பக்கங்கள்

*இன்னும் இந்தியா அப்படியே இருக்கிறது...*

 




*ராபர்ட் கிளைவ்! அன்று சொன்னது! இன்றும் உண்மையாக இருக்கிறது!*

"ராபர்ட் கிளைவின் வாழ்வினை படித்த பொழுது ஒரு செய்தி நெஞ்சில் தைத்தது!

அவனை லண்டன் பாராளுமன்றத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்கின்றார்கள்,

இந்திய மக்களை தரக்குறைவாக நடத்திநீர்களாமே..?

அரசர்களிடம் லஞ்சம் பெற்றீர்களா?

கிளைவ் சொல்கின்றான்.

"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,

இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது!

நமது அரசு மக்களுக்கு கட்டுபட்ட உரிமை கொண்டமக்களாட்சி....

மக்கள் இங்கே அரசு மீதும் சமூகத்தின் மீதும் பொறுப்பாய் இருக்கின்றார்கள் ..

இந்தியர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை..

ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினை பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிசுமைகள் பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை..

அவர்கள் நினைத்தால் நொடியில் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றமுடியும்,

ஆனால் செய்யமாட்டார்கள்

அவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை..

நாம் இங்கிருந்து சென்று படைக்கு ஆள் திரட்டினால் கூட வருகின்றார்கள்,

நம்மையும் ஆளதகுதி உள்ளோர் என்றே எண்ணுகின்றார்கள்

அவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்..? ஏன் கொஞ்சம் கூட ஆள்பவர் பற்றி கவலையே இல்லை என்பது எனக்கு புரியவில்லை..

நான் சில குற்றங்களை செய்ததாக சொல்கின்றீர்கள்,

ஆனால் இங்கிலாந்தில் தான் இவை குற்றம்..

இந்திய யதார்த்தபடி இது சாதாரணம்..

லஞ்சம், ஊழல் இன்னபிற விஷயங்களை இந்திய அரசர்களும் அவர்களின் தளபதிகளுமே எனக்கு கற்று கொடுத்தார்கள்..

அவர்கள் ஆண்ட வழியில் தான்

நானும் அத்தேசத்து மக்களை நடத்தினேன்,

இந்தியாவில் என்மேல் துளியும் குற்றசாட்டு இல்லை..

இந்தியரை யாரும் ஆளலாம்,

அவர்கள் மனநிலை வேறுமாதிரியானது,

மக்கள் ஆட்சி மாண்பு, மரியாதை எல்லாம் அவர்களுக்கு புரியாது..

எவனும் ஆளட்டும், நான் சந்தோஷமாக வரி கட்டுவேன் என்ற மனநிலையுடைய மக்கள் அவர்கள்,

அதனால்தான் நாம் ஆள்வதும் எளிதாயிற்று..

ஆள்வோர் எவ்வளவு அயோக்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை..

இந்தியரின் வாழ்க்கை முறைப்படி

நான் செய்ததை லண்டனில் விசாரித்து தவறு என சொல்வது ஏற்க முடியாது"..

300 வருடங்களுக்கு முன்பே

இந்திய மக்களை பற்றி கணித்திருக்கின்றான் ராபர்ட் கிளைவ்,

*இன்னும் இந்தியா அப்படியே இருக்கிறது...*


 நன்றி இணையம்