திருச்சிராப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர் இடையே தினமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips

 May be an image of train and text

 

🚂 திருச்சி இருந்து அரியலூர் விருத்தாச்சலம் நெய்வேலி வழியாக கடலூர் வரை செல்லும் தினசனி பயணிகள் ரயில் சேவை இது 💥

⬆️ திருச்சிராப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர் இடையே தினமும் இயங்கும் பயணிகள் ரயில் சேவை இது !! இந்த ரயிலில் கட்டணம் ₹ 40 மட்டுமே திருச்சி டூ கடலூர் வரை செல்ல 😍
➡️ 185 கிமீ தூரம் இந்த பயணிகள் ரயில் திருச்சி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வரை பயணித்து செல்கிறது ✅
🚆 வண்டி எண் || 76812/76811
திருச்சிராப்பள்ளி ⟨⟨≈⟩⟩ திருப்பாதிரிப்புலியூர்
" டெமு பயணிகள் வண்டி "
🔴 திருச்சிராப்பள்ளியில் இருந்து தினமும் மாலை 03:45 மணிக்கு புறப்பட்டு இரவு 08:50 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் செல்கிறது ✅
🔴 திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தினமும் காலை 05:55 மணிக்கு புறப்பட்டு காலை 11:05 மணிக்கு திருச்சிராப்பள்ளி செல்கிறது ✅
🚃 மொத்தமாக 8 DEMU பெட்டிகள் உள்ளது
✓ நிறுத்தங்கள் :- (( ALL STOP SERVICE ))
பொன்மலை திருச்சிராப்பள்ளி-டவுன் ஸ்ரீரங்கம் உத்தமர்கோவில் பிச்சாண்டார்கோவில் வாளாடி லால்குடி காட்டூர் புள்ளம்பாடி கல்லக்குடி-பழங்காநத்தம் கல்லகம் சில்லக்குடி அரியலூர் ஒட்டக்கோவில் வெள்ளூர் செந்துறை மாத்தூர் ஈச்சங்காடு-ஹால்ட் ஈச்சங்காடு பெண்ணாடம் தாழநல்லூர் விருதாச்சலம்-டவுன் விருதாச்சலம் உத்தங்கல்-மங்கலம் நெய்வேலி வடலூர் குறிஞ்சிப்பாடி கடலூர் துறைமுகம் !!
❎ திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு செல்லக்கூடிய இந்த ரயில் பெட்டிகள் மீண்டும் காலியாக கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் வந்து சேரும் // அங்கு இதற்கான பெட்டி பகிர்மானம் இருக்கிறது !! கடலூர் சேலம் ரயிலுடன் பெட்டி பகிர்மானம் செய்து இந்த ரயில் இயங்குகிறது || இதன் மூலம் இரவு மற்றும் அதிகாலையில் காலியாக பெட்டிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இடையே சென்று வருகிறது !! திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் தான் கடலூரிஅன ஒரு முக்கியமான பகுதியை இணைக்கிறது ✅
மிகவும் குறைவான கட்டணமான ₹40-ல் இந்த ரயில் மூலம் திருச்சியிலிருந்து கடலூருக்கு நீங்கள் பயணிக்க முடியும் 😱 குறைவான கட்டணத்தில் பயணிப்பதற்கு இது ஒரு அருமையான ரயில் இணைப்பு ஆகும் ‼️

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

மயிலாடுதுறை- சேலம் -மயிலாடுதுறை - தினமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

 

சேலத்தில் இருந்து திருச்சி வழியாக தினமும் மயிலாடுதுறை வரை செல்லும் மெமு விரைவு ரயில் இது // 12 முன்பதிவில்லா பெட்டிகள் 🙂‍↕️

➡️ வண்டி எண் :- 16812/16811 || MEMU EXPRESS
• சேலம் சந்திப்பு ⟨⟨≈⟩⟩ மயிலாடுதுறை •
" முன்பதிவில்லா விரைவு வண்டி "

📌 சேலத்தில் இருந்து தினமும் மதியம் 02:05 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ராசிபுரம் நாமக்கல் கரூர் குளித்தலை திருச்சிராப்பள்ளி பூதலூர் தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக இரவு 09:30 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேருகிறது !!

📌 மயிலாடுதுறையில் இருந்து தினமும் காலை 06:15 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி குளித்தலை கரூர் நாமக்கல் ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 01:15 மணி செல்கிறது !!

🔴 இதன் வழித்தடத்தில் மொத்தம் 43 ரயில் நிலையங்களில் இந்த விரைவு ரயில் நின்று செல்கிறது // குறிப்பாக எடுத்து கொண்டால் அனைத்து நிலையத்திலும் நின்று செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும் !! ஒரு சில நிலையங்களில் மட்டும் நிற்காது ....

⬆️ ஆரம்பத்தில் மயிலாடுதுறை திருச்சி //
திருச்சி கரூர் சேலம் என மூன்று ரயில்களாக இயங்கி வந்து இந்த ரயில்கள் பிறகு ஒரே ரயிலாக ஒன்றிணைக்கப்பட்டு சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை விரைவு ரயிலாக தற்போது இயக்கப்பட்டு வருகிறது ✅

🚃 இந்த ரயிலில் மொத்தமாக 12 முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது // MEMU வகை பெட்டிகள் ஆகும் -- இதில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது !!

‼️282 கிமீ தூரம் இந்த UR விரைவு ரயில் பயணித்து சேலத்திற்கு சென்று வருகிறது !!

💢 இந்த ரயிலில் பயணிப்பதற்கு மெயில் எக்ஸ்பிரஸ் வரை டிக்கெட் எடுக்க வேண்டும்

என்னதான் இது முழுவதும் முன்பதிவு இல்லா ரயிலாக இருந்தாலும் இது விரைவு கட்டண வகை ரயிலாக செயல்பட்டு வருகிறது ‼️

📸 படம் || சேலத்தில் இருந்து திருச்சி வந்த ரயில் திசை மாறிய பிறகு தற்போது மயிலாடுதுறை நோக்கி செல்கிறது ||
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷