இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips


Image result for இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்Image result for இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்
எல்லோரிடமும் தூய்மையான
எண்ணத்துடன் பழகுவேன் என்ற
பால் அபிஷேகமும்..
யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று
இளநீர் அபிஷேகமும்..
எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்..
எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் பரப்புவேன் என்று
பன்னீர் அபிஷேகமும்..
இந்த உடல் நிலையற்றது என்று எண்ணி பெருந்தன்மையுடன் இருப்பேன் என்று
திருநீறு அபிஷேகமும்..
எப்பொழுதும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுவேன் என்று
மஞ்சள் அபிஷேகமும்..
வாழ்க்கை முழுவதும் இறைவா உன் புகழ் பாடுவேன் என்று சந்தன அபிஷேகமும்..
சென்ற இடமெல்லாம் உன் சேவை செய்வேன் என்ற ஜவ்வாது அபிஷேகமும்..
அனைவரிடமும் புனிதமாக இணைந்து சென்று இந்த பிறவி பயணத்தை முடிப்பேன் என்று
நீர் அபிஷேகமும் செய்யுங்கள்..
இதுவே இறைவனுக்கு பிடித்த உண்மையான அபிஷேகம்..மற்றவை எல்லாமே நம்முடைய
மனதிருப்திக்காகசெய்யப்படும்அபிஷேகங்கள்


நன்றி இணையம்

ஒற்றுமையாக இருந்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:01 AM | Best Blogger Tips

Image result for தேனீக்களை

*நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...*

*அதே கல்லைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...*

*தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?*


*அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?*

*தேனீக்கள் ஏன், நம்மை ஓட வைத்தது?*

*காரணம் நாய் தனியாகவும், தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...*

*நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக இருந்தாலும்...*

*ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!!*

*சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!*
✍️ 🙏 🌹



நன்றி இணையம்

பாரத ரத்னா #அடல்_பிஹாரி_வாஜ்பாய் அவர்களுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 8:41 PM | Best Blogger Tips


முன்னாள் பாரதப் பிரதமர் திரு.அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி


 நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்...


இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை கண்டோம்..


சர்வசிக்ச அபியான் மூலம் நாங்கள் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.


பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்  வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு நாங்கள்  கட்டினோம்..


வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு  வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த வாகனங்கள் வாங்கினோம்..


விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..


உங்கள் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..


உங்கள் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான

தேசிய
நெடுஞ்சாலைகள் கிடைத்தது .
அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல்  மற்றும்
NH 45B ஆகியவை  கன்டோம்.

உங்கள் ஆட்சியில்தான் தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைய கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்


உங்கள் ஆட்சியில்தான் உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் ...

petrol 36/- rs per litre rate.

உங்கள் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்...

வனிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

உங்கள் ஆட்சியில்தான் 250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி  பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தீர்கள்,..


அய்யா உங்கள் ஆட்சியில் நீங்கள்தான் மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கினீர்கள்,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் பணிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினீர்கள்..


ஐயா உங்கள் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையை போக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.


அய்யா உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை

9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..

கடல் பாலங்கள் கொண்ட  கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..


அய்யா உங்கள் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...


நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகள் சொல்லி கொண்டேபோகலாம்.


.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ..

உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது ..
இருக்கும் அனைத்து விருதுகள் கொடுத்தால் கூட எங்கள்ஆசை அடங்காது...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.









🙏🏻🌸


#இயற்க்கை அன்னையை நோக்கி,😍


 எங்கள் #பீஷ்மரை பார்த்து கொள்ளுங்கள் #பாரத_தாயே....🙏


#உழைத்தது_போதும்

#இளமாறும்_தலைவா 🙏



நிர்வாகத்தின் நோக்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips
Image result for நிர்வாகத்தின் நோக்கம்Image result for நிர்வாகத்தின் நோக்கம்

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது

எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லைஎன்றான்.
கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லைஎன்றது

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதேஎன்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்என்றான்.

எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.
வியாபாரி அதற்குஅவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.

உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்என்றான்வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.

இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்என்றது.
அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி : நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து 

எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை 

வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான 

வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் 

விழிப்புடன் இருக்க வேண்டும் 

படித்ததில் மனதே கலங்கிய பதிவு

நன்றி இணையம்