பக்கங்கள்

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

 May be an image of monument, temple and crowd

 

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?
 
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
 தமிழ்நாட்டிலேயே பணக்கார கோயில் எது ...
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
 
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
 
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 ...
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
 
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
 richest temples: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார ...
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
 
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
 
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
 
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
 
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 ...
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
 
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
 
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
 
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 பணக்கார  கோவில்கள்...முதலிடம் எந்த கோவிலுக்கு தெரியுமா ?
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
 
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
 
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
 
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம்.
 
 அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
 
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
 
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
 
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 பணக்கார கோவில்கள்...முதலிடம்  எந்த கோவிலுக்கு தெரியுமா ?
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
 
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
 
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை.
 
 ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
 
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
 
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
 
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.
 
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,*
 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
 
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
 
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
 
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
 
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
 
வாழிய பைந்தமிழ் நாடு...
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**
 
வழிபாடே இல்லாமல் இருக்கும் சிவ ஆலயங்களில் அபிடேக வழிபாடு செய்வது பல மடங்கு பயனை தரும்.
 
வழிபாடு செய்ய அடியார்களே வாரீர்......
.
திருச்சிற்றம்பலம்
**ஈசன்**
**அடி**
**தேடி**
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்....
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழமையான சிவனார் ஆலயத்தில் உழவாரம்,
திருவாச முற்றோதுதல், தமிழ் முறையில் சிவவேள்வி, திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா, மற்றும்
108மூலிகை
பொடிகளால் அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
அனைவரும் வருக...
**தற்போது தென்தமிழ்நாட்டில் உள்ள யாரும் அதிகமாக அறியப்படாத சிவனார் ஆலயங்களை நோக்கி எமது வழிபாடுகள் ஆலயப்
பயணங்கள்...
வாருங்கள் நம் முன்னோர்கள்
எதிர்கால சந்ததிக்காக
பாதுகாத்து வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயங்களை நாமும் பாதுகாத்து வழிபடுவோம்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

 
 

"விண்ணிழி விமானம்"

 May be an image of temple and text that says "ば SA チ k-N3s aika મંલલીં ஙங்க கோபுர தரிசனம் GOLDEN TOWER GOLDENTOWERVIEW VIEW"

மதுரை சொக்கநாத பெருமான் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் மறைந்துள்ள ஒரு அபூர்வ ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
"விண்ணிழி விமானம்" என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
 
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேலே அமைந்துள்ள உள்ள தங்க கோபுர விமானம் விண்ணில் இருந்து வந்த விண்கல்லால் ஆன ஒரு விண்பொருள் என்பது நமக்கு தெரியாத தேவ ரகசியமாகும். 
 
தேவர்களின் தலைவனான இந்திரன் தன்மீது ஏற்பட்ட கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டான். 
 
அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.
இந்த சுயம்புலிங்கத்தை வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. 
 
எனவே இந்திரன், அச்சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.
தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து
சுயம்புலிங்கத்திற்கு
மேலே விமானமாக அமைத்தான். 
 
இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்று முதலாவதாக இருந்த காரணப் பெயர் பிற்காலத்தில் மறைந்து இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.
 
இதற்கு ஆதாரமாக மதுரை கோவில் புராங்களிலுள்ள கீழ்க்கண்ட இரண்டு பாடல்கள் இதை உறுதிபடுத்துகின்றது.
 
(1)திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது
திருவாலவாயான படலம்
 
“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
'வானிழி விமானம்'
பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“
 
(2) திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340
“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமான
நின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப் புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
சொக்கநாத பெருமானின் இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
 
முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.
அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை.
 
மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.
இந்தக் கடம்ப வனத்தை அழித்து 'வங்கிய சேகர பாண்டியன்' என்பவன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
அப்போது மதுரையின் பழைய எல்லைகளை காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.
 
மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார். 
 
சிவபெருமான் சித்தராக தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும் என்பது பரம ரகசியமாகும்.
 
சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமான மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைப் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோம்.
 
(இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்)
 
திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அர்ச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் திருவீழிமிழலை கோவில் புராணம் கூறுகிறது)
 
ஆதாரம்:திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
 
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
 
எவ்விதமான விஞ்ஞான வளர்ச்சியும்அடையாத அந்தக் காலத்திலேயே
இந்த விமானத்தை
பார்ப்பதற்கு ஏதுவாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் மக்கள் நடந்து செல்லும் வழியில் சண்டிகேசுவரர்
சன்னதிக்குஅருகிலும், வெளிப்பிரகாரத்தில்
உள்ள நந்தி மண்டபம் அருகிலும் தரைப்பகுதியில் உள்ள கற்களில் நமது சிற்பிகள் பூப்போன்று வட்டமாகச் செதுக்கி அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள்.
 
அந்த இடத்தில்
நின்று பார்த்தால் மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தின்
கருவறையின் தங்கவிமானத்தை காணலாம்.
இந்த தங்கவிமானத்தைக்
கண்டு வணங்கிட
விரும்புபவர்கள்,
 
இந்த இடத்தைத்
தேடிச்சென்று, அந்தப்
பூவின் மீது நின்று
பார்த்து வழிபடலாம்.
ஆனால், இந்த அமைப்பு
முறையானது நாள்தோறும் நாடெங்கிலும் இருந்து எத்தனையோ பக்தர்கள் அன்னை
மீனாட்சியையும், ஐயன்
சோமசுந்தரேசுவரரையும்
வணங்கிச்செல்கின்ற பக்தர்கள் அனைவருக்கும்
தெரியாமல் உள்ளது. 
 
இவர்கள் அனைவரும்
இந்த எளிய வசதியை
பயன்படுத்தி கொள்ளும்
வகையில் இதுபோன்ற
இடங்கள் குறித்து கோயில்
புத்தகங்களிலும், தகவல்
பக்கங்களிலும் இடம் பெறச்
செய்தால் பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வோர் தவறாமல் இந்த இடங்களில் நின்று விண்ணிழி விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்வோம்.
 
அறிவியல் அடிப்படையில் திருவிளையாடற் புராணக் கருத்தை நோக்கினால்,
சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
 
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 🥹🥹

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷