40 வருடங்களுக்கு முன்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips

May be an image of 5 people

40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை
 
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..
 
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
 
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.
 
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
 
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.
 
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
 
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.
 
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.
 
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
 
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
 
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
 
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
 
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.
 
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.
 
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
 
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.
 
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.
 
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
 
19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.
 
20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.
 
21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.
 
22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.
 
23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.
 
24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.
 
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
 
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
 
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
 
இன்று 
 
என்ன தான் உலகம் நவீனமயம் 
 
ஆனாலும் 
 
தொலைந்த வசந்தகாலத்தை 
இன்று 
 
யாராலும் மீட்க முடியாது.
 

 

மணக்கால் அய்யம்பேட்டை | 10:51 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

தூரத்தில் தலையில் சுமையுடன் நடந்து வந்து கொண்டிருந்தவரை கடகடவென புகைப்படம் எடுத்துவிட்டு அவரது அருகாமை வருகைக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
 
வியர்த்து விறுவிறுப்பாய் அருகாமையில் வந்து சேர்ந்தவரிடம்
 
என்னக்கா வேல முடிஞ்சுருச்சா? வீட்டுக்கா என்றதும்
 
ஆமா ராஜா, வீட்டுக்குதா, காலையில போன இப்போதான் வர, மலாட்ட கொல்லி, எல்லாத்தையும் அறுத்துட்டு இப்போதான் வர, 
 
இருட்டிருச்சு, போயிட்டு இதுகப்பறம் வேற சமைக்கணும், என்று சுறுசுறுப்பாய் முடித்தார்
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உழைத்து கலைப்புடன் இருப்பவரிடம் எடுத்த புகைப்படத்தை காட்டினால் ‌மகிழ்ச்சி அடைவாரா அல்லது எரிச்சல் அடைவாரா என்ற சந்தேகம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது
சரி கிராமங்களில் நாம் வாங்காத திட்டா என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு
அக்கா உங்கள ஃபோட்டோ எடுத்திருக்க பாக்குறீங்களா என்றதும்
 
என்னையா எப்போ ராஜா எடுத்த ஆச்சரியத்துடனும் வெட்கத்துடனும் சிரித்தபடியே கேட்டார்
 
இங்க பாருக்கா, நீங்க எட்டருந்து வரும் போதே எடுத்துட்டக்கா என்று திரையை அவரது முகத்திற்கு பக்கம் திருப்பியதும் முகம் முழுக்க சிரிப்பு
 
அவரது சிரிப்பிற்க்கு பக்கவாத்தியமாக மேலே வானில் பச்சைக்கிளிகள் நான்கு கீ கீ கீ என்று கத்தியபடி கூட்டை நோக்கி வேக வேகமாக சென்றுகொண்டிருந்தன
 
எப்போ ராஜா எடுத்த? அழகா இருக்கு தங்கம், பராவால எனக்கே தெரியாம எடுத்திருக்க, சரி இது எடுத்து என்ன பண்ணுவ என்று வழக்கம் போல எல்லா கிராமவாசிகள் கேட்கும் அதே கேள்வியை கேட்டார்
 
நா ஃபோட்டோகிராபர் கா, எனக்கு கிராமங்கள், பறவைகள், விவசாயிகள், கிராமத்து தனித்துவமான மனிதர்கள் இவங்களை எல்லா ஃபோட்டோ எடுக்குறது ரொம்ப பிடிக்கும், 
 
எடுக்குற ஃபோட்டோவ என்னோட ஞாபகார்த்தமாகவும் எல்லாரும் ரசிக்கும்படியாகவும் ஃபேஸ் புக்ல போடுவேன் கா என்றதும்
 
ஃபேஸ் புக்ல போடுவியா? அப்போ உலகம் முழுக்க போவேனா நானு என்று பெருமிதத்துடன் சிரித்தவரிடம்
 
ஆமாக்கா நம்ம தமிழ் மக்கள் உலகம் முழுக்க எங்கெங்கெல்லாம் இருக்காங்களோ அங்கலா போவீங்ககக்கா, அப்பறம் உங்க ஃபோட்டோவ நா ஃபேஸ் புக்ல போட்டுக்கவா, உங்களுக்கு எதும் ஆட்சேபன இல்லையே கா என்றதும்
இதுல என்ன ராஜா ஆட்சேபனை, நானும் ஃபோன் வெச்சிருக்க, அதுல பொம்பளைங்க எவ்ளோ அரையும் குறையுமா ரீல்ஸ் கீல்ஸ்ணு வந்து கேவலமா ஆடுறாங்கண்ணு நானும் பாத்துட்டுதான் இருக்க, 
 
ஆனா அந்த கேவலமான ஜென்மங்கள சொல்லி தப்பில்ல அதுங்களுக்கு லைக் போடுறாணுங்களே கேடுகெட்டவனுங்க அவனுங்களா தான் செருப்பால அடிக்கணும், அவனுங்க லைக் போடுறதுனால தான் 
 
அவளுங்க அடுத்த வீடியோ போடுறாளுங்க மானங்கெட்டவளுங்க, பாக்கும் போது வயிறு எறியும், சரி அதவிடு
எனக்கென்ன, அக்கா போய் காட்டுல உழைச்சிட்டு வரேன்,
 
 இந்த ஃபோட்டோ போட்டா எனக்கு தான கௌரவம், இருபது ரூபாவா இருந்தாலும் உழைச்சு சாப்பிடணும், நா உழைச்சிட்டு வர ஃபோட்டோ தான போட போற, அது எனக்கு தான் பெருமை, நீ போடு தங்கம் என்று சிரித்தபடியும் சிலாய்த்தபடியும் முடித்தார்
 
அவர் தான் ஒரு உழவச்சி என்ற பெருமையும், கௌரவமும் அவரது ஒவ்வொரு பேச்சை முடிக்கும் போதும் ஆங்காங்கே மிளிர்ந்தது
அக்கா நீங்க வேற தலையில வெயிட்ட வெச்சிட்டு நின்னுட்டு இருக்கீங்க, கஷ்ட்டமா இருக்கு நீங்க கிளம்புங்க, வீட்டு ஃபோன் இல்ல உங்க ஃபோன்லயிருந்து ஃபேஸ் புக்ல நா சொல்ற பக்கத்தை பாருங்க, அதுல நீங்க வருவீங்க பாருங்க என்றதும்
எது இது வெயிட்டா? 
 
இது மாதிரி புல்லு கட்ட நாலு மடங்கு வெச்சிட்டு ஏழு கிலோமீட்டர் நடப்பேன் அக்கா, இது சும்மா பஞ்சு மெத்தை கண்ணு, சரி உன்னோட நம்பர எழுதி கொடு, தம்பிய உன்கிட்ட பேச சொல்றேன், ஃபோட்டோ போடும் போது தம்பிக்கு வாட்ஸ்அப் பண்ணு என்றார்
 
என்னக்கா ரீல்ஸ் என்ற வாட்ஸ்அப் என்ற பெரிய ஆளுதான் போலக்கா நீ என்றதும்
முகம் முழுக்க சிரிப்புடன் என்ன பன்றது தங்கம், இப்போ உலகம் முழுக்க எல்லார் கையிலும் வந்துருச்சு இதுல கிராமத்துகாரங்க மட்டும் என்ன விதிவிலக்கா, ஃபோன் வந்ததுலயிருந்து படிக்காதவங்க கூட எல்லாத்தையும் கையிலே தெரிஞ்சிக்குறாங்க 
 
கண்ணு, இனி எந்த அரசியல்வாதியும் எந்த பேக் காரணும் கிராமத்து காரங்கள ஏமாத்துறது கஷ்டம், கெட்டதும் இருக்கு நல்லதும் இருக்கு நல்லத தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்று முடிப்பதற்குள் சட்டென்று சுதாரித்தவர்
அச்சச்சோ தங்கம் பேசினதுல நேரம் போனதே தெரியல, அங்க பாரு தெரு லைட்டே போட்டுட்டாங்க, 
 
நா கிளம்புற, நீ பத்திரமா போயிட்டு வா, இப்படியே போனா மெயின் ரோட்டுல டீ கடை இருக்கும், அங்க டீ வாங்கி குடிச்சிட்டு போ, அக்கா ஃபேஸ் புக்ல கண்டிப்பா பாக்குற, நீ தைரியமா போடு, என்று எனக்கு அவசர அவசரமாக அனுமதியும் விடையும் அங்கிருந்து கொடுத்துவிட்டு கடகடவென்று நடந்து சென்று சாலையின் இடது பக்கம் வளைந்து எனது கண்களிருந்து முழுவதுமாய் மறைந்தார்
 
 
வானில் நட்சத்திரங்கள் வேக வேகமாய் இரவு பணிக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தன
அவரிடம் இன்னும் அதிக நேரம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றியது, காரணம் அவரது உடல் மொழி மற்றும் பேச்சு முழுக்க தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் மேலோங்கி காணப்பட்டது
எப்போதும் இது போன்ற நேர்மறை சிந்தனை உடையவர்களிடம் நேரம் செலவிடும் போது நமது நன்நேரமும், ஆயுளும் மேலோங்கும்
அதில் எல்லாம் தகுதியுடைய ஒரு சிறப்பான மனிதரை இன்று சந்திக்க கடவுளாய் பூஜிக்கப்படும் புகைப்பட கலை நேரம் உருவாக்கி தந்தது என்று உதட்டோர சிரிப்புடன் தனியாய் அங்கே நின்றுக் கொண்டிருக்கும் போது
 
அருகிலிருந்த புதர்களில் இரவை வரவேற்கும் மகிழ்ச்சியில் சுவற்று கோழிகள் அனைத்தும் ஒருமித்தமாய் சப்தம் எழுப்ப தொடங்கியது
சுற்றி காணும் போது இருள் அப்பாதைக்கு தாழிட்டிருந்தது, எகிறி உதைத்து ஒளிர்ந்த வாகன தலையொளி அப்பாதையின் தாழை திறந்தது 
 
இருளை பிளந்து சீறிட்டு பறந்த இருசக்கர வாகனம் நகரின் பிரதான சாலையை பிடிக்க
இடப்பக்கம் கூரக்கடை டீ கடை ஒன்று செய்தித்தாள்களால் இரண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்தபடி ஆர்பாட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது.
 
#வானூர்.

 

மசினகுடிக்கு ஏன் இப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 May be an image of fog and road

மசினகுடிக்கு ஏன் இப்படி படையெடுக்கிறார்கள் இந்த இளைஞர்கள்..
 
இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் ஒரு இடத்தின் பெயர் மசினக்குடி. காடுகள் வழி சுற்றுலா அனுபவத்தைப் பெற விரும்புவோர், இங்கே கட்டாயம் சென்று வர வேண்டும். அப்படியென்ன சிறப்புகள் நிறைந்திருக்கிறது என்று இங்கு காணலாம்..
 
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் முக்கிய இடங்களாக நாம் அறிந்து வைத்திருப்பது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி தான். ஆனால் இவற்றையும் மிஞ்சியமாக பொக்கிஷயங்களைத் தன் வசம் பொதித்து வைத்திருக்கும் இடம் தான் மசினக்குடி.
எப்படிச் செல்வது?
 
ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலை எண் 700ல் சென்றால், ஒரு மணி நேரத்திற்குள் சென்று விடலாம். கர்நாடகா, கேரளாவில் இருந்து நேரடியாக செல்வதற்கும் போக்குவரத்து வசதி உள்ளது. கோவாவில் இருந்து ஊட்டி - 
குண்டல்பேட்டை நெடுஞ்சாலை வழியாகவும் செல்லலாம். இதில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. முதுமலையில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது.
 
விமானம் மூலம் மசினக்குடி வர விரும்புவோர், கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து கார் மூலம் மசினக்குடி செல்லலாம். சாலை மார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். அங்கிருந்து 81 கிமீ தொலைவில் உள்ள மசினக்குடியை அடையலாம். தமிழகத்தில் எங்கிருந்தும் ஊட்டி சென்றால், அங்கிருந்து எளிதில் மசினக்குடி போய்ச் சேரலாம். நீங்கள் மசினக்குடி போய் சேரும் போது, இரவாக இருந்தால் தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது. அங்கு விருந்து, கேம் பயர் உள்ளிட்டவை மூலம் பொழுதை கழிக்கலாம். அடுத்த நாள் காலை முதல் மசினக்குடியை சுற்றிப் பார்க்க கிளம்பி விடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் சிறிதும் மாசுபடாத இடங்களில் இதுவும் ஒன்று. 
 
முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகே உள்ள ஊரில் மசினக்குடி அமைந்துள்ளது. வார இறுதி நாட்களை செலவிட, மிக சிறப்பான ஒரு இடம்.
மசினக்குடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலை தோட்டங்கள், 
 
கோபாலசுவாமி பெட்டா கோவில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and lake 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

எளியவர்கள் விற்கும் பண்டங்களை விட ஆரோக்கியமான தீனி.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 May be an image of 2 people

மாலை நேர ஆரோக்கிய இடைதீனிகள்
மதுரையில் மாலை 5 மணிக்கு எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை 
 
ஆனால் மதுரை நகரத்தின் ஒவ்வொரு திசையில் இருந்தும் தள்ளுவண்டிகள் நகரத்திற்குள் நுழைய தொடங்கும்.
அவரவருக்கு என ஒரு நிரந்தர இடம் இருக்கும்,
கச்சிதமாக அங்கே சென்று இந்த வண்டிகள் நின்றுவிடும்.
 
அவித்த மரவள்ளிக்கிழங்கு,
 
சக்கரவள்ளிக்கிழங்கு,
 
மக்காச்சோளம் சுட்டது,
 
மக்காச்சோளம் ஆவியில் வெந்தது
அவித்த பாசிப்பயிறு, 
 
சுண்டல், 
 
பட்டாணி
வெள்ளச்சுண்டல், 
 
கீத்து கீதாய் வெட்டிய மாங்காய்- 
 
அன்னாச்சிப்பழம், 
 
வெள்ளரிக்காய் 
 
நிலக்கடலை வறுத்தது
 
நிலக்கடலை அவிச்சது
 
என இவர்களின் தள்ளுவண்டிகளில்
ஐட்டங்கள் கூடிக் கொண்டே செல்வதை
நான் பார்த்து வருகிறேன். 
 
90களில் இந்த வண்டிகள் எப்பொழுதும் தெருவிளக்குகளின் அருகில் தான் நிற்கும்,
 
ஆனால் மெல்ல பெட்ரோமாக்ஸ் விளக்கு வந்தவுடன் இந்த வண்டிகள் வியாபாரம் நடக்கும் இடங்கள் நோக்கி நகரவும் தொடங்கின. 
 
இன்று இந்த வண்டிகள் அனைத்திலும் பேட்டரியும் அத்துடன் பொறுத்தப்பட்ட LED விளக்குகளும்... 
 
இந்த வண்டியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இடைத்தீனிகளை மிளிரச் செய்கிறது.
 
மதுரையில் உழைத்து கிடப்பவர்கள்
மதியம் 2 மணிக்கு சாப்பிட்டால்
அடுத்து கடையை அல்லது வேலையை
முடித்து விட்டு இரவு 10-11 மணிக்கு தான் வீட்டில் சென்று சாப்பிட முடியும்
அப்படி நடுவில் ஒரு இடைதீனியாக
இந்த வண்டிகள் அவர்களின் பசியை போக்க உதவுகிறது.
 
இந்த வண்டிகளிலேயே வித்தை காட்டுபவர்கள்
பலர் கடந்த 20 ஆண்டுகளில் வந்துவிட்டன,
மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் அவித்த பயிறுகள் மட்டுமே விற்கும் அண்ணன் ஒருவர் இருந்தார், 
 
அவரது வண்டிக்கு என்று தனியான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். 
 
அவரை போன்றவர்கள் இந்த வண்டிகள் மீதிருந்த மரியாதையை கூட்டி விட்டன,
அவரது வண்டியும் பொருட்களுமே பார்பதற்கே அவ்வளவு அழகாக, பளிச்சென இருக்கும்.
இன்று வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தங்கள்..
 
மீனாட்சி பேருந்து நிலையம்
மாட்டுதாவணி பேருந்து நிலையம்,
அண்ணா பேருந்து நிலையம்
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்று
எல்லா இடங்களிலும் மாலை 4 அல்லது 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பார்க்கலாம்.
 
இந்த எளியவர்கள் விற்கும் பண்டங்களை விட ஆரோக்கியமான தீனிகள் கிடைக்கிறதா என்ன?? 
 
இருந்தால் சொல்லுங்களேன்....

Mantras and Miracles

 

🌷 🌷🌷 🌷 May be an illustration of 1 person  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

 

*பரமாச்சாரியார் பற்றி ஒரு ஆங்கில

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, temple and text

*பரமாச்சாரியார் பற்றி ஒரு ஆங்கில சிறை அதிகாரியின் டைரிக் குறிப்பு:*
 
காஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 
 
பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார்.
 
கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை 5 மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள் வந்த நேரத்தில் பெரியவர் வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறுமணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்கமுடியும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகிவிட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை.
 
இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில், ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால், திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட சுவாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். 
 
அப்போது கைதிகள் சுவாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுவாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திரவாழ்வு வாழவேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார்.
 
இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில்... "துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர்நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள்,
 
 அந்த மகாபெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன்.இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்தபிறகு நான் ஒரு சிறைஅதிகாரி என்ற எண்ணமே மறந்துபோனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என்வழி..." என்று குறிப்பிட்டுள்ளார்.
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻
*ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..*
*காலடி சங்கர காமகோடி சங்கர..*
*சிவ சிவ சங்கர பவ பவ சங்கர...*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🌷 🌷🌷 🌷 May be an image of 2 people  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹