பக்கங்கள்

ராணா பிரதாப்!

 


விசித்திரமான ராஜபுத்திரமன்னர் இவர்.

அரியணை ஏறியபோது தலைநகர் இல்லை படையில்லை செல்வம் இல்லை ஆனாலும் அக்பரை எதிர்த்தார்!

தலைநகரம் வியாபார நகரம் என் அத்தனையையும் இழந்து காடுகளில் வாழ்ந்தபோதும் மக்கள் இவரிடமே வரி செலுத்தினர்!

லட்சம் பேர் கொண்ட அக்பரின் படைகளை சிலஆயிரம் வீர்களுடன் எதிர்த்து இவர் தோற்றதை ராஜபுதனமே கொண்டாடியது!


மேவார் ராஜபுதனத்தின் அத்தனை இனங்களும் தங்கள் தலைவரை போரில் இழந்தாலும் ராணாவை மட்டும் அவர்கள் இழக்கவில்லை!

அக்பரால் இவரை கொல்ல அனுப்பப்பட்ட சக்திசிங் இவரை கண்டதும் வணங்கி நின்றான்!

ஜாலா தன உயிரைக்கொடுத்து இவரது உயிரை காத்தான்!

அக்பரது அவையிலே இருந்த ராஜபுத்திர கவிஞன் ராணா உங்கள் மானம் எங்கள் உயிர் என்று கவிதை எழுதி உங்க புகழ்பெற்றான்!


இறுதியில் ஒருபடைவீரனுக்குக்கூட சம்பளம் கொடுக்க இயலாதநிலைக்கு ராணா வர, நாட்டின் அத்தனை பிரபுக்களும் சேர்ந்து தங்கள் சொத்துக்களை கொடுத்து மறுபடியும் படை திரட்டி தலைநகரை கைப்பற்றவைத்து முகலாயாரை நிலைகுலைய வைத்தனர்.

இதையெல்லாம் வரிசைப்படுத்தி எழுதிய ஆங்கில சரித்திர ஆசிரியர் இப்படி முடிக்கிறார் :

செல்வம் இல்லாத

அரண்மனை இல்லாத

படைகள் கூட இல்லாத இந்த ராணாவிடம் என்ன இருந்தது என்று ஒரு நாட்டின் மொத்த மக்களும் உயிரைக்கொடுக்க தயாராயினர்?

அவரிடம் இருந்தது உண்மையான வீரம்.

நேர்மை தன் நாட்டை ஒருநாளும் கைவிடாத உறுதி!

முகலாய பயங்கரவாதி அக்பருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராணா பிரதாப் மஹாராஜின் புண்யதிதி இன்று!

 

 நன்றி இணையம்