‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 May be an image of one or more people

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு கிராமத்தில் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்கி மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (33). இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பதவியில் காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகள் சுட்டதில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் குண்டு ஊடுருவியது. பலத்த காயமடைந்த நிலையிலும் இவர் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று, தனது குழுவைக் காப்பாற்றினார். இந்த வீர தீர செயலைபாராட்டி இவரை கவுரவிக்கும் வகையில் இந்திய இவருக்கு கீர்த்தி சக்ரா விருதினை அறிவித்தது.

2026-ஆம் ஆண்டு இந்திய அரசு 7 வீரர்களுக்கு இந்த விருதை வழங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சேர்ந்த மீனாட்சி சுந்தரமும் ஒருவர். கடந்த 8-ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதை மீனாட்சி சுந்தரத்துக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், விடுமுறையில் இவர் சொந்த கிராமமான காமகவுண்டன்பட்டிக்கு இன்று பிற்பகல் வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தாடை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கைகொடுத்து இவரை பாராட்டினர்.

தொடர்ந்து பொன்னாடை போர்த்தி கவுரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். முன்னாள் ராணுவத்தினர் சிலர் கூறுகையில், “அதிவீரச் செயல்களுக்காக இந்திய ராணுவத்தால் வழங்கப்படும் இந்த விருது அசோக சக்ரா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள ஓர் உயரிய விருது ஆகும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வீரர் இந்த விருது பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றனர்.
 

எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

 May be an image of temple

எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!

இந்த உடலில் உயிர் வந்ததும் மாயையே...
அந்த உடலை விட்டு உயிர் போவதும் மாயையே.....
உடலால் ஏற்பட்ட சொந்தங்களால் புடை சூழ வாழ்வதும் மாயையே...

மனித உருக்கொண்டு பூமியில் ஜனித்த பொழுது வெறும் கையுடன் வந்தோம்... போகும் போது வெறும் கையுடன் தான் போவோம் என்பது வழக்கத்தில் உள்ள கூற்று…..
ஆனால் ஆன்மா “நிரம்பி வழிய வழிய” பெரும் செல்வம் ஒன்றைக் கொண்டு தான் செல்கின்றார்கள் புண்ணிய ஆத்மாக்கள் . அது என்ன செல்வம் அது?

ஆதியும் அந்தமும் இல்லா.. என்றும் நிலையான செல்வமாம் அந்த “பேரானந்த சிவம்” என்னும் பெருஞ்ச்செல்வத்தை நிச்சயம் கொண்டு தான் செல்கிறார்கள்.. அது “சிவத்திற்க்கும்” அந்த “புண்ணிய ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது...

யாரெல்லாம் சிவ பெருங்கருணையை உணரப் பெற்றவர்களோ!!!
யாரெல்லாம் வாழும் காலத்தில் சிவத்தையே உயிர் என நினைத்து வாழ்கின்றார்களோ!!
யாரெல்லாம் ஒவ்வொரு செயலிலும் சிவத்தை உணர முற்ப்பட்டு சித்தமெல்லாம் சிவமென வாழ்கின்றார்களோ!! இவர்கள் யாவரும் நிச்சயம் இந்த பூவுலகப் பணியை முடித்து விட்டு வெறும் கையுடன் செல்வதில்லை என்பது சிவத்திண்ணம்…

மனித உடல் கொடுக்கப்பட்டத்தின் நோக்கம் அந்த இறைவனை நினைத்து… உணர்ந்து … இறைவனோடு ஒன்றாக கலக்கவே என்று ஒவ்வொரு ஆன்மாவிற்க்கு இறைவன் தக்க தருணத்தில் உணர்த்துவார் …. அந்த உணர்த்தலை புரிந்து கொண்டு தண்ணீருக்குள் மலர்ந்து வாழ்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாத தன்மையுடையது தாமரை மலர்…. அதனைப் போலவே செல்வக்குவியல் பெற்று வாழ்வோருக்கும், தேவையான செல்வத்துடன் வாழ்வோருக்கும், நடுத்தரவர்கமாக வாழ்வோருக்கும், வறுமையில் வாழ்வோருக்கும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் … அது சிவமாக மட்டுமே இருத்தல் வேண்டும் ...
தங்கள்ளுக்குள் சிவத்தை தேடிக் கொண்டிருக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கும் இது விளங்கும் ...

மற்றபடி சிவத்தை நினைக்கவோ…..உணரவோ.. ஆதாரம் கேட்போரிடமும்.. மற்றும் சிவத்திடம் நிலையில்லா செல்வதை மட்டுமே வேண்டுவோருக்கும் சிவம் என்றும் “மறைபொருளாகவே” இருந்து விடுகின்றது.. பாசாங் இல்லாத பக்தியினால் மட்டுமே பரமனை உணரமுடியும்..

சிவப் பெருக்கருணையை உணர்ந்து வாழ்வோம்… நிலையான சிவத்தை (சிவத்தாயை) மட்டும் வேண்டும் என்று கேட்போம்… சிவப் பெருவாழ்வு வாழ்வோம் என்றும் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
போற்றி ஓம் நமச்சிவாய!!!

சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !

வாருங்கள்.... அறியப்படாத மிகப்பழமையான சிவனார் ஆலயங்களை வழிபாடுகள் செய்து பாதுகாத்து தொடர்ச்சியாக வழிபடுவோம்..

ஊர் கூடி தேர் இழுத்தால் நகராத தேரும் நகரும்...

அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்
சிவனருள் பெறுக...

**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
**மாதம் ஒருமுறை பழமையான சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேகப்பணியில் **அடியேன்**
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்.

 

Thanks & copy from 

 

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம்...................... ❤️ ❤️ ❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

 May be an image of text

இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
 
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
 
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
 
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
 
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
 
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
 
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
 
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
 
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
 
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
 
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
 
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
 
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
 
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
 
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
 
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
 
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
 
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
 
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
 
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
 
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
 
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
 
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
 
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
 
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
 
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
 
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
 
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
 
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
 
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
 
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
 
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
 
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
 
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
 
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
 
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
 
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
 
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
 
இரவு 10:00
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
 
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
 
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
 
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
 
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
 
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
 
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
 
ம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், 
 
மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
 

Thanks & Copy from FB