

இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.



சாஸ்தா கோவில்கள்
தென் சிவாலயங்களை நோக்கி...![]()
பகவான் ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த
குளத்துப்புழை,
ஆரியன்காவு,
அச்சன் கோவில்,
சபரிமலை
இந்த
நான்கு சாஸ்தா கோவில்களும் பூகோள ரீதியாக தமிழ்நாட்டில் உள்ள நான்கு
சிவாலயங்களை நோக்கி சன்னதி கொண்டிருப்பது வியப்புக்குரிய செய்தியாகும்.
குளத்துப்புழை பாலகன்
பாவநாசம் சிவனை நோக்கியும்,
ஆரியன்காவு ஐயன்
திருக்குற்றால நாதரை நோக்கியும்,
அச்சன்கோவில் அரசர்
ஸ்ரீ சங்கர நாராயணரை நோக்கியும்,
சபரிமலை வாசன்
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை நோக்கியும் சந்நிதி கொண்டு இருக்கிறார்கள்.
இதில் கூறப்படும் சிவாலயங்கள் பழமையானவை என்றால், அதை விட பழமையானவைகளாக சாஸ்தா ஆலயங்கள் அமைந்துள்ளன.
இது போன்ற பூகோள வரலாற்று அமைப்பு, அமைவிடங்கள் வேறு எங்கும் காணப்படவில்லை.
இத்தகைய அமைப்பு என்பது ஆழமான ஆகம, யோக, தத்துவ ரகசியம் கொண்டது.
இந்த
நான்கு சாஸ்தா கோவில்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு என்பது, முடிவில்
அது சிவானுபவத்தில் நம்மை லயம் அடையச் செய்யும் பயணமாக அமைகிறது.
மலையாள தேசத்தை ஸ்தாபிதம் செய்த பரசுராமர் தமது தவத்திற்கு காவலாக
சாஸ்தாவை நான்கு கோவில்களில் ஸ்தாபிக்கிறார் என்று பார்க்கிறோம். அவை
பூமியின் சக்தி கேந்திரங்களாக, சக்தி நாளங்களாக, (energy grid) அடர்ந்த
மலைத் தொடர்களில் பரவி அமைந்துள்ளன.
இது ஒரு “ஆன்மீக ஜியோமேட்ரி”
மலைத்தொடர் = முதுகெலும்பு
கோவில்கள் = சக்கரங்கள்
நோக்கும் திசை = சக்தி ஓட்டம்
இந்த அமைப்பு சொல்லும் மிகப் பெரிய ரகசியம் ஐயன் வழியில் சென்று சிவன் என்ற இலக்கை அடைவது தான்...!
ஐயனின்
துளசி மாலை அணிவது, விரதம் மேற்கொள்வது, இருமுடி அன்னதானம், மலை ஏற்றம்,
பதினெட்டாம் படி, நெய்யபிஷேகம், சமர்ப்பணம் மற்றும் சரணாகதி
இவையாவும் எதைக் குறிக்கிறது?
இவையனைத்தும் உடல் → மனம் → ஆத்மா சுத்திகரிப்பு ->> தத்துவமசி நோக்கிய பயணம் என்று சொல்கிறது.
இந்த விஷயங்கள் யாவும் வார்த்தைகளாக, படங்களாக , ஓவியங்களாக அறிவதை விட ,
தனக்குள் தானே உணர வேண்டிய விஷயம். மிக நுண்மையான ஆன்மிக அனுபவமாக அது அமைய
வேண்டும். அதற்கு வழி?
பக்தி
உணர்வோடு இதை உங்கள் மன ஓட்டத்தில், கண் முன் காணும் திரைப்படம் போல
மௌனத்தில் எண்ணிப் பாருங்கள் . இதன் பிரம்மாண்டம் புரியும். அந்த
புரிதலுக்கு முதலில் "நன்றி" கூறுங்கள். அப்போதே உங்கள் உள்ளத்தில் ஒரு
நிறைவும், மகிழ்வும் ஏற்படுவதை உணர்வீர்கள். அதுவே அந்த ஐயனின் கிருபை...!
எழுத்து சித்தர் பால குமாரன் அவர்கள் சொல்வது போல, பக்தி என்பது மனித வாழ்க்கையில் முக்கியம்.
காடோ,
மலையோ, உருவமுள்ளதோ, உருவமற்றதோ வழிபாடு என்பது நல்லது. வாழ்தல் என்பது
இங்கு அதை விட மிக முக்கியமாக இருக்கும் போது இந்த கடவுள் வழிபாடு ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நாளை
என்னவென்று தெரியாத மனிதருக்கு இந்த நம்பிக்கைதான் மிகப்பெரிய ஊன்றுகோல்.
கடவுள், பக்தி,விரதம், தத்துவார்த்தம் ஒரு சுகமான விஷயம். அது, வாழ்க்கை
குறித்த நமது நம்பிக்கையை அதிகமாக்குகிறது என்கிறார்.
அதுவும் உண்மைதானே...!
இன்று ரமண பகவான்
"விதேஹ முக்தி" அடைந்த தினம். இந்நாளில் உங்கள் அனைவருக்கும்
பகவான் அருள்கடாட்ஷம் என்றென்றும் நிலைக்கட்டும்.
குருவே சரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
![]()
![]()
![]()
![]()
![]()
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏