ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, 90 வயதை கடந்த அவர்கள் இந்தியாவிலும் உண்டு இந்தியாவுக்கு வெளியேயும் உண்டு
தளர்ந்த வயதிலும் நடுங்கும் கரங்களுடன் இருந்தாலும், வார்த்தைகளை சரிவர சொல்லமுடியாவிட்டாலும் நேதாஜி என்றவுடன் அவர்களின் சுருங்கிய கண்ணில் ஒரு வெளிச்சம் வரும்
அவர்கள் உதட்டில் ஒரு புன்சிரிப்ப்பும் கம்பீரமும் வரும்
அவர் பெயரை சொன்னாலே கண்களில் நீர்வழிய மெல்ல நம்கைகளை பற்றி எழும்புவார்கள் , அப்படியே நின்று அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள்
பின் வயதான முதிர்சியின் தளர்ச்சியால் அமர்ந்து மெல்ல அவர் நினைவுகளில் மூழ்குவார்கள், அவரை பற்றி பேசும்போது ஒரு தெய்வத்தின் பெருமையுடன் பக்தியுடன் பேசுவார்கள்
காலம் அப்படி சில மனிதர்களை எமக்கு காட்டிற்று, அவர்களுடன் நேதாஜி பற்றி பேசிய காலங்கள் உயிரில் கலந்தவை
நேதாஜி எனும் மாமனிதனின் அப்பழுக்கற்ற தேசபற்றின் ஆனமவுக்கு அவர்கள் வாழும் சாட்சிகள்
கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும்
கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை
தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான தியாகிகளின் வார்த்தையில் கொஞ்சமும் மிகையோ பொய்யோ இல்லை
எக்காலமும் காதில் ஒலிக்கும் வார்த்தைகள் அவை, ஒவ்வொரு இந்தியனும் மனதிலும் சிந்தையிலும் எந்நேரமும் நிறுத்தவேண்டிய வரலாறு அவை
“நேதாஜி இந்தியர்களால் விரும்பட்ட மாபெரும் தலைவர் , குறிப்பாக இளையபட்டாளம் அவரை கொண்டாடி கொண்டிருந்தது.
காந்தியின் அணுகுமுறை இங்கு குழப்பமானது என சொல்லி, பகத்சிங்கினை காந்தி கைவிட்ட பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார் போஸ்
காந்தியால் இங்கே ஒரு நன்மையும் விளையாது, குழப்பவாதியான அவர் இன்னும் குழப்புவார் அவருக்கு பிரிட்டிஷாரிடம் சுதந்திரம் கேட்கும் தைரியம் கூட இல்லை, இது எங்கள் நாடு என கேட்கும் துணிச்சல் கூட இல்லை என்பதை அவர் எளிதாக உணர்ந்தார்
காந்தியினை புறக்கணித்து தனிபாதை கண்டார்
ஆம் அதைத்தான் செய்யவேண்டும் என தேசம் எதிர்பார்த்தது, அதனால் மாபெரும் ஆதரவும் கிட்டிற்று
இங்கே ஒரு விசித்திரம் உண்டு, கொஞ்சம் கவனித்தால் புரியும்
போஸ் காந்திக்கும் எதிரி, பிரிட்டிஷ்காரனுக்கும் எதிரி. அதாவது இந்த நாட்டை அடிமைபடுத்தி ஆள்பவனுக்க எதிரி சுதந்திர போராட்ட தலைவன் என்பவனுக்கும் எதிர் என்றால் என்ன அர்த்தம்?
இந்த சுதந்திரபோராட்ட தலைவனும் பிரிட்டிஷாரும் ஒரே அணி என அர்த்தம், நாங்கள் அப்படித்தான் உணர்ந்தோம், தேசமும் அதை உண்மை என சொல்லிற்று
ஏகபட்டோர் அவர்பின்னால் உயிரை கொடுக்க முன்வந்தனர். இந்தியாவில் இருந்து மட்டுமா வந்தனர்? பர்மா மலேயா சிங்கப்பூர் என எல்லோரும் வந்தனர், பெரும்பாலும் தமிழர்கள் இருந்தனர்
கட்டம்பொம்மனையும் பூலிதேவனையும் மருதுக்களையும் போஸ் உருவில் கண்டோம் நாங்கள், அப்படி ஒரு வசீகரமான வீர தலைவர் போஸ்
காந்தி, நேரு போல வளைந்துகொடுப்பவர் அல்ல போஸ், அவரின் தன்மையே வேறு. அவர் இருந்திருந்தால் பாகிஸ்தானுமில்லை காஷ்மீர் சிக்கலுமில்லை, இன்று காணும் எந்த குழப்பமுமில்லை
அவரின் சிந்தனையும் நாட்டுபற்றும் தீர்க்கமும் அப்படினானது
இனி ஆயுதவழிதான் என இந்தியாவில் இருந்து தப்பிய நேதாஜி முதலில் ஆதரவினை மாஸ்கோவிடம்தான் கேட்டார், சோவியத் அப்போது பலமாய் இருந்தது
அவர்களோ இந்தியாவினை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற சொன்னார்கள், போஸுக்கு அதில் உடன்பாடில்லை அதன் பின்பே ஜெர்மன் சென்றார்
ஜெர்மன் ஆட்சியாளன் அவரை தன் அடியாளாக மாற்றி இந்தியாவில் ஆளவைக்க திட்டமிட்டான், வளமான இந்தியாவில் , பிரிட்டிஷ் கையில் இருக்கும் இந்தியாவில் ஜெர்மானிய அடிமையாக அவர் வாழட்டும் என திட்டமிட்டான்
நரிக்கு தப்பி புலிவாயில் தேசத்தை கொடுக்க நேதாஜி தயாரில்லை, இதனால் ஜெர்மன் ஆதரவு போதும் ஆள்வது எம்மக்கள்தான், சுதந்திர ஆட்சிதான் என சொல்லிய நேதாஜியினை அவன் ரசிக்கவில்லை
மாறாக ஜப்பான் பக்கம் தள்ளிவிட்டான், அவனுக்கு மலேய ரப்பர் மேலும் சிங்கப்பூர் துறைமுகம் மேலும் ஒரு கண் இருந்தது அதனாலே ஜப்பான் பக்கம் அவரை அனுப்பினான்
ஜப்பான் அன்று இந்நாளைய சீனா போல உற்பத்தியில், மலிவான பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது, அமெரிக்காவுக்கே சவால் விட்டது
அந்த ஜப்பான் இந்தியாவினை தன் பொருட்களை விற்கும் சந்தையாக பார்த்தது, நேதாஜி அதன் தலைவராகும் பொழுது தன் பொருட்களுக்கு பெரும் சந்தை கிடைக்கும் என கணக்கிட்டே அவருக்கு ஆதரவு கொடுத்தது
ஜப்பானின் திட்டம் தாங்களே இந்தியாவினை கைப்பற்றுவதாக இருந்தது, ஆனால் அதன்பின் ஜப்பானிடம் இருந்து மீளமுடியாது என உணர்ந்த நேதாஜி தங்கள் படைக்கு உதவினால் போதும் என சொல்லி நின்றார்
அவர் நினைத்திருந்தால் ஜப்பானிய படைகளோடு இந்தியாவுக்குள் வந்திருக்கலாம், எளிதில் பிரிட்டிசாரை விரட்டியிருக்கலாம்
ஆனால் அதன் பின் ஜப்பான் இந்தியாவினை விட்டு கிளம்புமா என்றால் இல்லை, அடுத்த போராட்டம் தொடங்கபட வேண்டும்
இப்படி சிக்கல் நிறைய இருந்ததால் அவரே இந்தியரை கொண்டு தனிபடை திரட்டினார்
ஆம் பிரிட்டிஷ்காரன் விடுதலை தரமாட்டான், எதிரி தன்னை வளைக்கபார்க்கின்றான் ஆனால் எதிரியிடம் சிக்கவும் கூடாது அதே நேரம் உதவியும் வேண்டும்
இந்த ராஜதந்திரத்தில் யாரிடமும் சிக்காமல் ராணுவத்தை அமைத்தார் நேதாஜி
அவரின் கணிப்பு சரி, ஆனால் ஜெர்மன் அணி தோற்கும் என்றோ பிரிட்டன் அமெரிக்காவுடன் தன் வல்லரசு பட்டத்தை இழந்து இந்தியாவிட்டு வெளியேறும் என்றோ யாரும் நினைக்கவில்லை அவரும் நினைக்கவில்லை
அதுவும் அந்த அணுகுண்டு தாக்குதெல்லாம் யாரும் யோசித்தது கூட இல்லை அப்படியான காலம் அது
இந்நிலையில் போர் முடிந்தது, யுத்தம் அடித்த அடியில் அமெரிக்காவும் சோவியத்தும் வல்லரசாக பிரிட்டனின் கொடி இறங்கி தன் வாலை சுருட்டி அது ஒதுங்கியது
நேதாஜி இந்தியாவுக்குள் வந்தால் அவரை தேசம் தலைவராக்கியிருக்கும், மிக எளிதில் இந்திய அதிபராயிருப்பார் நேதாஜி
ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் சோவியத்தும் அதை விரும்பவில்லை, பலமான இந்தியா அவர்களின் விருப்பம் அல்ல
அவர்கள் நேதாஜியினை போர்குற்றவாளி என்றார்கள், இன்னொன்று இந்தியாவுக்குள் அவர் வந்தால் காந்தி நேருவிடம் இருந்து அதிகாரம் அவருக்கு செல்லும் என்பதையும் கணித்தார்கள்
இது நேதாஜியின் நாடாகத்தான் இருந்தது
பிரிட்டன் தன் சுதந்திர ஒப்பந்தத்தில் இந்தியாவினை கீறிபோட்டு கலவரபடுத்தும் திட்டத்தில் இருந்தது, நேதாஜி அதற்கு நிச்சயம் ஒப்புகொள்ளமாட்டார் என கருதிற்று
நேதாஜி வந்தால் தேசத்தை பிளக்கவிடவே மாட்டார் அதைவிட ஆபத்து தேசத்தின் வெள்ளை கைகூலிகளான சிலரை ஒழித்துகட்டிவிடுவார்
ஆம் பிரிட்டிஷார் இந்தியாவின் பலமென கருதிய இடங்கள் சில, அதில் பம்பாய், வங்கம், பஞ்சாப், தமிழகம் என முக்கிய பகுதிகள் இருந்தன
வங்கத்தை கம்யூனிஸ்டுகளை விட்டு கெடுத்தான், பஞ்சாபை மூன்றாக பிரித்து கெடுத்தான்
பம்பாய் பகுதிகளின் அமைதியினை கெடுக்க அம்பேத்கருக்கு கொம்பு சீவினான் , தென்னக அமைதியினை கெடுக்க நீதிகட்சி, ஈரோட்டு ராம்சாமிக்கு ரகசிய அனுமதி கொடுத்தான்
இந்த அனைத்து ஆபத்துக்களையும் நேதாஜி இந்தியாவில் இருந்தால் செய்யமுடியாது என உணர்ந்தான்,
அதனால் காந்தியுடன் நேருவுடன் பேசும் பொழுது அதாவது உலக நிலை மாறி இனி சுதந்திரம் உறுதி என்ற நிலை வரும்பொழுது சொன்னான்
“தேசத்தை பிரித்து போடுவோம், அப்படியே நேதாஜியும் எங்களுக்கு வேண்டும். அவன் இல்லா இந்தியாவுக்கே சுதந்திரம், அவன் இருந்தால் சுதந்திரமே இல்லை”
காந்தியும் நேருவும் அம்மாவீரனை ஒப்படைக்க சம்மதித்தனர், குறிப்பாக காந்தி ஒப்புகொண்டார்
அந்த ஒப்புதல் பேரிலே தேசம் பிரிந்தது, அந்த ஒப்புதல் பேரிலே அம்பேத்கர் பெரும் பிம்பமாக்கபட்டார், அந்த ஒப்புதல் பேரிலே ஈரோட்டு ராம்சாமி உலா வந்தார்
ஈரோட்டு ராம்சாமியினை சுதந்திர இந்தியாவில் எளிதில் முடக்க்கியிருக்கலாம், திமுகவினை தொடக்கத்திலே முடிட்திருக்கலாம் ஆனால் காந்தியின் சம்பந்தியும் நேருவின் கூட்டாளியுமான ராஜாஜி காத்த அமைதியே தமிழக பிற்கால சீரழிவுக்கு காரணம்,
எல்லாம் அந்த பிரிட்டிஷ்காரன் ஏற்பாடு, ராஜாஜியும் காந்தி சாயல் கொண்டவர் பெரும் போராட்ட மனமெல்லாம் இல்லை, இருந்திருந்தால் பிரிட்டன் கொடுத்த கவர்னர் ஜெனரல் பதவியினை ஏன் ஏற்கபோகின்றார்?
நேதாஜி இங்கே வந்திருந்து நாடு அவரிடம் ஒப்படைக்கபட்டிருந்தால் தேசம் பிரிந்திருக்காது, பஞ்சாபும் வங்கமும் நாசமாயிருக்காது, காஷ்மீர் சிக்கல் இருந்திருக்காது, தமிழகம் இப்படி நாசமாயிருக்காது
தான் இந்தியாவுக்கு சென்றாலும் சாவு நிச்சயம், ஜப்பானும் அமெரிக்காவிடம் தோற்றுவிட்டது என மனம் ஒடிந்த நேதாஜி தைவானில் தற்கொலை செய்தார்"
இந்த இடத்தில் நேதாஜியின் விசுவாசிகள் அழுவார்கள், அரைமணி நேரம் அழுவார்கள், பின் அப்படியே அமர்ந்திருப்பார்கள்
நீண்ட பெருமூச்சுக்கு பின் தொடர்வார்கள்
“இந்து முஸ்லீம் பிரிவினைக்கா காந்தி கொல்லபட்டார் என இத்தலைமுறை நினைக்கின்றது, அல்ல, ஒருகாலும் அது அல்ல.
அதுவும் ஒரு காரணம் அன்றி அது மட்டும் காரணம் அல்ல. காந்தி மதவெறியில் கொல்லபடவில்லை
நேதாஜிக்க்கு காந்தி செய்த துரோகம் வரலாற்றில் மறைக்கபட்டது , இந்நாட்டுக்கு காந்தி செய்த துரோகமும் பிரிவினையில் கலவரத்தில் மறைக்கபட்டது
பாகிஸ்தானுக்கு காந்தி சம்மதித்தது கூட சிக்கல் இல்லை, பகைவர்கள் ஒழிந்தார்கள் என விட்டுவிடலாம் ஆனால் நேதாஜியினை ஒப்படைக்க சம்மதித்தார் அல்லவா? அதுதான் அவரை எல்லோரும் கொல்ல தேடிய முதல் காரணம்
பலர் முயற்சித்தார்கள், கோட்சே சுட்டான், கோட்சே முயற்சியும் பிழைத்திருந்தால் வேறு யாராவது அன்று இரவே சுட்டு கொன்றிருப்பார்கள்
கோட்சே எங்களுக்கு தவறானவன் அல்ல, நேதாஜியின் உண்மை சீடர்களுக்கு அவன் செய்தது சரியான செயலே, அவன் குறி தவறியிருந்தாலும் காந்தி உயிரோடு இருந்திருக்கமாட்டார்
ஒருவகையில் எங்கள் வலியும் கோட்சேவின் வலியும் ஒன்றே.
சிலருக்கு இது புரியாது, எல்லையில் அழிந்தவருக்கும் நேதாஜியினை பறிகொடுத்தவருக்கும் அந்த வலி புரியும்
உங்களுக்கு அவர் தேசபிதாவாக இருக்கட்டும், எங்களுக்கு எக்காலமும் துரோகி”
ஆம் , நேதாஜியின் சிந்தனையும் வழியும் புத்துயிர் பெறாமல் இத்தேசம் வல்லரசாய் மாற வாய்ப்பே இல்லை
நேதாஜி எக்காலமும் இந்தியாவின் விளக்கு, ஒரு காலம் இத்தேசம் அவரை சரியாய் புரிந்துகொள்ளும் , அன்று பாராளுமன்றம் முதல் இந்திய ரூபாய் வரை அவர் சிரிப்பார்.
அந்தமானில் வைக்க வேண்டியது கருணாநிதி சிலை அல்ல, கருணாநிதி என்ன துப்பாக்கி பிடித்தாரா? மாஸ்கோ கண்டாரா? டோக்கியோவில் இந்திய விடுதலை பேசினாரா? உலக நாடுகளிடம்உதவி கேட்டாரா?
அட துப்பாக்கி தெரியுமா? களம் தெரியுமா?
பேப்பரும் பேனாவும் அது நிறைய பொய்யும் தவிர அவருக்கு என்ன தெரியும்? நாட்டுக்கு என்ன செய்தார் அவர்?
அந்தமானுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?
அந்தமானில் இருக்க வேண்டியது நேதாஜியின் சிலை, அதை முறையாக செய்தவர் மோடி
ஆம் அந்தமானில் நேதாஜிக்கு சிலை அமைத்து வணங்கிய முதல் இந்திய பிரதமர் மோடி, அந்தமானின் சில தீவுகளுக்கு நேதாஜியின் பெயரை இட்டதும் மோடி
அந்தமான் சாதாரண இடம் அல்ல, தேசத்தின் கிழக்காசிய பாதுகாப்பே அங்குதான் இருக்கின்றது, இந்தோனேஷியாவினை ஒட்டி சீனாவுக்கு சவால்விடும் இடத்தில் இருக்கின்றது, மகா முக்கிய ராணுவ கேந்திரம் அது
அந்த இந்திய தீவில் சிலையாய் நிற்கின்றார் நம் நேதாஜி
ஆம் ஒரு காலத்தில் கிழக்கில் இருந்து விடுதலைக்காக படையெடுத்து வந்த நேதாஜி இன்றும் அதே அந்தமானில் தேசத்துக்காய் இந்திய ராணுவ வடிவில் நிற்கின்றார்
முதல் இந்திய சொந்த ராணுவத்தை அமைத்த அவர் அந்த ராணுவ தீவில் ராணுவ வீரர் வடிவாய் நிற்கின்றார்
மோடி மேல் ஆயிரம் சர்ச்சைகளை சொல்லுங்கள், ஆனால் நாட்டுபற்றாளனே நாட்டு நலன் மிக்க தலைவனை அறிவான்
மோடி அப்படி அறிந்தார் வணங்கினார், அந்தமானில் நேதாஜிக்குரிய இடத்தை கொடுத்தார், மோடியும் இல்லையெனில் அதை இங்கு யார் செய்வார்?
மோடியினை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால் இம்மாதிரியான நற்காரியங்களுக்கே, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை அவர்தான் செய்தார்
இன்று நேதாஜிக்கு நினைவு நாள்
முதல் இந்தியரின் ராணுவத்தை அமைத்த அந்த வீரனுக்கு அஞ்சலி
ஒன்றுபட்ட இந்தியாவினை காக்க நினைத்த மாவீரனுக்கு அஞ்சலி
தலைவர்கள் என கருதபட்ட துரோகிகளினால் சாய்க்கபட்ட வீரனுக்கு அஞ்சலி
காடெல்லாம் ஓடி ஓடி இயக்கம் வளர்த்து தன் சொந்தநாட்டு தலைவர்களாலே விரட்டபட்ட மாவீரனுக்கு அஞ்சலி
கடைசி நேரத்திலும் தான் நினைத்திருந்தால் இந்தியாவுக்குள் வந்து உள்நாட்டு போரை ஆரம்பிக்க வாய்பிருந்தும் நாட்டு அமைதிக்காய் ஒதுங்கி தன்னையே பலிகொடுத்த தியாகிக்கு அஞ்சலி
இன்றும் அந்தமானில் காவல் தெய்வமாய் நிற்கும் எம் தேசத்தின் பரமபிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி
நன்றி இணையம்