மக்களவை (இந்தியா)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:21 | | Best Blogger Tips

மக்களவை (இந்தியா) http://tawp.in/r/yc0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்களவை
Emblem of India.svg
வகை
வகை கீழவை
தலைமையேற்பவர்
மக்களவைத் தலைவர் மீரா குமார், இ.தே.கா
ஜூன் 1, 2009 முதல்
பெரும்பான்மைத் தலைவர் பிரணாப் முகர்ஜி, (இ.தே.கா)
ஜூன் 1, 2009 முதல்
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சிவராஜ், (பி.ஜே.பி)
டிசம்பர் 18, 2009  முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள் மொத்த உறுப்பினர்கள் 544
தேர்ந்தெடுக்கப்பட்டவர் - 542
நியமனம் - 2
அரசியல் குழுக்கள் இடது முன்னணி
தே.ஜ.கூ
ஐ.மு.கூ
தேர்தல்
கடந்த தேர்தல் ஏப்ரல்-மே, 2009
கூட்டரங்கம்
சன்சத் பவன்
இணையத்தளம்
மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] மக்களவை உறுப்பினர்கள்

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 542 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம்.
பார்க்க

[தொகு] உறுப்பினராவதற்கான தகுதிகள்

மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம்.

[தொகு] கூட்டத்தொடர்கள் மற்றும் அலுவல் நேரம்

  • வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிறபகல் 1 மணி வரையும் மீண்டும் பிறபகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது.
  • ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேளவி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.
  • மாநிலங்களைவை போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது.
  • பணவிடை மசோதாக்களை மாநிலங்களைவையில் நிறைவேற்ற முடியாது ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.
  • இரு அவைகளினாலும் எதிரொலிக்கப்பெறும் சர்ச்சைகள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இருமடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும்.
  • மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும்.
    • 1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் : பிப்ரவரி - மே
    • 2. மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை - செப்டெம்பர்
    • 3. குளிர்கால கூட்டத்தொடர் : நவம்பர் - டிசம்பர்

[தொகு] மக்களவைப் பொதுத் தேர்தல்கள்

  • மக்களவை பின்வரும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டவைகளாகும்.
வ.எ மக்களவை பொது தேர்தல்கள்
1 1 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1951
2 2 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1957
3 3 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1962
4 4 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1967
5 5 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1971
6 6 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1977
7 7 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1980
8 8 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1984
9 9 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1989
10 10 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1991
11 11 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1996
12 12 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998
13 13 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1999
14 14 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 2004
15 15 வது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 2009

[தொகு] வெளி இணைப்புகள்

மாநிலங்களவை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:18 | | Best Blogger Tips

மாநிலங்களவை http://tawp.in/r/ybz

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநிலங்களவை
Emblem of India.svg
வகை
வகை மேலவை
தலைமையேற்பவர்
கூட்டத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி, சுயேச்சை
2007 முதல்
பெரும்பான்மைத் தலைவர் பிரதமர்
மன்மோகன் சிங், (இ.தே.கா)
2007 முதல்
எதிர்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி, (பா.ஜ.க)
2004  முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள் 250 (238 தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (மறைமுகத் தேர்தல் மூலம்) + 12 நியமனம் செய்யபட்டவர்கள்)
அரசியல் குழுக்கள் இடது முன்னணி
தே.ஜ.கூ
ஐ.மு.கூ
கூட்டரங்கம்
சன்சத் பவன்
இணையத்தளம்
மாநிலங்களவை
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறர்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
  • மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்

ஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

[தொகு] மாநிலம் வாரியாக உறுப்பினர்கள்

உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்:

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:16 | | Best Blogger Tips

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் http://tawp.in/r/17q8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Emblem of India.svg
இக்கட்டுரை
இந்திய அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரின் ஒரு பகுதி


மற்ற நாடுகள் · அரசியல் நுழைவாயில்
இந்திய அரசு நுழைவாயில்
 பார்  பேச்சு  தொகு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.
தற்பொழுதய துணைக்குடியரசுத் தலைவர் மேதகு முகம்மது அமீத் அன்சாரி , இவர் ஆகஸ்டு 10, 2007 ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.
குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.
தேர்ந்தெடுக்கும் முறை
ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றிப் பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.
ஊதியம்
துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.

இந்தியக் குடியரசுத் தலைவர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:16 | | Best Blogger Tips

இந்தியக் குடியரசுத் தலைவர் http://tawp.in/r/kfk

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குடியசுத்தலைவர்,  இந்தியா
(भारत के राष्ट्रपति)
Emblem of India.svg
இந்தியாவின் சின்னம்
திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டில்
தற்போது
பிரதிபா பாட்டில்

25 July 2007 முதல்
அதிகாரப்பூர்வ பட்டம் Madame President
(Within India)
Her Excellency
(Outside India)
வாழுமிடம் ராஷ்டிரபதி பவன்
தேர்ந்தெடுப்பவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது முன்னணி'[1]
பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள், புதுப்பிக்கவல்லது
முதல் குடியசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத்
ஜனவரி 26, 1950
உருவாக்கப்பட்ட வருடம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்
ஜனவரி 26, 1950
ஊதியம் Indian Rupee symbol.svg 1,50,000 ($ 3340) ஒரு மாதத்திற்கு
இணைய தளம் இந்திய குடியரசுத் தலைவர்
Emblem of India.svg
இக்கட்டுரை
இந்திய அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரின் ஒரு பகுதி


மற்ற நாடுகள் · அரசியல் நுழைவாயில்
இந்திய அரசு நுழைவாயில்
 பார்  பேச்சு  தொகு
இந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய அரசின் தலைவர்" ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் ஆவார். இவரே இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] தகுதிகள்

  • 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராவதற்கான தகுதி பெற்றிருக்கவேண்டும்.
  • ஊதியம் /இலாப பங்கீடு பெற்று எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடாது.

[தொகு] அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க (இந்தியப் பிரதமராக பதவியேற்க) அழைப்பது.
  • அவரை பிரதம மந்திரியாக நியமித்தல்
  • பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்
  • தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நிர்வகித்தல்(இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
  • பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
  • இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.
  • கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
    • மாநில ஆளுநர்.
    • உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
    • இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
    • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.
    • வெளி நாட்டுத் தூதுவர்கள்
    • மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க, மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.

[தொகு] தேர்தல் முறை

மேலும் பார்க்க: இந்திய வாக்காளர் குழு
குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநிலங்களின் கீழ்ச்சபைகளின் உறுப்பினர்களால் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
இந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.[2] இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும்.[3] 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல் தெரிவாகத் தேர்ந்தெடுத்திருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட வேண்டும்.

இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | | Best Blogger Tips

இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் http://tawp.in/r/17xi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emblem of India.svg
இக்கட்டுரை
இந்திய அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரின் ஒரு பகுதி


மற்ற நாடுகள் · அரசியல் நுழைவாயில்
இந்திய அரசு நுழைவாயில்
 பார்  பேச்சு  தொகு

இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் ஆளுநர்கள் இந்தியாவின் மாநிலங்களிலும் துணை ஆளுநர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளிலும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று கடமையாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] ஆளுநர்கள்

ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

[தொகு] ஆளுநரின் செயல் அதிகாரங்கள்

  • ஆளுநர் மாநிலத்தில் செயலாட்சியரை நியமிப்பதற்கு மற்றும் நீக்குவதற்கு அதிகாரம் பெற்றவர்.
  • ஆளுநர் மாநிலங்களில் உள்ள சட்டமன்றக் கீழவை மற்றும் மேலவைகளில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்.
  • ஆளுநர் வரையரைக்குட்படுத்தபட்ட அதிகாரங்களின் படி மாநிலங்களில் அதிகாரங்களை செலுத்தலாம்.
  • ஆளுநரின் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.

[தொகு] துணை நிலை ஆளுநர்கள்

இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள்.

[தொகு] ஆட்சிப் பொறுப்பாளர்கள்

இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார்.