* எந்த நதியும் இறுதியில் கடலில் கலப்பது போல, எந்த வழியில் வாழ்க்கையை நடத்தினாலும், முடிவில் ஒருவராக விளங்கும் பரம்பொருளான கடவுளே நம்மை சேர்த்துக் கொள்வார்.
* இந்தக் காலத்தில் அரசாங்கமே மக்களுக்காக கடன் வாங்குகிறது. அதே வழியைப் பின்பற்றி, மக்களும் சிறிது சிறிதாகவே கடனுக்கு அடிமையாகி மாறி வருகின்றனர்.
* மனம் நாலாபுறத்திலும் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்கும் இயல்புடையது. அதை பக்தியால் நெறிப்படுத்தி நல்வழிப்படுத்துவது அவசியம்.
* நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறர் வாழ நினைப்பதே உத்தம மனிதர்களின் இலக்கணம்.
* ஒருமுகப்பட்ட சிந்தனையோடும், உள்ளத் தூய்மையோடும் பணியில் ஈடுபட்டவன் நற்பலன் பெறுவது உறுதி.
* யோகி யோகசிந்தனையில் ஆழ்ந்து, தான் மட்டுமே இன்பம் அடைகிறார். ஆனால், சங்கீதத் துறையில், பாடுபவர் மட்டுமில்லாமல் அதைக் கேட்பவரும் மகிழ்ச்சியடைகிறார்.
- காஞ்சிப் பெரியவர்
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.

