பக்தியின் நிலைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips

ஆதிசங்கர பகவத்பாதாள் தமது சிவானந்தலஹரியில், பக்தியின் வெவ்வேறு நிலைகளைப் பல உதாரணங்களோடு மிக அழகாக விவரித்துள்ளார்.

முதலில், பக்தன் பிரயத்தனப்பட்டுத் தன் மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அதை அவருடைய பாதங்களில் வைக்கிறான். அங்கோல மரத்தின் விதையானது, தன் தாய் மரத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறுகிறார் சங்கரர்.

இறைவனிடத்தில் பக்தன் தன் மனதைச் செலுத்தியதும், அவர் அவனுக்குப் பலவிதங்களிலும் அனுகூலமாக இருந்து அருள்கிறார். பக்தன் தம்மைவிட்டுப் பிரிந்து செல்லாமலிருப்பதற்காக, இறைவன் அவனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொள்கிறார் என்று பக்தியின் இரண்டாவது நிலை விவரிக்கப்பட்டுள்ளது. காந்தத்தை நோக்கி ஊசி ஈர்க்கப்படுவதைத் தான் இந்நிலைக்கு உவமையாகக் கூறுகிறார் பகவத்பாதாள்.

பக்தனின் உள்ளம் இறைவனிடத்தில் பரிபூரணமாக நிலைத்துவிட்டதேயானால், அப்பொழுது இறைவன், தமது பங்கிற்கு, பக்தனிடத்தில் எல்லையில்லா அன்பைப் பொழிகிறார் என்று பக்தியின் மூன்றாவது நிலையை சுலோகம் விவரிக்கிறது.

ஒரு பதிவிரதை கணவனுக்கு அன்புடன் சேவை புரியும்போது, எப்படி பதிலுக்குக் கணவனும் அவளிடத்தில் தனது அன்பைக் காட்டுவானோ, அப்படியுள்ளதாம் இந்த மூன்றாவது நிலை.
பக்தனின் பிரேமை வளர வளர, அவன் இறைவனுக்கு ஓர் ஆபரணமாகவே ஆகிவிடுகிறான். உண்மையில், பிரஹ்லாதன் என்று ஒரு பக்தன் இல்லாதிருந்தால், இறைவன் நரசிம்மராக அவதாரமெடுத்து உலகை இரக்ஷித்திருக்க மாட்டார். ஆகையால், ஒரு விதத்தில் பார்த்தால், பக்தனால் இறைவனின் புகழ் மேலும் உயர்கிறது என்றே கூறலாம். இதுவே பக்தியின் நான்காவது நிலையாகும். ஒரு மரத்தைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஒரு கொடி, இந்நிலைக்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

நான்காவது நிலையைக் கடந்ததும், பக்தன் இறைவனோடு முழுமையாக ஐக்கியமாகி விடுகிறான். இதுதான் பக்தியின் உன்னத நிலையாகும். கடலில் சென்று கலக்கும் ஒரு நதியைப் போல், பக்தன் இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகிறான் என்று பக்தியின் கடைசி நிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நதி கடலைச் சென்றடைந்து விட்டால், பிறகு அதனைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காண்பது என்பது இயலாது. அதேபோல், பக்தனும் இறைவனிடத்திலிருந்து பிரிக்க முடியாதவனாகி விடுகிறான்.

லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

(தமிழில் - பூ.கொ.சரவணன்)

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips
கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப... அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips

பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும். பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர். பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

பொடுகை விரட்டும் வேப்பம்பூ

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

வயிற்றுப்புண் நீங்க…

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 PM | Best Blogger Tips

நமது உணவு செரிக்கின்ற உறுப்புகளிலேயே பெரியது இரைப்பை. இந்த இரைப்பை, குடல் இவற்றில் பல்வேறு காரணங்களால் புண்கள் ஏற்படும். இரைப்பையில் ஏற்பட்ட புண் இரைப்பைப்புண் எனவும், குடல் பகுதியில் ஏற்பட்ட புண், குடல் புண் என வும் பெயர் பெறும். இந்தப் புண்கள் ஏன் ஏற்படுகின்றன?

1. எளிதில் சீரணமாகாத உணவுப் பொருட் களை அளவுக்கு அதிகமாக உண்பதால்.

2. குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள் ளாமல் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால்.

3. அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள் வது, பட்டினி இருப்பது முதலியவற்றால்.

4. மிகச் சூடான பானங்களைப் பருகுவதால் சூடான உணவுப் பொருட்களை உண்பதால்… காரசாரமான மசாலா கலந்த உணவுகளை உண்பதால்…

5. சத்தான உணவு உண்ணாதவர்கள், புரதச் சத்து, கொழுப்புச்சத்து காய்கறிகள், முதலியவற்றை அதிக அள வில் உணவில் சேர்க்காதவர்களுக்கும் குடலில் கிருமி உடையவர்களுக்கும் வயிற்றில் புண் ஏற்படலாம்.

6. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால்…

7. சில வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக மருத்துவரின் ஆலோசனையின்றி, உண்பதால்.

8. காயங்கள், தொற்றுக்கள் முதலியவை களினால்…

9. கல், மண், உமி, தூசு, மற்ற கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பதால்.

கிராமங்களிலே ‘‘ஒரு சாண் வயிற்றுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாய்’’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். ஆனால், தற்போது கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் ஒரு சாண் வயிற்றைப் பற்றி கவலைப்படவும் நேரம் இருப்பதில்லை. இதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்குத்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்?

மற்றொன்று, யாரும் நேரத்தில் உணவு உண்ப தில்லை, நேரங்கெட்ட நேரத்தில் உண்கிறார்கள். இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இரவுக்கடைகளில் உணவு உண்பவர்களை நாம் பார்க்கிறோம். நாம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் வயிற்றுக்கு? ஓயாத தொல்லைதான். ஆகவே அதற்கு ஓயாத தொல்லை கொடுக்கும்போது வயிறும் நமக்கு ஓயாத தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது புண்மூலம்!

மற்றும் சிலர் வயிற்றைக் குப்பைக் கூடை என நினைத்து ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்தோபாவம் அந்த வயிறு!! இவைகளைத் தவிர கந்தக அமிலம் முதலிய அமில வகைகள், சுண்ணாம்பு போன்ற காரவகைகள் வயிற்றை ஒட்டிய பகுதிகளில் கட்டிகள் ஏற்படுதல், இவற்றால் தீவிரமான திடீர் புண்கள் தோன்றும்.

இரைப்பைப்புண் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி உண்டாகும். ஆகவே இவர்கள் வலியிலிருந்து விடுபட தாங்களே முயற்சித்து வாந்தி எடுப்பார்கள். ஆகவே சாப்பிடாமல் இருப்பதால்… சாப்பிட்ட உணவை வாந்தி எடுக்க வைப்பதால் இவர்களுக்கு உடலில் சத்து சேராமல் உடல் மெலிந்து போவார்கள். இதன் காரணமாக உடலில் ரத்த சோகையும் பலகீனமும் ஏற்பட்டு தொடர்ந்து பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

சிறுகுடலில் புண் இருந்தால் மேல் வயிற்றில் வலி இருக்கும். இரைப்பையில் உணவில்லாமல் காலியாக இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். சாப்பிட்டவுடன் வலி குறைந்துவிடும். மேலும், குடல் புண் உள்ளவர்களுக்கு குமட்டல், வாந்தி, புளிப்பு, நீரூறல், நெஞ்சு எரிச்சல் ஆகிய அறி குறி குணங்கள் இருக்கும்.

மருத்துவ குறிப்புகள் 100/100..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து....!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்....!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்....

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி...!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு..!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்...!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

(thanks :இன்று ஒரு தகவல்(பக்கம்)) 

பயமுறுத்துகிறதா பருமன்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:10 PM | Best Blogger Tips

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol)
ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
பயமுறுத்துகிறதா பருமன்?

முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.
முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். 

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக ..!!!

சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

சைனஸ் பிரச்சினைக்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் தான் காரணம். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது. இதற்கு அடுத்தபடியாக நமது தவறான உணவுப் பழக்கம், உணவு மூலமாகவும் வைரஸ் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்கி விடுகிறது.

ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன் பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது மூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத்தான் சைனஸ் திகழ்கிறது. ஜலதோஷத்தால் உருவாகும் சளி சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது.

அறிகுறிகள்.....

சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது. மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன. முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே.

அற்புத மூலிகை அறுகம்புல்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி பட்டியலே போடலாம். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியை போக்கும். வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும். பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும்.

டான்சிலைத் தடுக்கும். விஷத்தை முறிக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும். தேள் கடிக்கு உதவும். மஞ்சக் காமாலையை நீக்கும். வீக்கத்தைக் குறைக்கும். வாயுவை அகற்றும். பசியை உண்டாக்கும். விரல் சுற்றிக்கு உதவும். யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க

ஓட்டல் சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது. அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப அணுகுண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற சத்தில் உள்ளது.

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. தாங்க முடியா களைப்பா, விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள்.

உடனடி தென்பு ஏற்படும். உண்ணாவிரதம் முறிப்போர், மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரணப் பிரச்னைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.

கடுகு சிறுசு பலனோ பெரிசு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips

சமையல் அறையில் முன்னணி இடத்தை பெற்ற பொருளில் முக்கியமானது கடுகு. இதில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

அதுமட்டுமல்ல, பசியை தூண்டி சிக்கலில்லா செரிமானத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

தேமல் மறைய உதவும் கராம்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும். திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:29 PM | Best Blogger Tips

இக்காலத்தில் 45 வயது முடிந்தவர்களைகூட அங்கிள், ஆன்ட்டி என கூப்பிட்டால் அது அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திவிடுகிறது. வயதை ஒரு காரணாமாக காட்டி ஒருவரின் முதுமையை நாசூக்காக வெளிக்கொணரும் சக்தி ‘அங்கிள், ஆன்ட்டி’ என்னும் சொற்களுக்கு உண்டு. இத்தகைய ‘அங்கிள், ஆன்ட்டி’ என்னும் சொற்கள் நம்மை சுருக்கென்று தாக்கிவிடுவதற்கு முன்பாகவே சிறிது சுதாரித்து கொள்வது நல்லது. முதலில் ‘முதுமை’ மற்றும் ‘முதுமையான தோற்றம்’ என்னும் இரு வார்த்தைகளில் இருக்கும் வேற்றுமையை உணரவேண்டும். முதுமை என்பது வயது அதிகரிப்பதால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை குறிக்கும். முதுமையான தோற்றம் என்பது நமது உடல் மற்றும் மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது ஏற்படுவது. மனதிற்கும் உடலுக்கும் சரியான ஓய்வு, முறையான பராமரிப்பு ஆகியவை இல்லையென்றால் உங்கள் வயது 20 ஆக இருந்தாலும் தோற்றம் 40 வயதுபோல் இருக்கும். இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், முதுமையான தோற்றத்தை சில ஆண்டுகள் வரை தள்ளிப்போட குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான டிப்ஸை பின்பற்றுங்கள்.

*நிறைய தண்ணீர் குடியுங்கள்.

*சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும்.

*சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

*புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

*வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

*நன்றாக தூங்குங்கள்.

*சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

*உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை கை கால்களில் தினமும் தடவிக்கொள்ளுங்கள்.

*முடிந்தவரை அதிக மேக் அப் போடுவதை தவிருங்கள்.

*மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

*ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுப்படுங்கள்.

*இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் விடியலுக்கு முன் எழுங்கள்.

*தியானம் செய்யுங்கள்.

*குற்ற உணர்வுகளை தூக்கி எறியுங்கள்.

*மனம்விட்டு சிரியுங்கள்

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:57 PM | Best Blogger Tips
டெல்லி: கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி? 1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும். 3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். 6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். 7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை. 12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/05/business-how-get-an-aadhaar-card-169184.html

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:57 PM | Best Blogger Tips
மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:-

மனித மூளையும் அதன் செயல்திறனும்

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips

ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள்..!

அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு வேண்டும். இல்லையெனில் உடலில் எந்த ஒரு செயல்பாடும் சரியாக நடைபெறாது. எனவே அத்தகைய சத்துக்கள் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உணவில் சேர்க்க வேண்டும். ஜிங்க் சத்தில் அதிகமான நன்மைகள் உள்ளன. அதிலும் ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

அதுமட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக நடைபெற வைப்பதோடு, பொடுகுத் தொல்லை மற்றும் சரும நோய்களை தடுக்கும். விந்தணுவை அதிகரிக்க இந்த ஜிங்க் சத்துக்கள் ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை ஆண்களின் டெஸ்ட்ரோஜென்னின் அளவை சரியாக வைக்க உதவும். சொல்லப்போனால், இந்த சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவு சத்துக்களை சைவ உணவுகளில் பெற முடியாது. ஆனால் ஒரு சில சைவ உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால், நிச்சயம் ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம்.

முட்டை: மஞ்சள் கரு முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. இதனால் பலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் அதிகமான அளவில் ஜிங்க் சத்து இருப்பது.

எள்: நிறைய விதைகளில் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. அத்தகைய விதைகளில் ஒன்றான எள்ளிலும் அதிகமாக ஜிங்க் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன.

கடல் சிப்பி: ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளில் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல சத்துக்களையும் உடலுக்கு தருகிறது.

வேர்க்கடலை: வேர்க்கடலையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. மேலும் ஜிங்க் சத்தும் அதிகம் இருக்கிறது. எனவே வறுத்த மற்றும் உப்பு உள்ள வேர்க்கடலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பூண்டு: வாசனைப் பொருட்களில் ஒன்றான பூண்டில் அதிக சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்களில் ஜிங்க் சத்தும் ஒன்று.

இறைச்சி: இறைச்சியில் செம்மறி ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிகமான அளவில் ஜிங்க் சத்தானது உள்ளது. இந்த உணவை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், ஜிங்க் சத்தோடு, புரோட்டீனும் கிடைக்கும்.

காளான்: சூப்பர் உணவுகளில் ஒன்றான காளானிலும் ஜிங்க் சத்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆளி விதை: விதைகளில் ஒன்றான ஆளி விதையிலும் ஜிங்க் உள்ளது. இந்த விதைகளில் ஜிங்க் மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

காராமணி: பருப்பு வகைகளில் ஒன்றான காராமணியில் நிறைய புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. ஆனால் அதே சமயம், அதிக் கொழுப்புக்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த உணவை எப்போதாவது சாப்பிடுவது நல்லது.

நண்டு: கடல் உணவுகள் அனைத்திலுமே ஜிங்க் சத்துக்களை பார்க்கலாம். ஆனால் அதில் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கலாம்.

ப்ரௌன் அரிசி: பொதுவாக முழு தானியங்களில் ஜிங்க் சத்துக்கள் இருக்கும். அதிலும் சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் ப்ரௌன் அரிசியில் ஜிங்க் சத்து உள்ளது.

பசலைக் கீரை: பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இதில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பதோடு, ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.

டார்க் சாக்லெட்: சாக்லெட்களில், ஜிங்க் சத்து அதிகம் உள்ள இனிப்பு இல்லாத கொக்கோ உள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டால், மனம் அமைதியடைவதோடு, உணர்ச்சியும் பெருக்கெடுக்கும்.

பூசணிக்காய் விதைகள்: பூசணிக்காய் விதைகளை வைத்து நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன. எனவே இந்த வகையான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டால், உடலுக்கு ஜிங்க் சத்துக்கள் கிடைப்பதோடு, குறைவான கலோரியும், 0% கொழுப்பும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

உருளைக் கிழங்கின் மருத்துவ குணம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips
உருளைக் கிழங்கின் மருத்துவ குணம்..!

உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி

காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.

வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.

குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

குறிப்பு :

வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது சொல்லுகிறார்கள்

சிறுகீரை பற்றி சிறப்பான தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
சிறுகீரை பற்றி சிறப்பான தகவல்கள்
--------------------------------------------------

சிறுகீரையின் பயாலஜிகல் பெயர் Amaranthus tricolor. இது ஒரு மருத்துவ மூலிகை

சத்துக்களின் சதவீதம் :

சிறுகீரையில் 90 % நீர் இருக்கிறது. மற்றும் 2.8 % புரதச் சத்தும், 0.3 % கொழுப்புச் சத்தும், 2.1 % தாதுப்புக்களும் இருக்கின்றன. மாவுச்சத்து இக்கீரையில் 4.8 % இருக்கிறது. இது 33 கலோரி சக்தியைக் கொடுக்கிறது.

100 கிராம் கீரையில் 251 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் 55 மில்லிகிராம் மணிச்சத்தும் 27.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன.

பலன்களின் பட்டியல் :

உடலுக்கு அழகும் திடமும் கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும்.

மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.

இது பித்தநோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை நீக்கும்.

வாதநோயை குணபபடுத்தும்.

விஷக்கடி முறிவாகப் பயன்படக் கூடியது சிறுகீரை. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது.

சிறுகீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடற்பலம் கிடைக்கும்