பக்கங்கள்

எளியவர்கள் விற்கும் பண்டங்களை விட ஆரோக்கியமான தீனி.....

 May be an image of 2 people

மாலை நேர ஆரோக்கிய இடைதீனிகள்
மதுரையில் மாலை 5 மணிக்கு எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை 
 
ஆனால் மதுரை நகரத்தின் ஒவ்வொரு திசையில் இருந்தும் தள்ளுவண்டிகள் நகரத்திற்குள் நுழைய தொடங்கும்.
அவரவருக்கு என ஒரு நிரந்தர இடம் இருக்கும்,
கச்சிதமாக அங்கே சென்று இந்த வண்டிகள் நின்றுவிடும்.
 
அவித்த மரவள்ளிக்கிழங்கு,
 
சக்கரவள்ளிக்கிழங்கு,
 
மக்காச்சோளம் சுட்டது,
 
மக்காச்சோளம் ஆவியில் வெந்தது
அவித்த பாசிப்பயிறு, 
 
சுண்டல், 
 
பட்டாணி
வெள்ளச்சுண்டல், 
 
கீத்து கீதாய் வெட்டிய மாங்காய்- 
 
அன்னாச்சிப்பழம், 
 
வெள்ளரிக்காய் 
 
நிலக்கடலை வறுத்தது
 
நிலக்கடலை அவிச்சது
 
என இவர்களின் தள்ளுவண்டிகளில்
ஐட்டங்கள் கூடிக் கொண்டே செல்வதை
நான் பார்த்து வருகிறேன். 
 
90களில் இந்த வண்டிகள் எப்பொழுதும் தெருவிளக்குகளின் அருகில் தான் நிற்கும்,
 
ஆனால் மெல்ல பெட்ரோமாக்ஸ் விளக்கு வந்தவுடன் இந்த வண்டிகள் வியாபாரம் நடக்கும் இடங்கள் நோக்கி நகரவும் தொடங்கின. 
 
இன்று இந்த வண்டிகள் அனைத்திலும் பேட்டரியும் அத்துடன் பொறுத்தப்பட்ட LED விளக்குகளும்... 
 
இந்த வண்டியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இடைத்தீனிகளை மிளிரச் செய்கிறது.
 
மதுரையில் உழைத்து கிடப்பவர்கள்
மதியம் 2 மணிக்கு சாப்பிட்டால்
அடுத்து கடையை அல்லது வேலையை
முடித்து விட்டு இரவு 10-11 மணிக்கு தான் வீட்டில் சென்று சாப்பிட முடியும்
அப்படி நடுவில் ஒரு இடைதீனியாக
இந்த வண்டிகள் அவர்களின் பசியை போக்க உதவுகிறது.
 
இந்த வண்டிகளிலேயே வித்தை காட்டுபவர்கள்
பலர் கடந்த 20 ஆண்டுகளில் வந்துவிட்டன,
மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் அவித்த பயிறுகள் மட்டுமே விற்கும் அண்ணன் ஒருவர் இருந்தார், 
 
அவரது வண்டிக்கு என்று தனியான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். 
 
அவரை போன்றவர்கள் இந்த வண்டிகள் மீதிருந்த மரியாதையை கூட்டி விட்டன,
அவரது வண்டியும் பொருட்களுமே பார்பதற்கே அவ்வளவு அழகாக, பளிச்சென இருக்கும்.
இன்று வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தங்கள்..
 
மீனாட்சி பேருந்து நிலையம்
மாட்டுதாவணி பேருந்து நிலையம்,
அண்ணா பேருந்து நிலையம்
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்று
எல்லா இடங்களிலும் மாலை 4 அல்லது 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பார்க்கலாம்.
 
இந்த எளியவர்கள் விற்கும் பண்டங்களை விட ஆரோக்கியமான தீனிகள் கிடைக்கிறதா என்ன?? 
 
இருந்தால் சொல்லுங்களேன்....

Mantras and Miracles

 

🌷 🌷🌷 🌷 May be an illustration of 1 person  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹