பக்கங்கள்

அப்பாடக்கர் என்ற வார்த்தைக்கு அர்த்தம்…*

 



அப்பாடக்கர் என்ற வார்த்தைக்கு அர்த்தம்…*

அமிர்த்லால் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.

சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்).

தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார்.

நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர்.

பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது.

நன்றி: விக்கிப்பீடியா

 

நன்றி இணையம்