பக்கங்கள்

 

வரி எவ்வளவு கோடிகள் அதிகம் வசூலித்தாலும் ஒரு காசு கூட ஊழல் இல்லை! அத்தனை வருவாயும் நாட்டின் வளர்ச்சிக்கே முழுமையாக பயன்படுத்தப்படுகிறது! என்றோ முழுதாக வளர்ந்திருக்க வேண்டிய எனது இந்திய நாட்டை இனியாவது வல்லரசு நாடாக வளர்ச்சியடைய செய்ய நானும் இந்த சிறு கஷ்டத்தை சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்! இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகமாக நான் வரி கட்டியிருக்கிறேன். சிங்கப்பூர் வளர்ச்சி பெற்ற காரணம் தொடக்கம் முதலே இன்று வரை அதிக வரிகள் விதித்து, அனைவரையும் உழைக்க வைத்து, ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டதாலேயே!

எனது தாத்தா, கொள்ளையடிக்கப்பட்ட அடிமை இந்தியாவில் பிறந்தார்!

எனது அப்பா, சுதந்திரம் பெற்ற வறுமை இந்தியாவில் பிறந்தார்!

நான், ஊழலில் (நா)றிக்கிடந்த இந்தியாவில் பிறந்தேன்!

என் பிள்ளை, நல்ல தலைமை கொண்ட வளரும் இந்தியாவில் பிறந்தான்!

எனது பேரப்பிள்ளைகளாவது வல்லரசு இந்தியாவில் பிறக்கட்டுமேன்னேன்!

என்ன நான் சொல்றது...!!!

ஜெய்ஹிந்த்

 


நன்றி இணையம்