பக்கங்கள்

மனதை தொட்ட பதிவு

கணவன் மனைவி க்கான பட முடிவு

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!

இன்று ஒரு நாள் மட்டும்....,

"
யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!

அன்றே..,

"
கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!

இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!

"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!

ஆனால் ,
"
ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!

கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!

கதவை தட்டினார்கள்....!!

" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
தொடர்புடைய படம்கணவன் மனைவி க்கான பட முடிவு
ஆனால்,

" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!

" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,

"
கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!

வருஷங்கள் உருண்டோடின....!

"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!

மூன்றாவதாக....,

"பெண் குழந்தை பிறந்தது"......!!

கணவன்...,

"
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,

பெரிய அளவில் செலவு செய்து.....,

" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!

அதற்கு மனைவி ,

"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,

" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!

" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,

" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?

என்று கேட்டாள் .....!!

அதற்கு கணவன்....,

" ரொம்ப நிதானமாக சொன்னான்"......

எதிர்காலத்தில்.....,

" எனக்காக கதவை திறக்க".......,

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என்றான் கர்வத்துடன்....!!!
 
நன்றி இணையம்

குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி?

குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி க்கான பட முடிவு

🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன


எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம்.

அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள்.

ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன.
குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி க்கான பட முடிவு
உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார்.

அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது.

அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

🙈🙉🙊

அதனால் தான் அன்றே சொன்னார்கள்
மனம் ஒரு குரங்கு என்று மிகச் சரியாக சொன்னார்கள்...
நன்றி
🚶🏽‍♂HAROON SB

பாராட்டுக்கு உரிய அமைச்சர் திரு.செங்கோட்டையன்



பாராட்டுக்கு உரிய அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள்
----------------------------------------------------
கடந்த வருடம் இரண்டு பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்வு பெற்று இருந்த நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 1300 அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்தி இந்த வெற்றியை அடைந்து உள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநிலத்தில் யாரு முதல் யாரு ரெண்டு என்றெல்லாம் இருந்ததை மாற்றியதன் விளைவு இந்த முறை ஒரே ஒரு தற்கொலை மட்டுமே நிகழ்ந்து உள்ளது. ஏனெனில் கடந்த கால சம்பவங்களை சிறிது நினைவில் கொள்ள வேண்டும்..
மேலும் ` நான் மருத்துவம் படித்து டாக்டர் ஆகி ஏழைகளுக்கு இலவச சேவை செய்வேன் எனும்
புளித்து போன டயலாக்கை கேட்பதில் இருந்து நம்மை காப்பாற்றி உள்ளார்.
பாட புத்தகங்கள் எளிமையாக டவுன்லோட் செய்யும் விதத்தில் வடிவமைக்க பட்டு உள்ளது. உண்மையில் இவருடைய செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியவை.

Image may contain: 1 person, sunglasses and outdoor
 நன்றி இணையம்