பக்கங்கள்

கண்களால் நான்கு பேருக்கு

 





 

#புனித்ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு கிடைத்த பார்வை

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.


கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று (அக்.,31) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு கண்களை தானமாக வழங்கி இருந்தார்.

தானமாக வழங்கப்பட்ட அவரின் கண்களை நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங்கஷெட்டி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். வழக்கமாக கண்களை அதிகபட்சம் இருவருக்கு தான் பொருத்த முடியும். ஆனால், புனித் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

இது குறித்து புஜங்கஷெட்டி நேற்று கூறியதாவது: இரண்டு கண்கள், இருவருக்கு தான் பொருத்தப்படும். ஆனால், புனித்தின் கண்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நால்வருக்கு பொருத்தியுள்ளோம். அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டினோம். 'கார்னியா' எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தினோம்.

நாங்கள் மேற்கொண்ட முயற்சியே வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளோம். புனித்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. கண்கள் பொருத்தி கொண்டவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரு பெண், மூன்று ஆண்கள் என நான்கு பேரும் கர்நாடகாவை சேர்ந்த இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 30ல், நாள் முழுவதும் மருத்துவர்கள் தீவிர முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராஜ்குமாரும், அவரது மனைவி பர்வதம்மாவும் 1994ல், முதல் முறையாக நாராயணா நேத்ராலயாவில் கண் தான வங்கி துவக்கி வைத்தனர். 2006ல், ராஜ்குமார் இறந்த போது அவரது கண்களும்; 2017ல் பர்வதம்மா இறந்த போது அவரது கண்களும் தானம் செய்யப்பட்டது. பெற்றோர் போன்று புனித்தும் கண்களை தானம் செய்தார். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புனித் இறந்தபிறகுதான் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் நமக்கு தெரியவருகின்றன. விளம்பரம் தேடிக்கொள்ளாத ஒரு சிறந்த மனிதர் புனித்.

மென்மையான, கர்வம் இல்லாத எளிமையானவர் ராஜ்குமார். அவர் மகன்களும் அப்படியே. புகழுக்கு அழிவில்லை .

உண்மையான மக்களின் நட்சத்திரம் திரு. புனீத் ராஜ்குமார் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..

 


நன்றி இணையம்

மாபெரும் மாற்றத்திற்கான

 



ஒரு மாபெரும் மாற்றத்திற்கான

முதல் அத்யாயத்தை பிரதமர் மோடிஜியின் தலைமையிலான இந்தியா உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது...!

ஆமாம் இந்தியாவின் ஆளில்லா,

ரகசிய, ஆயுதம் தாங்கிய விமானமான GHATAK கின் ஸ்கேல் மாடல் swift ஐ இந்தியா வெற்றிகரமாக சோதித்து கொண்டுள்ள நிலையில் அந்த விமானத்தை இந்தியா காட்சி படுத்தியுள்ளது..


Ghatak ஒர்ஜினல் விமானம் 2024 ல் சோதிக்க பட உள்ளது. அந்த விமானத்தில் மேட் இன் இந்தியா காவேரி இன்ஜின் பொருத்தபட உள்ளது..

படிப்படியாக இந்த தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று விட்டு, பின் அதில் டர்போரேம்ஜெட் இன்ஜினும் அடுத்த நிலையாக ஸ்கேரம் ஜெட் இன்ஜினும் பொருத்தி விட்டால் இந்தியாவின் கனவு ஆயுதமான குண்டுகளை வீசிவிட்டு வரும் ஹைப்பர் சோனிக் அவதார் விமானம் தயாராகி விடும்..

அனேகமாக அப்படி ஒரு விமானத்தை தயாரிக்கும் முதல் நாடு இந்தியாவாகதான் இருக்கும்.

காரணம் சீனா நாம்மை போல இன்னும் ஹைப்பர் சோனிக் வேகத்தை தரும் ஸ்ரேம்ஜெட் இன்ஜினை தயாரிக்கவில்லை.,

நமக்கு முன் தயாரித்த ரஷ்யாவிடமும் அப்படி ஒரு விமானத்தை உருவாக்கும் திட்டம் இல்லை.,

அமெரிக்காவோ அந்த தொழில்நுட்பத்தில் நமக்கு சற்று பின் தான் ஒடிக்கொண்டுள்ளது.


ஆக இதை எல்லாம் நடைமுறைப்படுத்தி உலகின் முதல் ஆயுதம் தாங்கிய ஆளில்லா ஹைப்பர் சோனிக் விமானத்தை தயாரிக்க சில பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அதன் முதல் கட்டம் தான் இந்த ஆளில்லா ரசசிய விமனத்தின் ஸ்கேல் மாடல் சோதனை. நிச்சயம் எதிராகால இந்திய விமனப்படையில் தாக்குதல் விமானங்களாக இருக்க போவது இந்த வகை ஆளில்லா விமானங்களே என்றால் அது மிகையல்ல.

இப்படி ஒரு மாபெரும் கனவு திட்டம்

2014 க்கு முன் பல ஆண்டுகளாக கிடப்பில் போட பட்டிருந்தது.. ஆனால் மோடி அரசு பதவியேற்ற உடன் இந்த திட்டத்திற்கு 3000 கோடி நிதி ஒதுக்கி, இந்த திட்டத்தை வேகப்படுத்தி, அதன் முதல் கட்டத்தை அருவடை செய்தும் விட்டது..

ஆக எதிர்கால இந்திய விமானப்படை உருவாக்க அதன் முதல் வெற்றியை நேற்று பெற்றுள்ளது பாரதம்..

ஜெய் ஹிந்த்..!

 


நன்றி இணையம்

*புனித்* - நம்மை யோசிக்க வைத்து !!!!

 



*புனித்*

=====

புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.

46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.


நேற்று இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.

எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது. massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்றே தெரிகிறது.

சும்மா நம் ஆறுதலுக்காக 'unhealthy lifestyle' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இறுதி நிமிடம் வரை புனித் 'fit as fiddle' ஆகத்தான் இருந்திருக்கிறார்.


வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள்.

உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை.

'Interval' கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'The End' கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!

இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. *இதில் positive ஆகச் சிந்திக்கவும் சில விஷயங்கள் உள்ளன*.

ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக் கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.

*பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ*

இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள். எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்து கூடப் பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.

*நிகழ்காலத்தில் வாழ்வது.*

மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத் திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம்.

*தொலையாத கவலைகள்*.

உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள். 'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். reality என்னவென்றால் 'they will be just fine!'. நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம்.'அழவா இங்கே வந்தோம்? ஆடு பாடு ஆனந்தமா!'

*பற்றின்மை:* பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.

*நன்றி உணர்ச்சி:* நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.

*not but not the least:* பகிர்ந்து கொள்ளுதல், உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக் கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு.

*கடவுள் நம்பிக்கை.* இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. 'காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்' என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. 'அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்' என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு 'This is but a scratch'!!!

*மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம்*. *அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு 'feel-good movie' யாக இருக்க வேண்டாமா?*

யோசிப்போம்!

 

நன்றி இணையம்