பக்கங்கள்

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச்

 


*கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.*

*⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.*

கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.


இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்

*கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.*


 கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.

 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.

 நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்.

 ஞானம் பெற - சுவாமிமலை.

 கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.

 எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.

 உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.

 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.

 கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.

 இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.

 பெண்கள் ருது ஆவதற்கும்,

ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).

 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.

 நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.

 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம் குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம்

 பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.

 கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.

நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

 

 நன்றி இணையம்