பக்கங்கள்

#கலங்காதே_மனமே!





தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

 சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் *ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

 பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

 உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

 அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

 இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

 தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை...

 ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

 பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

 மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

 கணவன் கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

 இருகைகளையும் வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

 கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் *ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

 மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் *சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

 பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் *பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

 கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் *தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

 நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் *மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

 சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் *கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*

(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*

(சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து...

நம்பிக்கை ஏற்பட்ட பின்... மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும்

*"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...

வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,

எதை இழந்தாலும்,

*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...

எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*விடாது நாம ஜபம் செய்வோம்...*

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால்

மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் பெற்றிடுவோம்.

RKS KuttiRaja

 

 





நன்றி இணையம்

தோல்வி என்றால்...என்ன ?

 




 

தோல்வி

என்றால் நீங்கள் தோற்றவர் என்று

பொருள் அல்ல. நீங்கள் இன்னும்

வெற்றி பெறவில்லை என்று

பொருள்.

 

தோல்வி

என்றால் நீங்கள் எதையுமே

சாதிக்கவில்லை என்று

பொருள் அல்ல. சில

பாடங்களைக் கற்றுக்கொண்டு

இருக்கின்றீர்கள் என்று

பொருள்.

 

தோல்வி

என்றால் நீங்கள் அவமானப்பட்டு

விட்டதாக பொருள் இல்லை.

முயன்று பார்க்கும் துணிவு

உங்களிடம் உள்ளது என்று

பொருள்.

 

தோல்வி

என்றால் வாழ்க்கை வீணாகி

விட்டதாகப் பொருள் இல்லை.

மீண்டும் ஆரம்பிக்க ஒரு

வாய்ப்புக் கிடைத்துள்ளது

என்று பொருள்.

 

தோல்வி

என்றால் விட்டு விட

வேண்டும் என்று பொருள்

அல்ல இன்னும் செம்மையாக

உழைக்க வேண்டும் என்று

பொருள்.

 

தோல்வி

என்றால் உங்களால் அடைய

முடியாது என்று பொருள்

அல்ல அடைய கொஞ்சம் காலம்

தாமதமாகலாம் என்று பொருள்.

 

தோல்வி

என்றால் கடவுள் உங்களைக் கை

விட்டு விட்டார் என்று

பொருள் இல்லை. உங்களுக்கு

வேறு நல்ல எதிர்காலத்தை

நிர்ணயம் செய்து வைத்து

இருக்கிறார் என்று பொருள்..

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து 

புதிய நாளை துவங்குங்கள்!  

காலை வணக்கம்



நன்றி இணையம்


பணத்தைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று

 


இந்தப் படத்தில் இருப்பவர்தான் ரூட்ஷெல்ட்.

பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.

 

பிரிட்டன்  அரசாங்கம்,

இவரிடமிருந்து கடனாகப் பெற்று,தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.

 

ஒரு நாள் தனது பொக்கிஷங்கள்  நிறைந்த, அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய காற்றில், திறந்து வைத்த கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.

 

அது ரகசிய அறை.

ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,

அதற்குள் செல்ல வேண்டும்.நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார்.பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.

 

பல நாட்கள் பசி ,

பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் ,

சுவற்றில் சில வரிகளை எழுதினார் ....

 

"நான் உலகில் ,மிகவும் உயர்ந்த மனிதனாக,

பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்"

 

அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.

 

பணத்தைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,

இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்.

 

படித்ததில் பிடித்தது.



நன்றி இணையம்