பக்கங்கள்

சிவபெருமான் கொடுத்த சுதந்திரம்.... மறைக்கப்பட்ட வரலாறு....


Image may contain: 2 people
1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.
மௌன்ட்பேட்டன்
நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க, நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து பெறுவது? உடனே மூதறிஞர் ராஜாஜியை அணுகி நான் நாத்திகன் எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும்...
உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது
ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை
புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.
நாமும் அன்னியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.
நேருவும்
நேரம் குறைவாக உள்ளது
உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தறவிட்டார்.
ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் பூசி இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.
ராஜாஜி
அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர் அந்த
சுதந்திர வைபவ தினத்தில் மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று
செங்கோலுக்கு
புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்த்திகள் வேயிறுதோளிபங்கன்
என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி.
"
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."
இந்தவரி பாடி முடிக்கும் போதுதான்
தவத்திரு சுவாமிகள்
செங்கோலை
நேருவிடத்தில் கொடுத்தார்.
அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.
இந்த நிகழ்வு
தமிழுக்கும்
தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை .
இந்த விசயத்தை
பாடப்புத்தகத்தில்
வெளியிட்டு நாடறிய செய்யாமல் சதிசெய்தது யார்
நண்பர்களே
இவ்வளவு
பெருமை வாய்ந்த செய்தியை நாடறிய செய்வோம்.
திருவாவடு துறை
ஆதீனமடத்தில்
செங்கோல் வைபவம்
கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது 


நன்றி இணையம்

மனித மனதின் அலசலில் : உள் முக பயணம்

Image result for மனித மனதின் அலசலில்

நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் குறை கூறும் இயந்திரம் ஒன்று ஓயாமல் செயல்பட்டு கொண்டே இருக்கிறது..

குறை சொல்வது மனிதனின் இயற்கை குணம் என்றே கூறலாம் !
Image result for மனித மனதின் அலசலில்
இது சரியில்லை, அது சரியில்லை என்று சதா கூறிக்கொண்டிருக்கும் நபரின் மனம் முற்றிலும் தவறான விஷயமாக பெரிது படுத்தி காட்டும்.
வீட்டில் குப்பை கூளங்கள் நிறைந்திருப்பதால் வீடே சரியில்லை...

அதில் வாழும் மனிதர்களே சரியில்லை என்பதும்,
ஹோட்டலில் சர்வீஸ் சரியில்லை என்று நிர்வாகியிடம் புகார் கூறுவது..

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின் வாரிய அலுவகத்தில் புகார் கூறுவது..
இன்னும் சற்று வித்யாசமாக குறை கூறும் நபர்களும் உண்டு.

வானிலை பற்றிக் குறை கூறுவது,
இதனால் இயற்கையே தவறு செய்வது போலவும்,
தான் மட்டும் உலகில் நல்லவர் போலவும்..
இந்த அகங்காரம் தன்னையே பெரிதாக நினைக்கிறது !
நம்மால் எதுவுமே செய்ய முடியாதபோது ..

இதுபோல விஷயத்தைப் பற்றிக் குறை சொல்வதால்...
நாம், வெறுப்பு என்ற விதையை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கிறோம் !!

உதிக்கும் சூரியனின் கதிர்களை பார்க்கும்போது ..
புருவத்தை உயர்த்தி.. முகத்தை சுளித்து.. மொத்தத்தில் இந்த ஊரே இப்படித்தான் என்று ஒட்டுமொத்த நகரத்தையே சபிக்க ஆரம்பிக்கிறோம் !

அரசியல் பற்றியும், அரசாங்கம் நடத்தும் ஆட்களைப் பற்றியும் குறை கூறுவது ஏகப்பட்ட அலாதியான இன்பம் நமக்கு ..

இது மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனையாகவே கருதுகிறோம் !

அவர்களைக் குறை கூறத் தெரிந்த நமக்கு ,
நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சற்று குனிந்து நம்மை பார்க்க நேரம் இருப்பதில்லை...

இப்படிக் குறை கூறும்போது நம்முடைய அகங்காரம் பெரிதளவு வளர்ந்து விருட்சம் ஆகிறது !

இன்னும் இறைவனைப் பற்றிய குறை கூறும் படலம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள் !
யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாமல் போகும்போது ...

நம்முடைய குறைகள் இறைவனை நோக்கி திரும்பிகிறது...

இன்னும்,

உறவினர்கள், சக குடும்பத்தினர்கள், சக தொழிலாளர்கள் இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்..

மனிதர்களுடைய அகங்காரத்தால் பார்த்து பார்த்து தயார் செய்யபடும் குற்றங்கள் தான் இந்தக் குறை கூறும் பழக்கம்..

மனிதனின் அகங்காரமானது.. சரி என்றும் தவறு என்றும் வாதிடும் போது ,

அவருடைய அறிவுக் கண்ணை மறைத்து தேடித்தேடி குறை கூறும்...

அது நியாயம் என்றே வெளிப்படுத்தும் !
இந்தக் குறைகளை வெளிப்படுத்துவதே அகங்காரத்தின் வெளிப்பாடு தான்..

குறை கூறும் போது தனது அகங்காரம் திருப்தி அடைகிறது !

இதனால் சமுதாயத்தில்எதற்கெடுத்தாலும் புலம்புவர்என்ற பட்டம் மட்டுமே கிடைக்கும் !
குறைகளை சுட்டிக்காட்டுவதில் மனதிற்கு ஏன் இத்தனை குதூகலம் ....???

இதன் உளவியல் காரணம்தான் என்ன..???
குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனம் எப்போதும் நினைப்பதில்லை.

குற்றங்களைக் கண்டுபிடிப்பதில்.. குறைகளை சுட்டிக்காட்டுவதில்..

மனம் அதீத திறமையுடன் செயல்படுகிறது.
இந்தப் பழக்கத்தால் நமக்குள் என்ன மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்று என்றைக்காவது நினைத்ததுண்டா.....???

குறை சொல்லும் மனதை பொறுத்தவரை மகிழ்ச்சியும் நிம்மதியும் இரண்டாம் பட்சம் தான்.
மனித மனம் எப்போதுமே தன்னை சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும், பெரியதாகவும் காட்டிக்கொள்ளவே ஆசைப்படுகிறது...

மனதின் தேவை இதுதான்.

தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ,

மனமானது என்ன வேண்டுமானாலும் செய்யும் !
எப்போதுமே முழுமை அற்றதாக, தெளிவற்றதாக, திருப்தி அற்றதாக உணரும் அகங்காரத்தின் ஆணிவேர் தான் ..

தானே உயர்ந்தவன்", என்ற சுய முக்கியத்துவத்தை முன்னிலை படுத்தும் !

தன்னை உயர்ந்ததாக வெளிப்படுத்த மற்றவரின் குறைகளை சுட்டிக்காட்டி ,

அவர்களை மட்டம் தட்டும்போது, தானே வென்றாதகவும் நினைத்துக் கொள்கிறது !!

அவர்களுக்குள் இருக்கும் அறியாமை தான் இதுபோல குறைகளை சுட்டிக்காட்டுவதில் வெளிப்படுகிறது !

இந்த பழக்கம் நாளடைவில் பிரிக்க முடியாத பழக்கமும் ஆகிவிடுகிறது..

இதனால் நல்ல விஷயங்களையும் கண்டுணர அவர்களால் முடிவதில்லை !!

இதனால் தம்முடைய வாழ்க்கையே சலிப்புற்றதாக எண்ண வேண்டிய சூழலுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள் !

தங்களுடைய வாழ்வில் திருப்தி இல்லாத மனிதர்கள் தான் பிறருடைய குறைகளை காணுகிறார்கள்...

இந்த உலகில் எந்தக் குறையும் இல்லாத மனிதர்கள் இதுவரை பிறக்கவும் இல்லை,

இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை!!
வாழ்க்கையின் சின்ன சின்ன
விஷயங்களில் கூட ,

நன்றி உணர்வைத் தெரிவிக்கும் போது..
குறை கூறும் பழக்கம் எளிதில் விடுபடும் !!
மனித மனதின் அலசலில் : உள் முக பயணம்
பகிர்வு

நன்றி இணையம்