✽
உணவு உட்கொள்ள வலதுகரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலதுகை முந்துகிறது. பிறருக்கு உதவ வலதுகரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலதுகரத்தால் ஏற்றுக் கொள்கிறோம். அறத்தை செயல்படுத்தும் வேளையில், மனைவியை வலது பக்கம் இருத்துகிறோம். வில்லில் தொடுத்த அம்பை வலதுகரம் இயக்குகிறது. கடவுளுக்கு வலதுகரத்தால் பணிவிடை செய்கிறோம். வரவேற்பிலும் விடையளிப்பதிலும் வலதுகரம் செயல்படுகிறது. இப்படி, செயல்பாடுகளில் இயல்பாகவே வலதுகரம் முந்திக்கொள்ளும்.
✽ இயற்கைக்கு மாறாக இடதுகையைப் பயன்படுத்துவர்களும் உண்டு. அது விதிவிலக்கு. மூளையின் உத்தரவை இடதுகை முந்திக்கொண்டு செயல்படுத்த, பிறகு அதுவே பழக்கமாகி நிலைத்துவிடும். இப்படிதான் இடதுகை, வலதுகையின் இடத்தைப் பிடித்திருக்கிறது எனலாம். இடதுகையைப் பயன்படுத்துவதை அநாகரிகமாகக் கருதுபவர்களும் உண்டு. சுத்தம் செய்ய இடதுகை பயன்படுவதால், மற்ற காரியங்களில் அதற்கு முன்னுரிமை இல்லை என்று எண்ணுபவர்களும் உண்டு.
✽ கால்களது செயல்பாடு, கைகளைப் போல் அல்ல. வலதுகாலும் இடதுகாலும் இணைந்துதான் நடக்கவேண்டும். ஒன்றை பூமியில் அழுத்தி, மற்றதை முன்னே வைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. 'நல்ல காரியங்களில் முதல் அடி எடுத்து வைப்பது வலதுகாலாக இருக்கவேண்டும்!" என்று சாஸ்திரம் கூறுகிறது.
✽ பல முன்னேற்றங்களுக்கு வலதுகையைப் பயன்படுத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், 'முதலில் வலதுகாலை எடுத்து வைப்பது முன்னேற்றத்துக்கு உதவும்!" என்று நம் மனம் நம்பிவிடுகிறது.
✽ உடலின் இரு கூறுகளில் இடது கூறைவிட, வலது கூறு பலம் பொருந்தியது என்று வேதம் கூறும் பக்கவாதம் தாக்கும்போது உடலின் வலதுபக்கம் வீழ்ந்தால், அது நம்பிக்கையை இழக்கச் செய்யும். பலமான பகுதி வீழ்ந்ததாக ஆயுர்வேதம் கூறும். வலது கூறுகளுக்கு வேதம் பெருமை அளிக்கிறது. எனவே, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில், முதலில் நுழைய வேண்டியது காலாக இருப்பதால், 'வலதுகாலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்" என்று கூறுகிறது தர்மசாஸ்திரம்.
நன்றி இறைவன்!