பக்கங்கள்

எண்ணெய் குளியல் முக்கிய காரணம்....

 May be an image of 2 people, people smiling and text that says "எண்ணெய் குளியல் ஆண்களுக்கு ஞாயிறு எண்ணெய் குளியல்- இருதயத்தில் தாபம் திங்கள் எண்ணெய் குளியல்- -பொழிவு தரும் மேனி செவ்வாய் எண்ணெய் குளியல் -அற்பாயுள் புதன் எண்ணெய் குளியல் செல்வநிலை மேலோங்கும் வியாழன் என்ணெய் குளியல் தாண்டவம் ஆடும் வெள்ளி எண்ணெய் குளியல்- -ண்களுக்கு ஆபத்தை தரும் சனி எண்ணெய் குளியல்- தீர்க்காயுள் தரும் பெண்களுக்கு செவ்வாய் எண்ணெய் குளியல் - பாக்ய விருத்தி தரும் வெள்ளி எண்ணெய் குளியல்- சளபாக்கியவதியாக வாழ்வார்கள் தரித்திரம் 圓 Helo"

இது ஒரு எச்சரிக்கை பதிவு.....

தீபாவளி ,
31 10  2024, வியாழக்கிழமை.....

 மேலே உள்ள போஸ்ட் எண்ணெய்  குளியலைப் பற்றியது. இன்றைய தலைமுறையினரிடையே எண்ணெய் தேய்ப்பு குளியல் என்றால் முகத்தை சுளிக்கின்றார்கள். இது இருபாலருக்கும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றது. இன்று நம்மிடையே

 உலவும் பெரும்பாலான நோய்களுக்கு

எண்ணெய் குளியல் இல்லாமையே முக்கிய காரணம்.
அது பற்றி தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....
தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? அதனால் கிடைக்கும் நன்மைகள்  என்னென்ன? – News18 தமிழ்
 உடலின் மூன்று தோஷங்களை சீராக்கும் எண்ணெய் குளியல்.....!

நாம் மறந்துபோன பழக்கங்களில் எண்ணெய் குளியலும் ஒன்று. தீபாவளி அன்று மட்டும் பலர் எண்ணெய் குளியலை  கடமையே என்று நிறைவேற்றுகிறார்கள்.

😟😮😟😮😟

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது. எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய்க் குளியல் - Health and Beauty Monthly : Health and Beauty Monthly
=======

 ஆயுர்வேத மருத்துவத்தின்படி எண்ணெய் குளியல் வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான அளவில் இருக்க உதவுகிறது.

=======

 உடல் உள்ளுறுப்புகளின் சூட்டைத் தணிக்கவும், உடல் உறுப்புகள் நன்கு செயல்படவும் எண்ணெய் குளியல் உதவுகிறது.

உடலில் என்ணெய் தேய்த்துக் குளிப்பதால், சருமத்தின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு 'லிம் ஃபாட்டிக்ஸ்' என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லிம் ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு என்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. உடல் வெப்பமடையும்போது மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படும்.

 குளியல் முறை:

 எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக்கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை,  தலை முதல் உள்ளங்கால் வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள் மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும்.
Read all Latest Updates on and about Oil
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும். முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்ச்சியான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை  சேர்த்துக் கொள்ளலாம்.

உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்ச்சி ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.

நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காக பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால் உடல் பழகிவிடும் . மேற்கூறிய தொந்தரவுகள் விலகி விடும்.

 எண்ணெய் குளியலின் நன்மைகள் :

 எண்ணெய் குளியல் முடி உதிர்வைக் குறைக்கும், பார்வை பலப்படும், முதுமையைத் தாமதப்படுத்தும், ஆயுட்காலத்தைக் கூட்டும், சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவும், உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும், உள்ளுறுப்புகள் தங்கள் செயல்களைச் சிறப்பாகச் செய்யும், நல்ல தூக்கத்தைத் தரும், உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பாற்றலுடனும் வைத்திருக்கும்.

 ஆண்களுக்கு

புதன்கிழமையும் சனிக்கிழமையும் எண்ணெய் குளியலுக்கு உரிய நாளாக  இருக்கிறது. மற்ற நாட்கள் உகந்ததல்ல.

எண்ணெய் தேய்த்து குளித்தலில் பெண்களின் முக்கிய பங்கு.....

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. மேலும் செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள்  எண்ணை தேய்த்துக் குளித்தல் நலம்.
எண்ணெய் குளியல் பயன்கள் | Hindu oil bath days in Tamil
ஒரு வீட்டில் செல்வமும், வளமையும் நிறைந்திருக்க அந்த வீட்டின் பெண்கள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். செல்வங்களுக்கும், சுக போகங்களுக்கும் அதிபதியாகவும், பெண்களின் அழகு, வசீகர தன்மைக்கும் காரகனாக “சுக்கிர பகவான்” இருக்கிறார். மேலும் தேவர்களில் அனைத்து இன்பங்களுக்கும் அதிபதியாக இருக்கும் இந்திரனுக்குரிய தினமாகவும் வெள்ளிக்கிழமை இருக்கிறது. எனவே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதால் இந்த இரு தேவர்களின் அருளாசிகளும் பெண்களுக்கு கிடைத்து இல்லத்தில் சுபிட்சம் பொங்கும். பெண்களின் அழகு கூடும், முகம் பொலிவு பெற்று வசீகரம் உண்டாகும். இளமை தோற்றம் நீடிக்கும்.

 எனவே .....

 ஆண்கள் புதன்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

 இதற்கு விதிவிலக்காக ஆடி ஒன்றாம் தேதியும் தீபாவளி மற்றும் உள்ளூர் பண்டிகைகளும் எந்தக் கிழமை வந்தாலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
இதனால் எந்த பாதிப்பும் வராது.

இனியாவது தொடர்ந்து எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பெறுவோம்.

தெரிந்து கொள்வோம்......

🙏🙏🙏🙏🙏

ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 


🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹