பக்கங்கள்

அரைகுறை கல்வி ஆபத்தானது

 May be an image of 1 person, aircraft and text

ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.
 
அவன் அந்த புத்தகத்தை பிரித்தான். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது.
 
 அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !
 
அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது.
இரண்டாவது பக்கத்தை புரட்டினான். 
 
"விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.
 
இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தான். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.
 
அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான்.
 
அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான்.
அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
 
காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!
 
நீதி:
 
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.
அரைகுறை கல்வி ஆபத்தானது மட்டுமல்ல, அபாயகரமானதும் கூட⚠️

 

🌷 🌷🌷 🌷  May be an image of 3 people, the Qutub Minar and the Charminar 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

*உங்கள் சந்ததியினரே* *பசியில்லாமல் வாழ

 உங்கள் சந்ததியினரே* *பசியில்லாமல் வாழ இதை செய்தால் போதும்.!! –  chinnuadhithya

*உங்கள் சந்ததியினரே* *பசியில்லாமல் வாழ இதை செய்தால் போதும்.!!*

பொதுவாக எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு தினம் தோறும் நைய்வேத்தியம் படைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இறைவன் பட்டினியாக இருக்கக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள் சாஸ்திரத்தில் இதை கூறியிருக்கிறார்கள். நம் வீட்டு பூஜை அறையில் இருப்பதும் கடவுள்தான்

 வீட்டில் நைவேத்தியம் படைக்க | Vettil naivedyam padaikka in Tamil தினம்தோறும் அந்த இறைவனுக்கு நம் வீட்டில் நைய்வேத்தியம் படைக்கப்படுகிறதா என்று கேட்டால், பலர் இல்லை என்று தான் கூறுவார்கள். ஒரு சிலர் மட்டுமே நைவேத்திய பிரசாதத்தை அந்த இறைவனுக்கு தினம்தோறும் படைப்பதை வழக்கமாகக் வைத்துள்ளார்கள்.

தினம்தோறும் நம் வீட்டில் இருக்கும் இறைவனுக்கு நைய்வேதியம் செய்ய வேண்டும் என்றால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போமா. நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் இப்படி பல வகைப்பட்ட சாதங்களை செய்து கோவிலில் அந்த இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைப்பார்கள். இப்படிப்பட்ட பலவகை சாதங்களை நம் வீட்டிலும் சமைத்து அந்த இறைவனுக்கு நெவேத்தியமாகப் படைக்கலாம். ஆனால் இது நம் அன்றாட நடைமுறையில் சாத்தியமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஒருவரது வீட்டில் சாப்பாடு சமைக்காமல் இருக்க மாட்டோம். அன்றாட உணவிற்கு, வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் கூட காலை வேளையில் சாதத்தை வடித்து விடுவோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த சாதத்தில் சிறிதளவை தினம்தோறும் அந்த இறைவனுக்குப் படைப்பது தான் மிகவும் சிறந்தது. இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக தனியாக ஒரு சிறிய தட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தட்டு வெள்ளியில் இருந்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் பித்தளை, செம்பு இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கண்டிப்பாக எவர்சில்வர் பாத்திரத்தில் இறைவனுக்கு நெய்வேத்தியம் படைக்க கூடாது. இறைவனுக்காக வைத்திருக்கும் அந்த தட்டில் சிறிதளவு சாதத்தையும் அதில் சிறிதளவு நெய்யும் சேர்த்து இறைவனுக்கு படைக்கும் போது ஒரு தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும். இந்த சாதத்தை காகத்திற்கு வைத்துவிடலாம். முடியாத பட்சத்தில் நீங்கள் சாப்பிடும் உணவில் சேர்த்து விடலாம்.

உங்களால் சமைக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட கற்கண்டு, உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளையோ அல்லது பழ வகைகளையோ இதில் ஏதாவது ஒன்றை அந்த இறைவனுக்கு நைய்வேத்தியமாகப் படைக்கலாம். பெண்கள் பூஜை அறைக்கு செல்ல முடியாத சமயங்களில் உங்கள் குழந்தைகளின் கையில் ஒரு பழத்தைக் கொடுத்து கூட அந்த இறைவனுக்கு நைய்வேத்தியமாக வைக்கச் சொல்லலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஒரு நாள் கூட அந்த இறைவனுக்கு நைய்வேத்தியமாக பிரசாதத்தை படைக்காமல் இருக்கக் கூடாது என்ற எண்ணமானது உங்களுக்கு நாளடைவில் வந்துவிடும். அந்த இறைவனுக்கு பசியிருக்கும் என்ற உணர்வோடும், நம் வீட்டில் இறைவன் வசிக்கின்றார் என்ற உணர்வோடும் நாம் இறைவனை வணங்கும்போது, அந்த இறைவனின் அருளை நம்மால் பரிபூரணமாக பெறமுடியும்.

இப்படி தொடர்ந்து நீங்கள் இறைவனை பட்டினி போடாமல் நைய்வேத்தியம் வைத்து வழிபடுவதன் மூலம் உங்கள் பரம்பரைக்கே சாப்பாடு இல்லை, சாப்பாட்டிற்கு கஷ்டம் என்ற நிலையே வராது. *உங்கள் சந்ததியினரை பசியில்லாமல் வாழச் செய்த புண்ணியமும் உங்களை வந்து சேரும்*

 

🌷 🌷🌷 🌷  May be an image of 3 people, temple and the Charminar 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹