
ராகு பகவான் ஜாதகத்தில் எப்படி பலன் தருகிறார் ?
ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் தரும் பலன்கள்
பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது தனித்த ராகு பகவான் ஒரு மாதிரியான பலனை தருகிறார்.
அதே ராகு பகவான் மற்ற கிரகங்கள் உடன் சேரும் போது வேறு மாதிரியான பலன்களை தருகிறார்.
ராகு பகவான் பருப்பொருள் அற்ற நிழல் கிரகம் ஆகும். ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எனவே இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாக கருத வேண்டும் பலன் எடுக்கும் போது ராகு உடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும் ராகு பகவானை பார்வை செய்த கிரகங்கள் இதன் அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ராகு பகவான் தனித்த நிலையில் அதன் இயல்பான பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.ராகு பகவான் ஆனவர் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வையை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அதன் தசை ஜாதகருக்கு நல்ல பலனை அள்ளிக் கொடுக்கிறது.
குரு பகவான் உடன் ராகு பகவான் சேரும் பொழுது ராகு பகவான் ஆனவர் குருவின் இணைவால் சுப தன்மையை அடைவார்.ஆனால் அதே நேரத்தில் குரு பகவான் ஆனவர் கடுமையான பாவ தன்மையை அடைகிறார்.இங்கு குரு தசை ஆனது கடுமையான கஷ்டங்களை அதன் தசையில் தருகிறது.அதே நேரத்தில் ராகு பகவான் தசை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
ராகு பகவான் ஆனவர் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் கடுமையான யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
ராகு பகவான் மேசம் ,ரிஷபம் ,மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய இடங்களில் நின்று திசை நடத்தினால் ஜாதகருக்கு நல்ல யோக பலனை தருகிறது.
ராகு பகவான் லக்னத்தில் அமர்ந்து சர்ப்ப தோஷம் என்ன நாகதோஷத்தை சாதகருக்கு கொடுத்து திருமண தடையை உண்டாக்குகிறார். அதே போல இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும்பொழுது களத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறார்.
மூன்றாம் இடத்தில் ராகு பகவான் அவரும் பொழுது சகோதர தோஷத்தை தருகிறார்.
ஐந்தாம் இடத்தில் அமரும் பொழுது புத்திர தோஷத்தை தருகிறார் . ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்வார்..ஏழாம் இடத்தில் அமரும் பொழுது திருமணத் தடையினை தருகிறார். எட்டாம் இடத்தில் ராகு பகவான் களத்திர தடையை தருகிறார். ஒன்பதாம் இடத்தில் அமரும் பொழுது தந்தைக்கான தோஷத்தை தருகிறார்.
பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது அமர வேண்டும் என்ற விதியில் பத்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்வது நல்லது. 11ஆம் இடங்களில் ராகு பகவான் அமர்ந்து சுப கிரக பாதையில் பெரும்பொழுது புகுந்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறார் இதே போல 12ஆம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குருவின் பார்வையை பெற்ற நிலையில் ராகு தசை வரும்பொழுது வெளிநாடு செல்லும் யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.
ராகு பகவான் குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.இதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மகரம் , கும்பம் மிதுனம் மற்றும் கன்னி ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இடம் பெற வேண்டும்.
ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பது மட்டுமல்லாமல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒன்றையும் அவை பெற்றிருக்கவில்லை.
உச்சம் ,ஆட்சி, மூல திரிகோணம்
போன்ற ஸ்தான வலிமை கிடையாது., பார்வை பலமும் கிடையாது.திக் பலம் கிடையாது.
எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகரும் பொழுது ராகு பகவான் மட்டும் பின்னோக்கி நகரும் என்பதால் இவற்றிற்கு வக்ர கதி கிடையாது. ராகு பகவான் ஒளி மிகுந்த சூரியனை நெருங்கும் பொழுது இவை சூரியனால் அஸ்தங்கம் அடைவதில்லை. மாறாக சூரியனுடைய ஒளியை மறைத்து. கிரகண தோஷத்தை உண்டுபண்ணுகிறது.
ராகு பகவான் வாரத்தின் ஏழு நாட்களில் ராகு பகவானுக்கு இடம் கிடையாது. ராகு பகவானுக்கு என்று தனி ஓரை கிடையாது.
ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம் அளவில் ராகு காலம் என்று மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராகு பகவான் தரும் தோஷங்கள் போக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூர், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம், திருபாம்பூரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து பரிகாரம் செய்ய வேண்டும்.
நன்றி
