத்து சாப்பிடுகிறோமோ, அதைப் பொறுத்தும் ஆரோக்கியம் உள்ளது. முக்கியமாக பொரித்து சாப்பிடும் உணவுகளை விட, வேக வைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் கொழுப்புகள் குறைவாக இருக்கும்.

எனவே இப்போது எந்த உணவுகளை வேக வைத்து சாப்பிட வேண்டும் என்பதையும், அவற்றில் சுவையை அதிகரிக்க எதையெல்லாம் அதனுடன் சேர்த்து சமைக்கலாம் என்பதையும் பார்ப்போமா!!!

வேக வைத்த உருளைக்கிழங்கை பொதுவாக மசித்து தான் பயன்படுத்துவோம். அதிலும் அதனை பூண்டு சேர்த்து வதக்கி சமைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

நன்கு வேக வைத்த முட்டையை பிரட் உடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதிலும் அதனுடன் மிளகுத்தூளை தூவி சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

சைனீஸ் உணவுகளான நூடுல்ஸ் அல்லது பாஸ்தாவை சமைக்கும் போது, முதலில் நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். அதிலும் அதில் ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து சமைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். பின் அதனை மற்ற பொருட்கள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

சிக்கனை வேக வைக்கும் போது, அதனை அளவுக்கு அதிகமான வேக வைத்துவிட வேண்டாம். மேலும் வேக வைக்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து, பின் அந்த நீரில் சூப் போட்டு குடிக்கலாம்.

பீன்ஸை பச்சையாக சாப்பிட முடியாது. ஆகவே அதனை வேக வைத்து, சுவைக்கு தேவையான சாஸ் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து, ருசியாக சமைத்து சாப்பிடலாம்.

பருப்பு வகைகளை நன்கு நீரில் போட்டு கொதிக்க வைத்து, வேக வைக்க வேண்டும். பின் அதில் மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்தால் சுவையோ சுவை தான்.

அரிசியை தண்ணீர் போட்டு வேக வைத்து சாப்பிடும் போது, அதில் சற்று அதிகமான தண்ணீர் விட்டு, வேக வைத்து, பின் எஞ்சிய நீரை வடித்துவிட்டால், அதில் உள்ள ஸ்டார்ச் வெளியேறிவிடும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமலும் தடுக்கலாம்.

கடல் உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கும். மேலும் அவ்வாறு வேக வைப்பதால், அதில் உள்ள சில கடல் கனிமங்கள் அழிந்துவிடும். பின் அவற்றை குழம்பு, சூப் என்று செய்து குடிக்கலாம்.

இனிப்பான சோளத்தை வேக வைக்க கூடாது. ஆனால் மற்ற முதிர்ந்த சோளத்தை நன்கு வேக வைத்து, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட, அருமையாக வேண்டும்.

பொதுவாக ப்ராக்கோலி மற்றும் இதர இலைக் காய்கறிகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த காய்கறியை ஓரளவு வேக வைத்து சமைத்து, சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

மாட்டிறைச்சியில் கொழுப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் இதில் உள்ள கலோரியை சேமிக்க, எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக, வேக வைப்பது நல்லது.

அனைத்து கீரைகளையுமே நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஆனால் பசலைக் கீரையை நன்கு வேக வைக்க வேண்டும். அதேப்போல் கடுகுக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் கேல் போன்றவற்றையும் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.