பக்கங்கள்

🌹மாமன்னர்கள் வீரசிவாஜியும் மோடிஜியும்.சக்தி முத்தரையர் கிட்டதட்ட ஆயிரம் வருடங்களாக இந்தியா

 210 Shivaji Raje ideas in 2023 | shivaji maharaj hd wallpaper, shivaji  maharaj wallpapers, hd wallpapers 1080pVeer Shivaji Wallpapers - Wallpaper Cave

 

🌹இது நீண்ட பதிவாக நினைக்காமல் வரலாறு தெரிந்துக் கொள்வோம்.
 
🌹மாமன்னர்கள் வீரசிவாஜியும் மோடிஜியும்.சக்தி முத்தரையர்
கிட்டதட்ட ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் இந்து அரசு இல்லை, ஆங்காங்கே இருந்த இந்து அரசர்களும் மொகலாயர் எனும் ஆப்கானிய மதம்மாறிய இஸ்லாமிய வம்சத்துக்கு அடிமைளாகக இருந்தனர்
 
🌹தென்னிந்தியாவில் நாயக்க அரசுகள் எழுந்து ஒடுங்கியிருந்தன, தென்னிந்தியா பாமினி சுல்தானின் வாரிசுகளான ஐந்து சுல்தானியங்களுக்கு அடிமைபட்டிருந்தது
🔴LIVE : காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி உரை | Kashi Tamil Sangamam |  Narendra Modi | IBC Live - YouTube
 
🌹இதில் பிஜப்பூர் சுல்தானியம் வலுவானது மலையாளத்தையும் தமிழகத்தையும் கட்டுபடுத்தியிருந்தது
 
🌹தேசம் முழுக்க 16ம் நூற்றாண்டில் ஆப்கானிய ஈரானிய வம்சங்களின் அடையாளமான பச்சைகொடி உரக்க பறந்தது, தேசம் முழுக்க இந்துக்கள் அடையாளமும் மதமும் சிந்தனையும் குறுகிகொண்டே வந்தன‌
 
🌹காசியும் மதுராவும் முழுக்க மாறியிருந்தன, இந்தியா முழுக்க சமஸ்கிருதம் மறைய தொடங்கியிருந்தது சக்தி முத்தரையர்
 
🌹இந்துக்கள் மதமும் ஆலயமும் பெரும் செல்வத்தின் அடையாளங்கள் அனுதினமும் பெரும் செலவில் பூஜையும் மாதமெல்லாம் பெரும் செலவில் கொண்டாட்டமும் நடப்பவை என்பதால் அந்நிய ஆட்சியில் அவை சீரழிய தொடங்கின‌
 
🌹அரசு கவனம் செலுத்தாத அல்லது அரசன் விரும்பாத மதம் நிலைக்காது, அரசவையில் நிலைக்கும் மதம் மட்டுமே வாழும் என்பது உண்மையாகி கொண்டிருந்தது
 
🌹சீனாவில் புத்தமதத்தால் இந்துமதம் அழிந்தது போல, எகிப்திலும் மெசபடோபியாவிலும் அதன் பண்டைய மதம் அழிந்தது போல, ரோமிலும் கிரேக்கத்திலும் கிறிஸ்தவம் அவர்கள் பண்டை மதத்தை தடமின்றி அழித்தது போல‌
 
🌹ஏன் அமெரிக்க கண்டத்து செவ்விந்தியர், மாயன்களை கிறிஸ்தவம் அழித்தொழித்து புதைத்தது போல இனி இந்துக்களும் அழிவார்கள் இந்துமதமும் அழியும் என்ற நிலை வந்தது
 
🌹இக்காலத்தில் கிறிஸ்தவ கும்பல்களும் பெருக ஆரம்பித்தன‌
 
🌹அந்த கொடுங்காலத்தில்தான் ஒரு தாய் தன் மகனோடு இந்து ராஜ்ஜியம் சுதந்திரமான இந்து ராஜ்ஜியம் பற்றி கனவுகண்டாள், ஷாஜகானுக்கும் பிஜப்பூர் சுல்தானுக்கும் இடையே இருந்த ஆதிக்க போட்டியிலும் இது நம் நாடு எனும் கனவில் வளர்த்தாள்
Shivaji statue in sea to cost Maharashtra Rs 3643.78 crore - India Today
 
🌹அவள் ஊட்டிய பாலிலும் கொட்டிய உணவிலும் இந்துமதமும் நாட்டுபற்றும் நிரம்பியிருந்தது
 
🌹அந்த மாதரசி ஜீஜாபாயின் மகன் மிக ஆச்சரியமான வகையில் குறுகிய காலத்தில் பெரிய இந்து ராஜ்ஜியத்தை நிறுவினான்
 
🌹சுமார் ஆயிரம் ஆண்டு அடிமைதனத்தை உடைத்து மராட்டியத்தில் சுயமான யாருக்கும் அடிமையில்லா தனி இந்துராஜ்ஜியம் அமைத்தான்
 
🌹அது ஆச்சரியம், மகா மகா ஆச்சரியம், இன்றுவரை நம்பமுடியா ஆச்சரியம்
 
🌹அன்றைய உலகின் வல்லரசும் மிக இறுக்கமானவன் என பெயர்பெற்றவனுமான மொகலாய அவுரங்கசீப்பை எதிர்த்து அவன் தனி இந்து ராஜ்ஜியம் கண்டதெல்லாம் இந்திய வரலாற்றின் பொற்காலம்
 
🌹அந்த இந்து ராஜ்ஜியம்தான் மொகலாயருக்கு பெரும் சவால் கொடுத்து போராடியது, அந்த போராட்டத்தில் சிவாஜியின் மகன்கள் கொல்லபட்டாலும் ஜீஜாபாயின் மறுபிறப்பான தாராபாய் அவுரங்கசீப்பை ஓட அடித்தாள்
 
🌹மாறி மாறி மராட்டிய மன்னர்களும் பெண் அரசிகளும் தீரா போரினை சுமார் 200 ஆண்டுகாலம் நடத்தினர்
 
🌹அந்த போரில் துணைக்கு வந்த வெள்ளையன் மொகலாயரை அடக்கி பின் சுல்தான்கள் உதவியுடன் இந்துக்களை அடக்கி பின் சீக்கியரை அடக்கி தேசத்தை கைபற்றினான்
 
🌹மொகலயாரை ஒழிக்க பிரிட்டிசாரை கூட்டு சேர்த்த மராட்டியர் பின்னாளில் தவறை உணர்ந்தாலும் சிவாஜியின் இந்து எழுச்சி சுதந்திர போராக வெடித்தது
 
🌹1857 சிப்பாய் கலகம் என வெள்ளையன் சொன்னாலும் அது சிவாஜியின் மராட்டிய பேரரசு செய்த யுத்தம், அந்த ஜான்சிராணி மராத்திய இந்து அரசில் ஒரு அங்கம்
 
🌹அந்த இந்து எழுச்சியினை ஆங்கிலேயன் ஒழித்து காந்தி எனும் தன் அபிமானி மூலம் அஹிம்சா என இந்தியரை திசை திருப்பி அவர்கள் போர்குணத்தை குறைத்தாலும் பின் வெள்ளையனின் காங்கிரஸ் "மத நல்லிணக்கம் பேசினாலும்" அந்த காங்கிரசின் பலவீனத்தால் இத்தேசம் உடைந்தாலும் மறுபடி அந்த எழுச்சி எழும்பிற்று
 
🌹சிவாஜியின் சிந்தனைதான் விவேகானந்தருக்கு வந்தது, விவேகானந்தரின் சிந்தனைதான் இந்துத்வா அமைப்புகளுக்கு வந்தன, அதில்தான் ஆர்.எஸ்.எஸ் முதல் எத்தனையோ சபைகள் உருவாயின‌
 
🌹அவைதான் இன்று தேசத்தில் பாஜகவினை நிறுத்தியிருக்கின்றன, அதில்தான் சோமநாதபுரி ஆலயம் எழும்பி ராமர்கோவில் எழும்பி, இன்று காசி ஓரளவு மீண்டு, காஷ்மீர் மீண்டு தேசம் மாபெரும் அதிசயத்தை கண்டு கொண்டிருக்கின்றது
 
🌹நிச்சயம் சிவாஜி என்றொருவன் வராமல் போயிருந்தால் இந்தியா இப்பொழுது இந்து நாடாய் இருந்திராது
 
🌹ஆப்கானுக்கு வடக்கே தஜிகிஸ்தான் , கிர்கிஸ்தான் இருப்பது இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக நிச்சயம் மலர்ந்து திசைமாறியிருக்கும்
 
🌹உலகில் அழிந்துவிட்ட எகிப்து, ரோம், கிரேக்க மதங்களை போல இந்துமதமும் தடம் தெரியாமல் அழிந்திருக்கும்
 
🌹அந்த சிவாஜி வந்து அதனை முறியடித்து இந்துமதத்தை நிறுத்தினான் இந்திய விடுதலை தீயினை பற்றவைத்து எரியவிட்டான்
 
🌹உண்மையில் இந்திய சுதந்திரம் வெள்ளையனிடம் இருந்து கிடைத்தது என்பதெல்லாம் வரலாறு அல்ல, சிவாஜி தொடங்கி வைத்த அந்த யுத்தம் 1947ல் முடிந்தது என்பதுதான் நிஜம்
 
🌹அது 1990க்கு பின் கலாச்சார புரட்சியாகி இன்று தேசம் மாபெரும் அடையாளங்களை மீட்டு தன் பழமையினை தக்கவைத்து கொண்டது
 
🌹எகிப்து முதல் எத்தனையோ பண்டைய கலாச்சாரம் அழிந்த நிலையில் சிவாஜி எனும் அவதாரம் மூலம் இந்துமதம் மீண்டது, நிச்சயம் அது அதிசயம்
 
🌹இன்று அவனின் நினைவுநாள்
 
🌹1680ம் ஆண்டு தன் மரணபடுக்கையில் அவன் சொன்ன வார்த்தைகள் சாகாவரம் பெற்றவை
 
🌹ராய்காட் கோட்டையில் கடும் காய்ச்சலில் வாழ்வின் கடைசி நொடியில் கிடந்தான் அந்த சிவாஜி, தன் குருநாதரை மனமார நினைத்தும் அவர் வராமல் போனதில் அவனுக்கு முடிவு தெரிந்தது
 
🌹ஒரு கையில் தன் தாயின் சேலையினை தன்னோடு அணைத்து கொண்டவன் இன்னொரு கையால் அன்னை பவானி கொடுத்த வாளை மார்போடு சேர்த்து கொண்டு தன் இறுதி வரிகளை சொன்னான்
 
🌹"இந்துஸ்தான கண்மணிகளே,
 
🌹பலநூறு ஆண்டுகால அடிமைதனத்தை ஒழித்து அரும்பாடுபட்டு நான் இந்த இந்து ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தேன், இன்று உலகில் சுதந்திரமான இந்து நாடு இதுதான்
 
🌹ஆனால் இது வெறும் தொடக்கம், நாம் இன்னும் பலநூறு மைல் தூரம் செல்ல வேண்டும். சோமநாத் ஆலயம், காசி, ஹரித்துவர், மதுரா, காளிகட்டம் என நாம் மீட்டெடுக்க வேண்டியது நிறைய உண்டு
 
🌹நான் இனி உங்களோடு இருக்கமாட்டேன் என யாரும் கவலையுற வேண்டாம், நானும் என் அன்னையும் மாறி மாறி பிறப்போம், இத்தேசத்துக்கும் இந்துமதத்துக்கும் அச்சுறுத்தல் வரும்பொழுதெல்லாம் பிறந்து வருவோம்
 
🌹என் இந்துமக்களே, ஒரு அடிமையாய் பிறந்து சுதந்திரமான இந்து அரசனாய் சாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி, அதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும், என் மதம் வாழ்கின்றது, என் மண் சுதந்திரமாயிருக்கின்றது அது போதும்
 
🌹ஆனால் என் மக்களே நீங்கள் அப்படி இராதீர்கள், பெருங்காவலான நான் சரிந்தபின் அவுரங்க்சீப் மிகபெரிய மூர்க்கத்தை காட்டுவான், இந்த அரசின் ஒரு கல் கூட மிஞ்சாதபடி வெறியில் அடிப்பான்
 
🌹என் வம்சமே வேறற்று போகும் , என் வம்சத்தை அழித்தால் இந்து எழுச்சி அடங்கும் எந்த இந்துவும் எழமாட்டான் என்பது அவன் எண்ணம்
 
🌹நான் என் வம்சத்தை நம்பவில்லை, நான் இந்த அரசை என் குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் ஸ்தாபிக்கவில்லை, இதனை இந்து மக்களுக்காக ஸ்தாபித்தேன்
 
🌹அதனால் எது நடந்தாலும் தொடர்ந்து போராடுங்கள்
 
🌹ஒன்றுமட்டும் நினைவில் வையுங்கள், இந்துஸ்தானத்தில் இந்துக்களின் உரிமையும் போர்குணமும் தவிர எதுவும் நிரந்தமில்லை, நம் சிவனும் அன்னையும் தவிர எல்லாம் மாறும்
 
🌹இங்கு எல்லைகள் மாறும், கோட்டைகள் மாறும் எல்லாம் நொடியில் மாறும். அதனால் மொகலாயர் என்ன எழுந்தாலும் அஞ்சாதீர்கள் நொடியில் நிலை மாறி அவர்கள் வீழ்வார்கள்
 
🌹நான் சோமநாதபுரியினை மீட்டெடுத்து, காசியினை மீட்டெடுத்து, என் குருநாதர் வணங்கிய ராமனின் அயோத்தியினை மீட்டெடுத்து இத்தேசத்தை பூரண இந்து தேசமாக மாற்ற கனவு கண்டவன்
 
🌹கன்னியாகுமரி ஷேத்திரத்தில் இருந்து இயமயத்தில் வாழும் வைஷ்ணவா தேவி வரைக்கும் பெரும் இந்து அரசு எழ விரும்பியவன் ஆனால் அடிக்கல் இடும் வாய்ப்புமட்டும் எனக்கு கிடைத்தது, இனி உங்களோடு போராட என் வாளையும் நான் ஏற்றிய நெருப்பினையும் விட்டு செல்கின்றேன்
 
🌹ஒவ்வொரு இந்துவும் என்னை நினைக்கும்பொழுது அவனுள் நான் இறங்குவேன், நானும் என் அன்னையும் காலம் காலமாக பிறப்போம், உங்களோடு இருந்து இந்த தேசத்தை காத்து கொண்டே இருப்போம்
 
🌹சனாதானதர்மத்துக்கு சவால் விடலாம், அதை முடக்க நினைக்கலாமே தவிர அழிக்க முடியாது. அது சரியான நேரத்தில் சரியான ஆள் மூலம் அது மேல் எழுந்து நிற்கும்
 
🌹அன்னை பவானி எனக்கு கொடுத்த ஆசியினை உங்களுக்கு கொடுக்கின்றேன், காசியினையும் இத்தேசத்தின் இதர ஷேத்திரங்களையும் மீட்க நான் மறுபடி வருவேன்
 
🌹என் குருநாதர் சொன்னபடி என்னை வென்றவனும் இல்லை கொன்றவனும் இல்லை எந்த கோட்டையும் ஆயுதமும் என்னை முடக்கவுமில்லை, காலம் என்னை அழைக்கின்றது சென்றுவிட்டு அடுத்தகட்ட போருக்கு மறுபடி பிறந்து வருவேன்"
 
🌹என சொன்னவன் ஜெய் மகாதேவா, ஜெய் பவானி என உரக்க முழக்கமிட்டான்
 
🌹அவன் வாய் அம்மா கடைசியாக அழைத்து உலரதொடங்கியது, இந்துஸ்தானம் காக்க வந்த ஆன்மா அடுத்த பிறவிக்காக அந்த உடலை விட்டு நீங்கியது
 
🌹10 வயதில் தொடங்கிய அந்த உடலின் பெரும் போராட்டம், ஒருவேளை உண்டு இரு மணிநேரம் மட்டும் உறங்கி ஒரு நாளைக்கு சுமார் 200 கிமீ தூரம் மலையிலும் காட்டிலும் போரிலும் ஓடி ஓடி போராடிய அந்த உடலுக்கு ஓய்வு கொடுத்து அடுத்த உடல் தேடி அந்த ஆன்மா பறந்தது
 
🌹அது பின் பல வடிவில் வந்தது, இப்பொழுது அந்த தேசாத்மா, இந்து ஆத்மா கண்ட கனவின்படி ராமர்கோவிலும் காசியும் மோடியால் துலங்கிக் கொண்டிருக்கின்றன‌
 
🌹அதை கண்டு மகிழும் அந்த ஜீஜாபாய் ஆத்மாவும் சிவாஜி ஆத்மாவும் கங்கை கரையில் மகிழ்ந்து கொண்டே இன்னும் செய்யவேண்டிய காரியங்களுக்காய் அடுத்த பிறப்பு எடுக்க தயாராகின்றன‌.
மாவீரன் சிவாஜியின் மறுரூபமாக ஒரு தாயின் மகன் மோடி இந்த நாட்டை சனாதன தர்ம வழியில் வழிநடத்துகிறார்.
 
🌹நாட்டுக்காய் இந்துமதத்துக்காய் வாழவந்த ஆத்மாக்களுக்கு ஓய்வே இல்லை, அவை பூரண இந்துத்வா காலம் வரை பிறந்து கொண்டேதான் இருக்கும்
 
🌹ஜெய் மகாதேவா என அது முழங்கி போராடி கொண்டேதான் இருக்கும்.. 🙏
🙏 
 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி இணையம்🙏உமா ராணி FB
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏May be an image of 3 people, temple and text