பக்கங்கள்

*உணவுமுறை பற்றி*

 




நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான்.

உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக் கண்டு பிடிக்கவே முடியாது.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

மனிதனுக்குப் பைத்தியம். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.


கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்..

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள். அந்த மிருகத்திற்கு என்னவாகிறது. அது கொல்லப்படும்போது? யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது. விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை. உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாகமாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொள்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

#அதன்_உடல்முழுவதும்_வன்முறை, #வேதனை_மரணஓலம்_பரவும்.

#அந்த_உடல்_முழுவதுமே_கழிவுகள்_விஷம்.

உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது. காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள். அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் இருக்கிறது. அந்த முழு சக்தியுமே விஷம்தான். பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது. அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது. நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை.

பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள்.

அதில் அழகு என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது.

எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

ஓஷோ💙

(மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 229 & 230)




  நன்றி இணையம்


நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள்

 



🌀 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

🌀 வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*

🌀 நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

🌀 மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*


🌀 பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்
குணம் இருந்தால் நீ *குப்பை.*
நடித்தால் நீ *நல்லவன்.*
உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*
அன்பு காட்டினால் *ஏமாளி.*
எடுத்துச் சொன்னால் *கோமாளி.*

🌀 இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.
பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்

🌀 நிலவை... தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.

🌀 சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
*சில வலிகள் இல்லாமல் இருக்க.*

🌀 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .
அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.
*அவர்களுக்கு புரியவைக்க.*
*வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*

🌀நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

🌀யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

🌀மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள். *

🌀இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.✓



 நன்றி இணையம்

#இராமர்_பாலம்_எழுந்த_நிஜ_வரலாறு.

 





#இராமர்_பாலம்_எழுந்த_நிஜ_வரலாறு.

#புனிதமான_சேதுபந்தனம் 🙏

ஆஞ்சநேயர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்று, சீதாதேவியைக் கண்டு மீண்டு வந்து, இராமபிரானிடம், "கண்டேன் கற்பினுக்கு அணியை" என்று கூறிய பின்னர், இனி சீதையை மீட்பதற்கு என்னச் செய்வது என்று அனைவரும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது சமுத்திரத்தைக் கடப்பதற்கு முதலில் சமுத்திர ராஜனிடம் அனுமதி பெறவேண்டும் என்று இராமர் முடிவெடுத்தார். எனவே தர்ப்பைப் புல்லைக் கடற்கரை மணலில் பரப்பி அதன் மீது படுத்திருந்து மூன்று நாட்கள் உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் சமுத்திர ராஜனை வேண்டி தவமிருந்தார் #ஸ்ரீராமபிரான்.

( இவ்வாறு ஶ்ரீராமர் தவமிருந்த இடம் #திருப்புல்லாணி என்று வழங்கப்படுகிறது. *திருப்புல் என்று மகிமையோடு கூறப்படும் தர்ப்பைப் புல்லையே தலைக்கு அணையாக வைத்து இராமபிரான் சயனித்திருந்ததால்).

இவ்வாறு மூன்று நாட்கள் கடுந்தவம் இராமர் செய்த பிறகும் சமுத்திரராஜன் அவருக்குக் காட்சிக் கொடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட இராமபிரான் 'எனது இராமபாணத்தை விடுத்து, இந்த சமுத்திரத்தையே வற்றச் செய்து நடந்தே இலங்கைக்குச் செல்வோம்' என்றார்.

தம்பி இலட்சுமணா! கோதண்டத்தை கொண்டு வா! என்று இராமபிரான் கடும் கோபத்தோடு சமுத்திரத்தில் பாணத்தைத் தொடுத்தார். அண்ணனின் சினத்தைக் கண்டு கடும் கோபக்காரரும், ஆதிசேஷனின் அவதாரமுமான இலட்சுமணர் பயம் கொண்டு நின்றார். சாந்த சொரூபியான நமது அண்ணனே இப்படி உருத்ரமூர்த்தி ஆகிவிட்டாரே? இதனால் என்ன ஆகுமோ? என்று கலங்கி நின்றார் இலட்சுமணர்.

இராமபிரான் *இராமபாணத்தை சமுத்திரத்தின் மீது ஏவியதும் சமுத்திரம் கலங்கியது. அதன் வெம்மை தாங்காது சமுத்திர நீர் சூடாக ஆனதால் அதிலிருந்த மீன்களும், சுறாக்கள், திமிங்கலங்கள் அனைத்தும் வெம்மை தாளாது சமுத்திரத்தை விட்டு வெளியே துள்ளி விழுந்தன. சுறாக்கள் திமிங்கலங்கள் என அனைத்தும் விண்ணில் தாவியதைப் போல் உயர எழுப்பி ச் சமுத்திரத்திலிருந்து துள்ளி குதித்தன. இராமபாணத்தின் வெம்மையைத் தாங்காது மலைகளும் ஆட்டம் கண்டன.

மீண்டுமொரு பாணத்தை எய்யப் போனார் இராமபிரான். அப்பொழுது அண்ணனின் பாதங்களில் விழுந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு தடுத்தார் இலட்சுமணர். அண்ணா! வேண்டாம்! தங்களது பாணத்தால் சமுத்திர நீர் சூடானதால் உலக உயிர்கள் அனைத்துமே நடுக்கம் கொள்கின்றன; அனைத்து உயிரினங்களும் தவிக்கின்றன; எனவே தாங்கள் சினத்தை விடுங்கள்! என்று கெஞ்சினார் இலட்சுமணர். ஆனால் ஆருயிர் தம்பி மன்றாடிய போதும், இராமபிரான் சினம் தணியாமல் அம்பை எய்ய போனார்.

இந்த சமுத்திரமே தங்களது முன்னோர்களான சகர புத்திரர்களால் உருவானதே. அப்படியிருக்க, நன்றிகெட்டு இந்தச் சமுத்திரராஜன் நடந்து கொள்கிறான்; அப்படிப்பட்டவனுக்கு தண்டனை அளிப்பது சரியானதே! என்றார் சுக்ரீவன். இராமர் பாணத்தை விட தயாரானதும், சமுத்திரராஜன் பதறித் துடித்து, அவர் முன் வந்து காட்சி அளித்தார். இராமபிரானை வணங்கியவாறு சமுத்திரராஜன் பேச ஆரம்பித்தார்.

ஐயனே! பஞ்சபூதங்கள் அனைத்தும் தத்தம் நிலமையில் மாறாது இருப்பதே இறைவனால் விதிக்கப்பட்டது. சமுத்திரமாக இருக்கும் நான் பெரும் ஆழம் கொண்டு, சுலபத்தில் என்னை யாரும் தாண்டி செல்லாத முடியாதவாறும் இருப்பதே எனக்கு விதிக்கப்பட்டது. நான் எனது நீரோட்டத்தை நிறுத்திவிட்டு, தாங்கள் அனைவரும் நடந்து செல்லும் விதத்தில் செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு நான் ஒரு உதவியைச் செய்கிறேன்.- என் மீது போடப்படும் கற்கள் அமிழ்ந்து போகாமல் நான் தாங்கிக் கொள்கிறேன்.

தங்களது வானர சேனையில் இருக்கும் நளன், தேவலோக சிற்பி விஸ்வகர்மாவின் மகன். எனவே அவரால் மிகத் திறமையாக சமுத்திரத்தின் மீது பாலம் அமைக்க முடியும். எனவே அவனைக் கொண்டு பாலம் அமைத்து நீங்கள் இலங்கைக்கு செல்லுங்கள். என் மீது போடப்படும் மரக்கட்டைகள், கற்கள் எதுவும் அமிழ்ந்து போகாமல் தாங்கிக் கொள்கிறேன்! என்றார் சமுத்திரராஜன்.

எனவே இராமபிரானும் சாந்தம் கொண்டு, கடலின் மீது பாலம் அமைக்க சிவபெருமானை நோக்கிப் பூஜை செய்தார். அவருக்குச் சிவபெருமானும் காட்சிக் கொடுத்தருளினார். எனவே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகனான நளன், நீலன் என்ற இன்னொரு வானர சிற்பியோடு இணைந்து, பிற வானரங்களின் உதவியுடன் பாலம் அமைக்க ஆரம்பித்தனர்.

சுக்ரீவனின் வானரச்சேனையில் ஜாம்பவான் என்ற கரடிகளின் தலைவரும் இருந்தார். ( உலகம் தோன்றிய போதே தோன்றியவர் ஜாம்பவான்; மிகவும் வல்லமையும் பராக்கிரமும் உடையவர். இந்த பூவுலகையே பலமுறை பறந்தே சுற்றி வந்த வல்லமை உடையவர். மிகப்பெரிய கரடிகளின் படைக்கு ஜாம்பவான் தலைவராக இருந்தார். அக் கரடிகளின் படையும் சுக்ரீவனின் வானரச்சேனையில் இருந்தது.)

வானரங்கள் பெயர்த்தெடுத்து வந்த பாறைகள் அனைத்தையும் இராமபிரானின் காலடியில் வைத்தன. ஶ்ரீராமபிரான் அதில் தனது பெயரை எழுதி கொடுக்க,அவற்றை நளனிடம் கொடுத்தன வானரங்கள். நளன், நீலன் என்ற வானர சேனையில் இருந்த முக்கிய கட்டடக்கலை நிபுணர்கள் இருவரும் சேர்ந்து பாலத்தை அமைத்தனர்.

"கடலில் பாலம் அமைப்போம்! இலங்கைக்குச் செல்வோம்! இராவணனைக் கொல்வோம்! அன்னை சீதாதேவியை மீட்போம்" .

_ என்று ஆனந்தமாகக் கூறிக் கொண்டே வானரங்களும், கரடிகளும் கற்களைச் சமுத்திரத்தில் போட்டன. இதனால் சமுத்திரத்தின் ஓசையையும், பாலம் அமைக்கும் ஓசை அமிழ்த்துவிட்டது.

வானரங்கள் சற்றும் தளராது உற்சாகமாக வேலை செய்வதைக் கண்ட இராமபிரானும், இலட்சுமணரும் மிகவும் மகிழ்ந்தனர். கடற்கரையோரத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து இருவரும் பாலம் அமைக்கும் பணியை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வனங்களில் இருந்த அணில்களுக்கு இராமபிரானின் கண்களில் தெரிந்தக் கனிவும், சாந்தமும் ஏதோ விவரிக்க இயலாத அன்பை அவர் மீது ஏற்படுத்தின. எனவே நாமும் இக் குரங்குகளின் பணியில் ஈடுபடவேண்டும்! என்று அந்த அணில்கள் நினைத்தன.

எனவே அந்த சமுத்திரத்து கடலலைகளில் புரண்டு விட்டு வந்த அணில்கள், கடற்கரை மணலில் புரண்டன. பின்னர் தனது உடலில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை, வானரங்கள் சமுத்திரத்தின் மீது போட்ட பாறைகளின் மீது உதிர்த்தன. தொடர்ந்து இந்த அணில்கள் இவ்வாறு செய்து கொண்டே இருக்க, இலட்சுமணர் மிகவும் வியந்தார்! அண்ணா! இந்த அணில்கள் செய்வதைப் பார்த்தீர்களா? என்றார்.

தம்பி! நானும் அதைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அணில்கள், நம் மீது கொண்டிருக்கும் அன்பைப் பார்த்தாயா? பாலம் அமைப்பதற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்கின்றன! என்றார் இராமபிரான். பிறகு கனிவோடு அந்த அணில்களை உள்ளங்கையில் தூக்கிப் பரிவோடு அதன் முதுகில் தனது மூன்று விரல்களால் வருடிக் கொடுத்தார் இராமபிரான். ஶ்ரீராமபிரானின் கை விரல்கள்பட்ட தடம் அப்படியே அணில்களின் முதுகில் பதிந்தன. இராமபிரானால் அன்போடு ஆசீர்வதிக்கப்பட்ட அவ்வகை அணில்கள் இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் இன்றளவும் அதிகம் காணப்படுகின்றன.

(ஆனால் அணில்கள், இராமர் பாலம் அமைப்பதற்கு உதவிய கதையானது, வால்மீகி இராமாயணத்தில் கிடையாது; இது மிகவும் பக்தி மயமாக எழுதப்பட்ட துளசிதாசரின் ராமாயணத்தில் உள்ள தகவல்).

மும்மூர்த்திகளுக்கும் மேலான

பரம்பொருளே, ஸ்ரீராமபிரானாக அவதரித்து வந்தார். அப்படியிருக்க அவரால் கடலின் மீது பாலம் அமைக்காமல், தனது சர்வ வல்லமையால் இலங்கைக்கு செல்ல முடியாதா? என நினைக்கலாம். தனுர் வேதத்தில்(வில்வித்தை) கரைகண்ட ஸ்ரீராமபிரானால் கடலின் மீது அம்புகளைக் கொண்டே பாலம் அமைத்து, அதன் மீது சென்றிருக்கலாமே ? எனவும் தோன்றலாம். கடலின் மீது பாலம் அமைத்து இராமபிரான் இலங்கைக்குச் சென்றதன் காரணம், சீதாதேவியை மீட்கும் புனிதப் பணியில் வானரங்கள், கரடிகள், அணில்கள் என பலதரப்பட்ட உயிர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே.

இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து கட்டப்பட்ட பாலமானது, நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் இருந்தது. (யோஜனை_அக்கால அளவீடு; தற்காலத்திய அளவின்படி 30 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது) இது இலங்கையில் இருந்த சுவேல மலை வரை அந்தப் பாலமானது சமுத்திரத்தின் மீது அமைக்கப்பட்டது.

முதலில் பெரிய மரத்துண்டுகளைக் கடலில் போட்டு, அதன் மீது பெரிய பாறைகளை போட்டு, அதன் மீது சிறிய பாறைகளை அடுக்கி, அதன் மீது சிறு கற்களைக் கொட்டி, அதன் மீது மணலைக் கொட்டி பாலத்தை அமைத்தனர் வானரங்கள். சமுத்திரத்திற்கு மேலே மூன்றடி உயரத்தின் மேலே பாலமானது அமைக்கப்பட்டது. இதுவே "சேதுபந்தனம்" என்ற இராமர் பாலம் அமைக்கபட்ட வரலாறு.(இது தனுஷ்கோடியிலிருந்து, தலைமன்னார் வரை அமைக்கப்பட்டது)

இராமர், கடலைக் கடப்பதற்கு முதலில் சமுத்திர ராஜனின் அனுமதியை வேண்டி மூன்று நாட்கள், தர்ப்பைப் புல்லின் மீது படுத்திருந்து உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் தவம் செய்தார். சமுத்திரராஜன் வரவில்லை! என்பதால், கடும் சினத்தோடு கடலை வற்றச் செய்து விடுவேன்! என்று அம்பெய்யப் போனபோதே, பயந்து வந்த சமுத்திரராஜனின் அறிவுரையின்படி, மரங்களையும், பாறைகளையும் கொண்டு சமுத்திரத்தின் மீது பாலம் அமைக்கச் செய்தார் இராமர். இதுவே இராமர் பாலம் எழுந்த வரலாறு. இராமர் பாலம்கட்ட ஆரம்பிப்பதற்கு முன்னர் விநாயகரையும், சிவபெருமானையும் வழிபட்டதாக வால்மீகிராமாயணம் கூறுகிறது.

#எது_நடந்த_வரலாறு ....?

எத்தனையோ இராமாயணங்கள் இருந்தாலும் வால்மீகி இராமாயணம் மட்டுமே இதிஹாசம். இதிஹாசம் என்றால் "இது இப்படி நடந்தது" என்று பொருள். தான் கண்ணால் கண்டவற்றை அப்படியே எழுதி வைத்த புனிதமான வரலாறே இராமாயணம். வால்மீகி முனிவர் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்த புனிதமான வரலாற்றை நாரதர் கூற, அவற்றை அப்படியே வால்மீகி முனிவர் எழுதிவைத்தார். எனவே வால்மீகிராமாயணம் மட்டுமே நடந்த வரலாறு.

#புனிதமான_பாலம்_நளசேது

இராமர், பாலம் கட்டும் முன்பு அவருக்கு அருள் செய்தவர்கள் விநாயகரும், சிவபெருமானும் மட்டுமே. இராமர், சீதையை மீட்டு, விபீஷணனின் புஷ்பக விமானத்தில் திரும்பி வரும்பொழுது, அந்த சேதுபந்தனத்தைச் சீதைக்குக் காட்டி இராமர் இவ்வாறு கூறுகிறார்__

" பிரிய சீதா! உலகிலேயே மிகவும் புனிதமான இடம் இந்தச் சேது பந்தனம், இதைக் கட்டுவதற்கு முன்னர் சிவபெருமான் எனக்கு அருள் செய்தார். இதைத் தரிசிப்பவர்கள் அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர். இந்த இடத்தில் ஒரு முறை நீராடுபவர்களின் அனைத்து பாபங்களும் விலகி முக்தி அடைவர்" என்று இராமபிரான் கூறியதாக வால்மீகி முனிவர் கூறுகிறார்.

(இராமாயணத்தில் இராமர் பாலம், *நளசேது என்றும், *சேதுபந்தனம் என்றும் குறிப்பிடப்படுகிறது).

வால்மீகிராமாயணத்தில் #இராமேஸ்வரம் பற்றிய தகவல் கிடையாது. "கந்தமாதனபர்வதம்" என்ற இராமேஸ்வரம் பற்றிய தகவலோ, அந்த இடத்தில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை, இராமபிரான் வழிபட்ட தகவலோ கிடையாது; அது துளசிதாசரின் இராமாயணத்தில் உள்ளது. ஆனால் "உன்னை சிறைமீட்கக் கடலின் மீது கட்டப்பட்ட இந்தச் #சேதுபந்தனம் மிகவும்புனிதமான இடம்" என்று சீதையிடம் கூறுகிறார் ஶ்ரீராமசந்திர மூர்த்தி! வால்மீகி ராமாயணத்தில்.

அந்தச் சேதுபந்தனம் கட்டி முடித்தவுடன், விண்ணில் அனைத்து தேவர்களும், சிவபெருமானும், பிரம்மதேவரும் கூடி நின்று மலர்களைத் தூவி, இந்தச் சேதுபந்தனம் (இராமர் பாலம்) உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்! என்றென்றும் இது உனது மகிமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும், மிகவும் புனிதமான இடமாக இந்தப் பாலம் விளங்கும்! என்று ஆசி வழங்கியதாகவும்; உனது புகழ் இந்தப் பிரபஞ்சம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்! இராமா! என்று சிவபெருமான், இராமபிரானை ஆசீர்வதித்ததாகவும் வால்மீகி முனிவர் கூறுகிறார்.

அத்தகைய மகிமைமிக்கது *சேதுபந்தனம் கட்டிய நிகழ்வு. இன்றளவும் கடல் ஆராய்ச்சியாளர்களால் "இராமர்பாலம்" வியந்து நோக்கப்படுகிறது. *துவாபர யுகம், *கலியுகம் என்ற இரண்டு யுகங்களைக் கடந்தும் *இராமர் பாலம்* இன்றளவும் நிலைத்து நிற்கிறது! என்றால், அது எத்தனை திறமையுடனும், வலிமையுடனும் கட்டப்பட்டிருக்க வேண்டும்......?

*சேதுபந்தனம் என்கிற #இராமர்பாலம் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் மகிமையை உலகிற்கு இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

#ஜெய்ஶ்ரீராம் 🙏

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

(எனது பதிவுகளில் என் பெயரை நீக்கிவிட்டு, தனதைப் போல எங்கும் பதிவிடாதீர்கள்.)



 நன்றி இணையம்