FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips

FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க

  மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன . 

இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது . 
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க SCHWEPPES PROFILE APPS என்ற FACE BOOK தளத்திற்கான அப்பிளிகேசன் உதவுகிறது . 

இந்த APPS மூலம் படத்தின் அளவினை மாற்றுதல் ,படத்தினை தேவையான பகுதியினை வெட்டி எடுத்து பயன்படுத்துதல்,படத்தை நகர்த்துதல் ,பின்னணி வர்ணங்களை சேர்த்தல் மற்றும் SPEECH BUBBLE மூலம் எழுத்துக்களை சேர்க்க முடியும் . மேலும் படத்தின் ஒளி அளவினை மாற்றுதல் போன்ற பலவற்றை இந்த செயலி மூலம் செய்து கொள்ள முடியும். 

அத்துடன் எளிதாக படங்களை உங்கள் கணனியில் இருந்தும், FACE BOOK தளத்தில் இருந்தும் UPLOAD செய்து கொள்ள முடியும் . 

இந்த செயலியினை செயற்படுத்த இந்த லிங்க் சென்று GO TO APP என்பதை கிளிக் உங்கள் FACE BOOK கணக்கில் ALLOW செய்து பயன்படுத்தி உங்கள் முகப்பு பக்கத்தை வித்தியாசமாக வடிவைத்து கொள்ளுங்கள் . 

நண்பர்களே பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் வாக்களியுங்கள் . 

Share
 
2likes

Share

4 comments:

♔ம.தி.சுதா♔ சொன்னது…
நன்றி சகோ முயற்சிக்கிறேன்...
wesmob சொன்னது…
நன்றி புதிய பேஸ் புக் அப்ளிகேஷன் பயன்பாடுகளை பகிர்ந்தமைக்கு
wesmob சொன்னது…
நன்றி புதிய பேஸ் புக் அப்ளிகேஷன் பயன்பாடுகளை பகிர்ந்தமைக்கு
ரெவெரி சொன்னது…
நானும் செய்து பார்க்கிறேன் நண்பரே...

கருத்துரையிடுக

FACE BOOK CHAT இல் SYMBOL களை பயன்படுத்துவதற்கான குறியீடுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips

FACE BOOK தளம் இப்போது எல்லோருடைய வாழ்விலும் ஓர் அங்கமாக மாறியுள்ளது . இத்தகைய FACE BOOK தளத்தின் CHAT OR மெசேஜ் ஊடான தகவல்  பரிமாற்றத்தின் போது சில அடையாள சித்திரங்களை (சிம்போல்) பயன்படுத்துவதற்கான குறியீடு எழுத்துக்கள்  கீழே உள்ளன

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTxr3u1dyq4XX9slubW0Zwj7Ju1o7TREhOoWKZCp8X9t2bNTbG7-5aUsP-Ymbj-sX_n_jAxYMatglGhVaZfJ_-j_pkZXFTD-zz9ZDveT6TlG2m4CK5qkawzWothR85Wc_4pwuAXZowe54/s1600/FACEBOOK-SYMBOLS-AND-SMILEYS.gif

இந்த குறியீடு எழுத்துக்களை  COPY  செய்து CHAT OR மெசேஜ் பெட்டியில் பேஸ்ட்  செய்து ENTER செய்தால் சிம்போல் தோன்றும் அத்துடன் நீங்கள் அனுப்பும் நபருக்கும் சென்றடையும்

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_nguiabRzTCiBdH34toxYGzloQOq9rNRh5F7nA2wQyFeay_sO4kG5dwfnhpEvFQgosa5V-9JlgzdruWbteMgEMCzXilPPuUV-2EGYMRzHx3JSeYlEcQeZN9UFfM5m6c3i7EjERQG8HJY/s1600/Ashok+Selvam+-+Messages+-+Google+Chrome_2012-03-20_15-19-32.png

இத்தகைய குறியீடுகளை உங்கள் கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியாது . கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும்

சிம்போல் களுக்கான குறியீட்டு எழுத்துக்கள் 

[[f9.laugh]]

[[f9.sad]]

[[f9.angry]] 

[[f9.sleepy]] 

[[f9.shock]] 

[[f9.kiss]] 

[[f9.inlove]] 

[[f9.pizza]] 

[[f9.coffee]] 

[[f9.rain]] 

[[f9.bomb]] 

[[f9.sun]] 

[[f9.heart]] 

[[f9.heartbreak]] 

[[f9.doctor]] 

[[f9.ghost]] 

[[f9.brb]] 

[[f9.gift]] 

[[f9.adore]] 

[[f9.angel]] 

[[f9.baloons]] 

[[f9.bowl]]
  
[[f9.cake]] 

[[f9.callme]] 

[[f9.clap]] 

[[f9.confused]] 

[[f9.curllip]] 

[[f9.devilface]]
  
[[f9.lying]] 

[[f9.rofl]] 

[[f9.billiard]] 

[[f9.cakepiece]] 

[[f9.rosedown]] 

[[f9.shutmouth]]
  
[[f9.shy]] 

[[f9.silly]] 

[[f9.tongue1]] 

[[f9.fastfood]] 

[[f9.ring]] 

[[f9.plate]] 

[[f9.candle]] 

[[f9.party]]

ஓசோன் படலம் என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் இன்று முன்னேற்றம் என்ற போர்வையில் அறிவு வளர்ச்சி என்ற ஏக்கத்தில் சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு இருக்கிறான். சாகாவரம் பெற்ற பாலித்தீன். பூமியை மலடாக்குகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரும், புகையும் பூமியையும் வளிமண்டலத்தையும் மாசு அடைய செய்கிறது. காடுகளின் அழிவால் சுற்றுச் சூழல் வெப்பம் அடைந்து பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி
கள் உருகி கடல் மட்டம் உயரு கிறது. இவ்வாறு கடல்மட்டம் உயருவதால் கடற் கரை ஓரங்களில் வளரும் அரிய தாவர இனங் களும் நிலப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டு கொண்டு இருக்கும் இச்சுற்று சூழல் பாதிப்பினால் மனித இனத்திற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடு இணைந்த அனைத்து அமைப்புகளும் அழிவை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

ஓசோன் படலத்தை பற்றி...

ஓசோன் படலத்தைப் பற்றியும், அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழி முறைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். இதனை வேதி குறியீட்டில் 03 என்பர். ஓசோன் வாயு ஆனது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20யிலிருந்து 25 கி. மீட்டர் வரையிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள்ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்ன வென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

சேதம் ஏற்படுவது எப்படி?

ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?

உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, முரைப் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோரா கார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் குளோரோ புளோரோ கார்பன் வாயு நிலைத்த நிலையில் நூறு ஆண்டுகள் வரையில் இருக்கும். ஆனால், சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது இது பிரிகிறது. இந்த வேதியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் அழிக்கப்படு கிறது.

தீமைகள்

ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீமைகள்„

உலகம் முழுவதும் வெப்பம்கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம்கூடும். அதிக வெப்பத்தினால் வறட்சிக்காலம் ஆண்டுதோறும் நீடிக்கும். வெப்பம் கூடுதல் ஆக ஆக பனிமலைகளிலுள்ள பனி உருகி திடீர் வெள்ளம் ஏற்படும். கடல் மட்டம் கூடும். இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியின் அளவைக் குறைப்பதோடு கடலோர பகுதிகள் மூழ்கடிக்கப் படும். பருவகாலங்கள் மாறுபட்டு உயிரினங் களும் ஆபத்தை உண்டுபண்ணும். புறா ஊதா கதிரானது ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வந்தால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் உண்டாக்கின்றன.

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலா னோர் தோல் புற்று நோயினால் அவதிப்படு கின்றனர். ஓசோன் படலம் 0Š ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும். மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும்.

புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.

ஓசோனை பாதுகாக்க வழிமுறைகள்

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.

1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக் கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.

எனவே ஒசோன் படலம் பாதிக்கப்படுவதால் எற்படும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அகில உலக அளவில் ஒட்டு மொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளோரோ புளோரோ கார் பனை வெளியிடும் சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

எப்போதும் அழகாக இருக்கனுமா??டென்ஷன விடுங்க….

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips
மனிதர்களில் இரண்டு ரகம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதுதான். ஆனால் இரண்டாவது ரகமான டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அழகு யாருக்கு

இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள் `ப்ரெஷ்” ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு

அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு முதுமை நம்மை அண்டாது விரட்டி விடுவோம்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும் அதை மனதில் எடுத்துக்கொள்லாமல் சந்தோஷமாக இருங்கள். ஆதலால் உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகும் இளமையும் உங்களை நாடி வரும்.

சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய 7 தவறுகள் 7 Dangerous acts after a meal

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips
1. புகைக்காதீர்கள்
Don’t smoke
Experiments from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher)

2. சாப்பிட்ட உடன் பழம் சாப்பிடாதீர்கள்
Don’t eat fruits immediately
Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Thre fore take fruits 1 -2 hours after meal or 1 hour before meal.

3. தேநீர் குடிக்காதீர்கள்
Don’t drink tea
Because tea leaves contain a high content of acid. This substance will cause the protein content in the food we consume to be hundred thus difficult to digest.

4. பெல்ட்டைத் தளர்தாதீர்கள்
Don’t loosen your belt
Loosening the belt after meal will easily cause the intestine to be twisted and blocked.

5. சாப்பிட்டதும் குளிக்காதீர்கள்
Don’t bathe
Bathing after meal will cause the increase of blood flow to the hands, legs and body thus the amount of blood around the stomach will therefore decrease, this will weaken the digestive system in our stomach.

6. நடைபயிற்சி வேண்டாம்
Don’t walk about
People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

7. சாப்பிட்ட உடன் தூக்கம் வேண்டாம்
Don’t sleep immediately
The food we intake will not be to digest properly. Thus will lead to gastric and infection in our intestine.

Please forward it to your friends let them be aware….
Be Healthy....
சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்
7 Dangerous acts after a meal

தொப்பையே குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:40 PM | Best Blogger Tips

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒர...
ுசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்...

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

இடுப்பை அளவிடுங்கள்... அபாயத்தைக் கணக்கிடுங்கள்...

நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்... உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது' என்றார்.

உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்...

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே... அதே பாணியில் பருமனையும் கரைப்போம்

குழந்தைக்கு பல்வலியா என்ன முதலுதவி செய்யலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
பல்வலிக்கு முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும் ’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது. பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக மாறுகிறது.

பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான் பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும் ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல் சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம் பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து, கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும்.

அறிகுறிகள்:

சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின் மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.

join nagapattinamnews@gmail.com

என்ன முதலுதவி செய்யலாம்?

வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின் வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம். வலிநிவாரணி மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். வேப்பமுத்துகளை பொடிசெய்து பல்லினுள் வைக்கலாம்.

மருத்துவரின் ஆலோசனைப் படி, ’டிசென்சடைசிங்’ மருந்து கலந்த களிம்பைச் சொத்தைப் பல்லின் மீது தடவலாம்.

என்ன சிகிச்சை?

பற்சொத்தை ஆரம்பநிலையில் இருந்தால், சில வேதிப்பொருள்களால் சொத்தையை அடைத்துவிட முடியும்.

சொத்தை வேர்ப்பகுதி வரை சென்றிருந்தால், ’வேர்ச்சீரமைப்பு’ சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.

பற்சொத்தை மிக மோசமாக இருந்தால், அந்தப் பல்லை அகற்றியே ஆக வேண்டும். மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம்.

பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்...

செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

செய்ய கூடாதவை...

இணைந்திடுங்கள் nagapattinamnews@gmail.com

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்
பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு:-

சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips
அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. என
வே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.

இயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.

முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக்கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.

நிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.